Home » Posts tagged with » Netrikkan (Page 20)

காருக்குள் வைத்து மனைவி, மாமியாரை கொன்ற கணவன்!

Comments Off on காருக்குள் வைத்து மனைவி, மாமியாரை கொன்ற கணவன்!

காருக்குள் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மாமனார், மாமியார், மனைவி என எல்லாரையும் காருக்குள் வைத்தே கொன்று விட்டு கணவர் தலைமறைவாகி உள்ளார். கர்நாடக மாநிலத்தின் யாதகிரி மாவட்டத்தில் உள்ள முனகல் கிராமத்தை சேர்ந்த நவீனும் தாவணகெரே பகுதியை சேர்ந்த அண்ணபூரணியும் காதலித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அடிக்கடி கணவன் – மனைவி இடையே சண்டை, வாக்குவாதங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சில மாதங்கள் முன் அன்னபூரணி […]

Continue reading …

மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை!

Comments Off on மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை!

வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடந்துள்ளது. இதில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களால் இதுவரை 17 பேர் பலியாகியுள்ளனர். வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்திற்கு அரசு வேலையில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் அமலில் உள்ளது. ஆனால் இதில் முறைகேடுகள் நடைபெறுவதாக நடந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இந்த இடஒதுக்கீட்டை ரத்து செய்தது. ஆனால் இதுகுறித்த மேல்முறையீட்டில் அந்நாட்டு உச்சநீதிமன்றம் இட ஒதுக்கீட்டிற்கு மீண்டும் அனுமதி அளித்தது. இதை எதிர்த்து மாணவ அமைப்புகள், எதிர்கட்சிகள் […]

Continue reading …

மாரிசெல்வராஜ் உருக்கமான பேச்சு!

Comments Off on மாரிசெல்வராஜ் உருக்கமான பேச்சு!

மாரிசெல்வராஜ் “பரியேறும் பெருமாள்” திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அப்படத்தின் வெற்றியை அடுத்து தனுஷ் நடித்த “கர்ணன்,” உதயநிதி ஸ்டாலின் நடித்த “மாமன்னன்” ஆகிய படங்களை இயக்கியுள்ளார். கடந்த ஆண்டு “மாமன்னன்” திரைப்படம் ரிலீசாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மாரி செல்வராஜ் ‘வாழை’ என்ற தன்னுடைய அடுத்த படத்தை இயக்கி முடித்துள்ளார். இத்திரைப்படத்தில் கலையரசன் கதாநாயகனாக நடித்துள்ளார். ஹாட்ஸ்டார் நிறுவனத்துக்காக மாரி செல்வராஜே இந்த படத்தை தயாரித்துள்ளார். இத்திரைப்படம், மாரி செல்வராஜ் தான் சிறுவயதில் எதிர்கொண்ட ஒரு […]

Continue reading …

விடாமுயற்சி அப்டேட் உறுதி!

Comments Off on விடாமுயற்சி அப்டேட் உறுதி!

“விடாமுயற்சி” படத்தில் அஜீத் நடித்துக் கொண்டிருக்கிறார். திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று இந்த படத்தின் முக்கிய அப்டேட் வெளியாக இருப்பதாக ஏற்கனவே செய்திகள் கசிந்தது. சற்றுமுன் அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் “விடாமுயற்சி” அப்டேட் இன்று மாலை 5.05 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளார். “விடாமுயற்சி” திரைப்படத்தில் அஜித், திரிஷா மற்றும் பலர் நடித்துள்ளனர். மகிழ் திருமேனி இயக்கத்தில் அனிருத் இசையில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வருகிறது. இந்த […]

Continue reading …

அம்மா தற்கொலைக்கு பழிக்கு பழி!

Comments Off on அம்மா தற்கொலைக்கு பழிக்கு பழி!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கமலேஸ்வரி, சுரேஷ்குமார் தம்பதியினர். சுரேஷ்குமார் நெல்லிக்குப்பத்திலுள்ள இஐடி சர்க்கரை ஆலையில் மருந்தாளுனராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு 70 வயதான நிலையில் உடல்நலமின்றி கடந்த 6 மாதங்களுக்கு முன் உயிரிழந்தார். இவர்கள் நெல்லிக்குப்பம் அருகே உள்ள காராமணிக்குப்பம் ராஜாராம் நகரில் வாடகை வீட்டில் பல ஆண்டுகளாக வசித்து வந்தனர். தற்போது […]

Continue reading …

சட்டப்பேரவை கூட்டத்தின் நேரங்களில் மாற்றமா?

Comments Off on சட்டப்பேரவை கூட்டத்தின் நேரங்களில் மாற்றமா?

காலை 9.30 மணிக்கு இனி வரும் நாட்களில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கும் என்று சட்டசபை விதிகள் குழுவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை கூட்டம் வழக்கமாக காலை 10 மணிக்கு தொடங்கும். ஆனால், கடந்த மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடர் காலை 10 மணிக்கு பதிலாக 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணிக்கு முடிவடைந்தது. மாலையில் 5 மணி முதல் இரவு 8 மணி வரை பேரவை கூட்டம் நடத்தப்பட்டது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் […]

Continue reading …

கவின் படத்தின் ஷூட்டிங் நிறுத்த அனிருத் காரணமா?

Comments Off on கவின் படத்தின் ஷூட்டிங் நிறுத்த அனிருத் காரணமா?

நடிகர் கவின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். பின் பெரியத்திரையில் கவனம் செலுத்திய அவர் “லிப்ட்” மற்றும் “டாடா” உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். இதையடுத்து அவர் கவனிக்கப்படும் நடிகராக மாறியுள்ளார். கவின், இப்போது தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களின் விருப்ப நடிகர்களில் ஒருவராகியுள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், நடன இயக்குனர் சதீஷ் இயக்குனராக அறிமுகமாகும் “கிஸ்” என்ற படத்தில் கவின் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த மூன்று […]

Continue reading …

ஓமன் கடலில் கவிழ்ந்த கப்பலில் இருந்த இந்தியர்களின் நிலை என்ன?

Comments Off on ஓமன் கடலில் கவிழ்ந்த கப்பலில் இருந்த இந்தியர்களின் நிலை என்ன?

ஓமன் கடலில் எண்ணெய் கப்பல் கவிழ்ந்ததை அடுத்து அதிலிருந்து 13 இந்தியர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. நேற்றிரவு ஓமன் கடலில் திடீரென எண்ணெய் கப்பல் கவிழ்ந்ததாகவும் அந்த கப்பலில் பணியாற்றிய இந்தியர்கள் 13 பேர் உட்பட 16 பேர்களை காணவில்லை என்றும் அவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஓமன் நாட்டில் கடல் பகுதியில் கவிழ்ந்த கப்பல் மூழ்கி விட்டதாகவும் இந்த கப்பலில் இந்தியாவைச் சேர்ந்த 13 பேர் மற்றும் இலங்கை சேர்ந்த மூன்று […]

Continue reading …

சமயபுரம் பாத யாத்திரையில் விபத்தில் 5 பேர் பலி!

Comments Off on சமயபுரம் பாத யாத்திரையில் விபத்தில் 5 பேர் பலி!

சரக்கு வாகனம் ஒன்று சமயபுரத்திற்கு பாத யாத்திரையாக சென்ற பெண்கள் மேல் மோதி பலியாகி உள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அம்மன் கோவில்களில் ஆடி மாதம் என்றாலே பெண்கள் செல்வது வாடிக்கையாக உள்ளது. அவ்வாறாக பல பக்தர்களும் திருச்சி சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு வேண்டிக் கொண்டு பாதயாத்திரையாக செல்வது வழக்கம். அவ்வாறாக சில பக்தர்கள் சமயபுரத்திற்கு பாதயாத்திரையாக நடந்து சென்றுக் கொண்டிருந்துள்ளனர். தஞ்சாவூர் அருகே வளம்பகுடி பகுதி சாலையில் நடந்து சென்றுக் கொண்டிருந்தனர். […]

Continue reading …

ரேஷன் பொருட்கள் விலை உயர்கிறதா?

Comments Off on ரேஷன் பொருட்கள் விலை உயர்கிறதா?

பல பொருட்கள் மக்களுக்கு குறைந்த விலையில் தமிழ்நாட்டில் ரேசன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. சில பொருட்களில் விலை உயர வாய்ப்புள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம சிறப்பு விநியோக திட்டத்தின் கீழ் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றை அரசு வெளிச்சந்தையில் அதிக விலைக்கு வாங்கி ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு குறைந்த விலையில் அளிக்கிறது. கடந்த 2007ம் ஆண்டு முதல் பருப்பு, பாமாயில் வழங்கப்பட்டு வருகிறது. அன்றிலிருந்தே […]

Continue reading …