சென்னை,மே 8 ஆவின் வரலாற்றில் இல்லாதவகையில், 34 இலட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து சாதனை படைத்துள்ளது ஆவின் நிர்வாகம். கொரோனா நோய்த் தொற்று காலத்தில் பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையில் இந்த மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக, ஆவின் மேலாண்மை இயக்குநர் மா.வள்ளலார் இ.ஆ.ப வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா நோய்த் தொற்று காலத்தில் தமிழக முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி மக்களுக்கான சேவையில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது ஆவின். இந்த இக்கட்டான நேரத்தில் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் […]