தமிழகத்தை சேர்ந்த அஜித் கிருஷ்ணன் இஸ்ரோவிலிருந்து முதன்முறையாக ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு செல்ல உள்ள வீரர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். கடந்த காலங்களில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா விண்கலம், நிலவிற்கு சந்திரயான், செவ்வாய்க்கு மங்கள்யான் என பல விண்கலன்களை விண்ணில் ஏவி வல்லரசு நாடுகளுக்கு நிகரான முயற்சிகளை குறைந்த பொருட்செலவில் செய்து காட்டியுள்ளது. அவ்வகையில் இந்தியாவிலிருந்து இஸ்ரோ மூலமாக முதன்முறையாக விண்வெளிக்கு இந்திய […]