தமிழகத்தில் இன்று அனல்காற்றும் மழையும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! சென்னை உள்ளிட்ட 6 மாவட்ட மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் உச்சத்தைத் தொட்டுள்ளது. அதனால் மக்கள் பகல்வேளைகளில் வெளியே செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. மேலும் வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் வியர்வையால் குளிக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் இன்று சென்ன, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, கரூர் ஆகிய மாவட்டங்களில் அனல் காற்று […]