புதுச்சேரி, ,மே 07 திருநங்கைகள் – ஆண்பாலாகவும் இல்லாமல் பெண்பாலாகவும் இல்லாமல் மூன்றாம் பாலினமாக இருப்பவர்கள். அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தான். நம்மோடு இருப்பவர்கள்தான். ஆனால் பொது சமூகத்தில் இருந்து மிகவும் அந்நியப்பட்டு போய் இருக்கின்றார்கள். குடும்பத்தோடும் அன்பான உறவு இல்லை; சமுதாயத்தோடும் தொடர்பு இல்லை. ஒதுக்கப்பட்டுள்ள, ஒதுங்கியுள்ள இந்த திருநங்கைகள் தங்களின் அன்றாட வாழ்வை நடத்துவதற்கே திண்டாடிப் போய் உள்ளனர். அரசாங்கத்தின் பார்வையும் பொது சமூகத்தின் அக்கறையும் இன்னமும் முழுமையாக இவர்கள் மீது படியவில்லை. விளிம்புநிலை மனிதர்களாகவே திருநங்கைகள் தொடர்ந்து வாழ்ந்து […]