Home » Posts tagged with » Netrikkan (Page 13)

நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது; உச்சநீதிமன்றம்!

Comments Off on நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது; உச்சநீதிமன்றம்!

உச்ச நீதிமன்றம் இளநிலை நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் வினாத்தாள் கசிவை தொடர்ந்து இளநிலை நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் பலரும் மனு தாக்கல் செய்திருந்தனர். இம்மனுக்களை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு பரவலாகவும் திட்டமிட்ட ரீதியிலும் நடைபெறவில்லை […]

Continue reading …

ஏலியனுக்கு கோயில் கட்டி வழிபடும் சித்தர்!

Comments Off on ஏலியனுக்கு கோயில் கட்டி வழிபடும் சித்தர்!

ஏலியன் குறித்த நம்பிக்கைகள் மற்றும் கதைகளை பற்றி அவ்வப்போது மக்களிடையே பேச்சுகள் இருந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் சேலத்தை சேர்ந்த நபர் ஒருபடி மேலே சென்று ஏலியனுக்கு கோவில் ஒன்றை கட்டியுள்ளார். விஞ்ஞானிகள் இப்பிரபஞ்சத்தில் பூமி போன்றே உயிரினங்கள் வாழக் கூடிய கிரகங்கள் வேறு பலவும் இருக்கலாம் என்பது நம்பிக்கை கொள்கின்றனர். அதுகுறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஆனால் சரித்திர காலம் தொட்டே வேறு கிரக ஜீவராசிகள் குறித்தும், அவை பூமிக்கு வருவது குறித்ததுமான […]

Continue reading …

பூஜா கேட்கர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டமா?

Comments Off on பூஜா கேட்கர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டமா?

ஐஏஎஸ் பயிற்சி அதிகாரியாக இருந்த பூஜா கேட்கர் தலைமறைவாக இருந்ததாக கூறப்பட்டது. தற்போது அவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. பூஜா கேட்கர் புனேவில் உதவி கலெக்டராக நியமனம் செய்யப்பட்டிருந்தார். கலெக்டரின் அதிகாரத்தில் தலையிடுவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அவர் மோசடி செய்துதான் ஐஏஎஸ் பயிற்சியில் தேர்ச்சி பெற்றுள்ளார் என்ற விபரங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தியபோது பல அதிர்ச்சி தரும் செய்திகள் வெளியாகின. ஐஏஎஸ் தேர்வு எழுதுவதற்கு முன் அவர் தன்னுடைய பெயரை மாற்றி […]

Continue reading …

சதுரகிரி கோயிலுக்கு வந்த சார்பு ஆய்வாளர் மாரடைப்பில் உயிரிழப்பு!

Comments Off on சதுரகிரி கோயிலுக்கு வந்த சார்பு ஆய்வாளர் மாரடைப்பில் உயிரிழப்பு!

சார்பு ஆய்வாளர் ஒருவர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை வனத்துறை மற்றும் காவல்துறையினர் செய்துள்ளனர். சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு திருப்பூர் மாவட்ட சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியம் வருகை தந்திருந்தார். சாமி தரிசனம் செய்ய மலையேறி கொண்டிருந்தபோது பசுகிடை என்ற பகுதிக்கு வந்த போது […]

Continue reading …

9ம் வகுப்பு மாணவர் சக மாணவருடன் வெட்டுக்குத்து!

Comments Off on 9ம் வகுப்பு மாணவர் சக மாணவருடன் வெட்டுக்குத்து!

9ம் வகுப்பு மாணவர் நெல்லை மாவட்டம் விஜய நாராயணம் அருகே உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரிவாளால் தாக்கியதில் தலையில் காயம் ஏற்பட்ட மாணவருக்கு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்கள் இடையே தண்ணீரை சிந்தியதில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், ஒரு கட்டத்தில் வீட்டில் இருந்து சிறிய ரக அரிவாளை எடுத்துச் சென்று சக மாணவரை 9ம் […]

Continue reading …

4 நாட்களுக்கு பின் வயநாடு நிலச்சரிவில் உயிருடன் 4 பேர் மீட்பு!

Comments Off on 4 நாட்களுக்கு பின் வயநாடு நிலச்சரிவில் உயிருடன் 4 பேர் மீட்பு!

4 பேர் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி 4 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களை ராணுவத்தின் உதவியுடன் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. இன்று 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். வடவெட்டி குன்று அருகே 2 பெண்களும், 2 ஆண்களும் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவர்களை மீட்டு ஹெலிகாப்டர் மூலம் ராணுவத்தினர் அழைத்து சென்றனர். தற்போது நால்வரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். வடவெட்டி குன்று பகுதியில் […]

Continue reading …

வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை!

Comments Off on வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை!

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இன்று தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். குறிப்பாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் […]

Continue reading …

உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு நிதியுதவி அறிவிப்பு!

Comments Off on உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு நிதியுதவி அறிவிப்பு!

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் மலைச்சாமி இலங்கை கடற்படையினரின் ரோந்துப்படகு மோதியதில் உயிரிழந்தார். இவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்தார். இதுகுறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், “இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மூக்கையா (வயது 54), முத்துமுனியாண்டி (வயது 57), மலைச்சாமி (வயது 59) மற்றும் இராமச்சந்திரன் (வயது 64) ஆகிய நால்வரும் இன்று அதிகாலை இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகில் சென்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்குவந்த இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப்படகு […]

Continue reading …

பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!

Comments Off on பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!

ஒன்பது கல்வெட்டுகள் திருப்பூர் அருகே கண்டறியப்பட்டுள்ளன. இவை அனைத்தும் 1100 ஆண்டுகள் பழமையானதாம். பல்லடத்தை அடுத்த கோயில் பாளையத்தில் பழமையான தலைக்கீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் குறித்து அழகுமலை ஊராட்சி தலைவர் தூய மணி வெள்ளைச்சாமி கோயில் தர்மகத்தா ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் கொடுத்த தகவலின் பெயரில் திருப்பூர் வீரராஜசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த பொறியாளர் சுகுமார் பொன்னுச்சாமி ஆகியோர் கடந்த ஜூலை 5ம் தேதி ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் ஒரு வட்ட […]

Continue reading …

கேதார்நாத்தில் பயங்கர நிலச்சரிவு?

Comments Off on கேதார்நாத்தில் பயங்கர நிலச்சரிவு?

கேரளாவில் சமீபத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு அதில் 275 பேருக்கும் அதிகமாக உயிரிழந்துள்ளனர். தற்போது அடுத்ததாக கேதார்நாத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு சென்ற 200 யாத்ரீகர்கள் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. நேற்று திடீரென கேதார்நாத்தில் திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டதாகவும் அதனால் கன மழை பெய்ததில் மந்தாகினி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதுகுறித்து தகவலறிந்த மாநில பேரிடர் படை காவல்துறை மற்றும் உள்ளூர் அதிகாரிகள் மீட்பு பணியை களத்தில் இருந்து செய்து வருகின்றனர். […]

Continue reading …