முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை என்பது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம்’ என தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் தமிழ்நாட்டிற்கு எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இது குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு நாட்டின் நிதிநிலை அறிக்கை என்பது இந்தியத் திருநாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் உரிய பங்கினைப் பகிர்ந்தளித்து நாடு முழுவதும் சமச்சீரான வளர்ச்சியை உருவாக்கிட உதவுவதுடன், நாட்டில் வாழும் கடைக்கோடி மனிதர்களின் வாழ்வை மேம்படுத்தும் கொள்கைப் […]
Continue reading …அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக ஊடகங்களில் வரும் தகவல் வதந்தியே என்று மறுப்பு தெரிவித்துள்ளார். இன்று திமுக இளைஞரணியின் 45-வது தொடக்க விழா சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “நான் துணை முதலமைச்சராக போகிறேன் என பத்திரிகைகளில் கிசுகிசுக்களும், வதந்திகளும் வந்துள்ளதாகவும், அதனை நம்பி, நாமும் அந்த இடத்திற்கு துண்டு […]
Continue reading …சென்னை மேயர் பிரியா திமுக அரசால் தொடங்கப்பட்டது என்பதற்காகவே புதிய தலைமைச் செயலகம் உட்பட அதிமுக ஆட்சியில் முடக்கப்பட்ட திட்டங்கள் எத்தனை எத்தனை என்பதை மக்கள் அறிவர் என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில், “திமுக ஆட்சியில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் அம்மா உணவங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்த முதல்வரின் பெருந்தன்மையை பாராட்ட எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மனமில்லை. கட்சி மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு தமிழகத்தின் தனிப் பெருந்தலைவராக, மக்கள் நலன் ஒன்றையே மனதில் வைத்து […]
Continue reading …தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வங்கதேசத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் விரைந்து வழங்கிட வேண்டுமென்று அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “வங்கதேசத்தில் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக தமிழர்கள் சிலர் தாயகம் திரும்ப இயலாமல் அங்கு சிக்கியிருப்பதாக தகவல்கள் வரப்பெற்றுள்ளன. வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரகம் அங்கு உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை கருதி, உள்ளூர் பயணங்களைத் தவிர்க்கவும், அவர்கள் வசிக்கும் […]
Continue reading …எலான் மஸ்க் இந்திய பிரதமர் மோடிக்கு எக்ஸ் தளத்தில் பத்து கோடி பாலோயர்கள் கிடைத்துள்ளதையடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் எலான் மாஸ்க் வாங்கினார். தற்போது அந்த சமூக வலைதளம் உலகின் முன்னணி இடத்தில் உள்ளது. சமூக வலைதளத்தில் பிரபலங்களை பின்தொடர்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்திய பிரதமர் மோடியின் எக்ஸ் கணக்கை பின்பற்றுவோர் எண்ணிக்கை 10 கோடி என உயர்ந்துள்ளது. இந்தியாவில் வேறு எந்த அரசியல்வாதியையும் விட அதிக அளவான […]
Continue reading …நித்தியானந்தா நாளை கைலாசா நாடு எங்குள்ளது என்று அறிவிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பாலியல் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளான நித்தியானந்தா மீது வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன. வழக்கு தொடர்பாக காவல் துறையினர் நித்தியானந்தாவை தேடி வருகின்றனர். கடந்த 2019ம் ஆண்டு அவர் வெளிநாடு தப்பி சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. தமிழக காவல் துறை தொடங்கி தேசிய புலனாய்வு அமைப்பு வரை தேடியும் நித்தியானந்தாவை கண்டுபிடிக்க முடியவில்லை. கைலாசா எனும் […]
Continue reading …பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி ஆம்ஸ்ட்ராங் கொலையின் மூலம் சென்னையில் அரசியல்வாதிகள் பின்னணியில் ராஜாங்கம் நடைபெற்றுக் கொண்டிருந்தது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது என கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பின் நடைபெறும் சம்பவங்கள், காவல் துறையின் நடவடிக்கைகள், கைதுகள், அதனை தொடர்ந்து வரும் செய்திகள் அனைத்தும், இத்தனை காலம் சென்னை மாநகரம் ரவுடிகளின் ராஜ்யத்தில் எவ்வாறு இருந்து வந்தது என்பதை தெளிவாக்குகிறது. அரசியல் போர்வையில், அரசியல்வாதிகளின் பின்னணியில் இந்த ராஜாங்கம் நடைபெற்றுக் […]
Continue reading …செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் உலக செஸ் தினத்தன்று தமிழ்நாட்டில் மாநில அளவிலான செஸ் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, தனது கையெழுத்திட்ட செஸ் போர்டுகளை அன்பளிப்பாக வழங்கினார். தமிழ்நாடு இந்தியாவில் அதிகளவில் கிராண்ட் மாஸ்டர்களைக் கொண்ட, உலக செஸ் போட்டிகளில் பெரிதளவில் பங்குபெறும் வீரர்களை உருவாக்கும் மாநிலமாக சிறந்து விளங்குகிறது. தமிழக கிராண்ட் மாஸ்டர்களான பிரக்ஞானந்தா, அவரது சகோதரி வைஷாலி, குகேஷ் மற்றும் பல தமிழக வீரர்களின் சாதனைகள் இந்தியாவிற்கு தொடர்ந்து […]
Continue reading …பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலையிடம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி உள்ளார். அவரிடம் விடிய விடிய விசாரணை நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது புழல், அரக்கோணம், திருநின்றவூர் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூரில் பொன்னை பாலு உள்ளிட்டோருடன் அஞ்சலை சதி ஆலோசனை செய்துள்ளார். கொலையாளிகளுக்கு அஞ்சலை பணம் கொடுத்தது தெரிய வந்துள்ளதால் அவரது 2 வங்கிக் கணக்கு விவரங்களை போலீசார் திரட்டி வருகின்றனர். மேலும் ஆம்ஸ்ட்ராங்கை கொன்றுவிட்டால் வடசென்னையில் ஆதிக்கம் செலுத்தலாம் என பொன்னை பாலுவை அஞ்சலை மூளைச் […]
Continue reading …இந்திய ராணுவம் காஷ்மீரில் பயங்கரவாதிகளை வேட்டையாட சிறப்பு பயிற்சி பெற்ற 500 கமாண்டோ படை வீரர்களை களமிறக்கி உள்ளது. தொடர்ந்து இந்திய ராணுவ வீரர்கள் மீது காஷ்மீரில் பதுங்கி உள்ள பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறது. சமீபத்தில் ராணுவ வீரர்களின் மரணம் அதிகரித்து வருகிறது. ஜம்மு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. காஷ்மீரில் பயங்கரவாதத்தை மீண்டும் தூண்டிவிடவும், தாக்குதல் நடத்தவும் பாகிஸ்தானில் நன்கு பயிற்சி பெற்ற 55 பயங்கரவாதிகள் […]
Continue reading …