கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரின் மனைவி கர்நாடக சட்டசபைத் தேர்தல் அடுத்த மாதம் நடக்கவுள்ள நிலையில் காங்கிரஸில் இணைந்துள்ளார். அடுத்த மாதம் 10ம் தேதி கர்நாடக மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே மாதம் 13ம் தேதி எண்ணப்பட்டும் முடிவுகள் அன்றைய தினம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. எனவே, இத்தேர்தலில் ஜெயிக்க வேண்டுமென பாஜக, காங்கிரஸ் கட்சிகளிடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. சமீபத்தில், அமித்ஷா, இம்மாநிலத்திற்கு வந்து, அம்மாநில முதலமைச்சர் பசுவராஜ் பொம்மை […]
Continue reading …வரும் 10ம் தேதி கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் கட்சியான பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பாஜக பிரபலங்களும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட காங்கிரஸ் பிரபலங்களும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கர்நாடக மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தனது ஆதரவு என […]
Continue reading …காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் பிச்சைக்காரரை அடித்து அவரிடமிருந்து 20 ஆயிரத்தை பணத்தை அபகரித்து சென்றுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குளித்தலை பகுதியில் 8 ஆண்டுகளாக ராமன் ஜி என்பவர் பிச்சையெடுக்கும் தொழில் செய்து வருகிறார். அவர் அதில் கிடைக்கும் வருமானத்தில் வீட்டு வாடகை மற்றும் குடும்ப செலவு போக சேமித்து வைத்துள்ளார். மது போதையில் மூன்று வாலிபர்கள் அவருடைய வீட்டிற்குள் நுழைந்து அவரையும் அவரது குடும்பத்தினரையும் தாக்கி 20 ஆயிரம் பணத்தை அபகரித்து […]
Continue reading …இன்று டில்லியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் சோனியா காந்தியை சந்திக்க இருப்பதாகவும் பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைப்பது குறித்து அவர் ஆலோசனை செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வரயிருப்பதையொட்டி, பாஜக கூட்டணிக்கு எதிராக ஒரு மெகா கூட்டணியை எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக திட்டமிட்டுள்ளனர். இவ்வாறான ஒரு முயற்சியில் ஈடுபட பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் இன்று டில்லி சென்றுள்ளார். அவர் சோனியா காந்தி உள்பட பல தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் […]
Continue reading …முதலமைச்சர் நிதிஸ்குமாரை சந்தித்த பிறகு ராகுல் காந்தி “நாட்டிற்காக ஒற்றுமையாக போராடுவோம்” என்று பேட்டியளித்துள்ளார். 2024ம் ஆண்டுக்கான பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில், இரண்டுமுறை தொடர்ந்து வெற்றி பெற்ற பாஜக கூட்டணிக்கு எதிராக ஒரு மெகா கூட்டணியை எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக திட்டமிட்டுள்ளனர். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் இன்று டில்லி சென்றிருந்தார். அவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்ளிட்ட பல தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒரே கூட்டணியில் வலுவாக தேர்தலில் போட்டியிட […]
Continue reading …காங்கிரஸ் கட்சி நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்ட திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. சென்னை – கோவை வந்தே பாரத் நிகழ்ச்சியை தொடங்க பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார். அவர் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். தமிழக வரும் பிரதமர் மோடியை எதிர்த்து அவர் செல்லும் இடங்களில் கருப்பு கோடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின் […]
Continue reading …வங்கி ஊழியர் ஒருவரை காங்கிரஸ் எம்.எல்.ஏ. நடுத்தெருவில் பொதுமக்கள் மத்தியில் அடித்த சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ பிரிஹஸ்பத் சிங் வங்கி ஒன்றில் சென்று அங்குள்ள ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். விவசாயிகளின் பணத்தை வங்கி ஊழியர்கள் கையாடல் செய்துவிட்டதாகவும் இதையடுத்து கணக்கு புத்தகத்தை மறைத்துக் கொண்டு தான் கணக்கு கேட்டால் தவறான அணுகுமுறையை கையாண்டதாகவும் அவர் வங்கி ஊழியர்கள் மீது குற்றம் சாட்டினார். இதையடுத்து வங்கி […]
Continue reading …இன்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தோர் நாகர்கோவிலில் உள்ள பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், 2 பேருக்கு மண்டை உடைந்தது. மேலும், சாலைகளில் திரண்ட இரு கட்சியினரும் கற்களை வீசித்தாக்கிக் கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதால் அப்பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளானர். இதுகுறித்து, பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில், “நாகர்கோவில் பாஜக அலுவலகத்தின் மீதும் தொண்டர்கள் மீதும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சேர்ந்த ரவுடிகள் […]
Continue reading …ராகுல் காந்தி “மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் அல்ல, காந்தி” என்று ஆவேசமாக பேட்டியளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராகுல் காந்தி மோடி என்ற வார்த்தையை தவறாக பயன்படுத்தியதற்காக இரண்டு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் சமீபத்தில் அவர் லண்டனில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாராளுமன்றத்தில் பாஜக எம்பிகள் ஆவேசம் அடைந்தனர். இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, “மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் அல்ல, நான் காந்தி. சிறை […]
Continue reading …காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தி 8 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். காங்கிரஸ் கட்சி எம்பி ராகுல் காந்திக்கு தண்டனை காலமான இரண்டு ஆண்டுகள் மற்றும் அதற்குப் பிறகு ஆறு ஆண்டுகள் என மொத்தம் எட்டு ஆண்டுகள் அவர் தேர்தலில் போட்டியிட முடியாது என கூறப்படுகிறது. ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சூழல் உருவாகியுள்ளது காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கு பெரும் […]
Continue reading …