சென்னை : கொரோனா என்கிற கொடூர கிருமி உலகம் முழுக்க கோரத்தாண்டவமாடி மனித குலத்தையே நிலைகுலைய செய்து கொண்டிருக்கின்ற இச்சூழலில் மனிதர்களை மட்டுமல்ல மனிதத்தையும் காக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். கிட்டத்தட்ட இருநூறு நாடுகளை சிதைத்து சீரழித்துக்கொண்டிருக்கும் கொரோனா இந்தியாவை இருபத்தைந்தாவது இடத்திலும் இந்திய ஒன்றியத்திலிருக்கும் தமிழ்நாட்டை இரண்டாவது இடத்திலும் தமிழ்நாட்டில் இருக்கும் சென்னையை முதலிடத்திலும் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. இந்நிலையில் தலைநகரமான சென்னையில் இருந்து தமிழகத்தை ஆளும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் அறத்தோடு […]