தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தேமுதிகவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்குவதாக அதிமுக உறுதி அளித்துள்ளதாகவும், வேட்பாளர் யார் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு சென்றார். கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய எடப்பாடி, பின் பிரேமலதாவுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, “அதிமுக கூட்டணி சார்பில் மார்ச் 24ம் தேதி திருச்சியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற […]
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதி மற்றும் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதிமுக சார்பில் 16 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அவர் அறிவித்தார். அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவிற்கு 5 தொகுதிகளும், புதிய தமிழகம் மற்றும் […]
Continue reading …சமீபத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தேர்தலில் போட்டியிடுபவர்கள் விருப்பமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவித்திருந்தார். ஆனால் இன்னும் ஒருவர் கூட விருப்பமனு கேட்டு வரவில்லை என்பதால் தேமுதிக அலுவலகமே காலியாக உள்ளது. தேமுதிக கட்சி இன்னும் எந்த கூட்டணியில் இணைவது என்ற முடிவை எடுக்க முடியாமல் உள்ளது. அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளிடமும் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டுள்ளது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சமீபத்தில் வரும் வியாழக்கிழமை எந்த கூட்டணியில் இணைவது குறித்து அறிவிப்பை […]
Continue reading …தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து வியாழக்கிழமை அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். தேமுதிக மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை இன்னும் தெளிவுபடுத்தவில்லை. பாஜக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வந்ததாக கூறப்பட்டது. ஆனால் தேமுதிக கேட்கும் தொகுதிகளை பாஜக, அதிமுக கொடுக்க முன் வராததால் இன்னும் கூட்டணி இழுபறி தொடர்கிறது. இதற்கிடையே அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்கும் என்று சொல்லப்படுகிறது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் […]
Continue reading …அதிமுகவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த தேமுதிக, தற்போது பாஜகவுடன் கூட்டணி குறித்து பேச வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. நெருங்கி வரும் மக்களவை தேர்தலுக்காக தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் மிகுந்த தீவிரம் காட்டி வருகின்றன. தேமுதிகவில் தலைவர் விஜயகாந்த் மறைந்த நிலையில் அவரது பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த முறை மாநிலங்களவை சீட் கண்டிப்பாக வேண்டும் என்பதில் பிரேமலதா விஜயகாந்த் உறுதியாக உள்ளார். […]
Continue reading …தேமுதிக வாய்ப்பு கிடைத்தால் திமுகவோ, அதிமுகவோ யாருடனாவது கூட்டணி வைப்போம் என்று தெரிவித்துள்ளது. விரைவில் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரமாகி உள்ளது. திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இத்தேர்தலில் தனித்தனியே களம் காணும், அதிமுகவும், பாஜகவும், பாமக, தேமுதிக உள்ளிட்ட மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தேமுதிக எந்த பக்கம் செல்லும் என்பது இதுவரைக்கும் புரியாத புதிராக […]
Continue reading …தேமுதிக மாவட்ட செயலாளர்கள் பாஜக உடன் கூட்டணி வேண்டாம் என திடீரென எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிர்ச்சியடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. பாஜகவுடன் தேமுதிக அல்லது அதிமுக வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்கும் என்று இரு தரப்பினரிடமும் ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 14 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா தொகுதி கொடுக்கும் அணியுடன் மட்டுமே கூட்டணி என்று பிரேமலதா அறிவித்திருந்தாலும் மூன்று தொகுதிகள் கொடுக்க மட்டுமே பாஜக மற்றும் அதிமுக […]
Continue reading …தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் 14 மக்களவைத் தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்கும் கட்சியுடன் கூட்டணி வைக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் மக்களவைத் தேர்தலையொட்டி மாவட்டச் செயலாளருடன் பிரேமலதா ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம், “தேர்தல் கூட்டணி தொடர்பாக இதுவரை யாரிடமும் பேச்சு வார்த்தை நடத்தவில்லை. 14 மக்களவைத் தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் கொடுக்கும் கட்சியுடன் கூட்டணி வைக்க தயாராக இருக்கிறோம். 2014 […]
Continue reading …தேமுதிக நாடாளுமன்ற கூட்டணி பேச்சுவார்த்தைகள் குறித்த தெளிவாக திட்டமிட்டு செயல்பாட்டில் இறங்கி வருகிறது. மாநில, தேசிய கட்சிகள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்த தீவிரமான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. தமிழக அரசியல் சூழலை பொறுத்த வரை அதிமுக மற்றும் பாஜக கூட்டணி பிளவுப்பட்டதால் ஒரு மும்முனை போட்டி நிலவும் சூழல் உள்ளது. திமுகவிற்கு விசிக, இடதுசாரி கட்சிகளின் ஆதரவு உள்ள நிலையில், தங்களுடன் மற்ற சிறிய கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள அதிமுக, பாஜக […]
Continue reading …பாமக மற்றும் தேமுதிகவிடம் மக்களவை தேர்தலையொட்டி அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவினர் கூட்டணி பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளனர். வருகிற ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான தேதி பிப்ரவரி கடைசி வாரம் அல்லது மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கூட்டணி பேச்சு வார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்ட தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சியுடன் திமுக ஏற்கனவே பேச்சுவார்த்தையை […]
Continue reading …