நாளை ஆன்லைனில் திருப்பதியில் அக்டோபர் மாதம் தரிசனம் செய்ய டிக்கெட் வழங்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளதால் பக்தர்கள் டிக்கெட்டுகளை புக் செய்ய தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளலாம். அவ்வகையில் அக்டோபர் மாதம் தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆன்லைனில் நாளை அதாவது ஜூலை 18ம் தேதி பத்து மணிக்கு வெளியிட உள்ளது. ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட் குலுக்கல் முறையில் வெளியாக […]
Continue reading …கர்நாடக சட்டமன்றத்தில் கர்நாடகாவில் தனியார் நிறுவனங்களிலும் 100 சதவீதம் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான மசோதாவை நேற்று நிறைவேற்றியுள்ளனர். சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கர்நாடகாவில் நடந்து வருகிறது. கர்நாடகாவில் உள்ள வேலைவாய்ப்புகள் கன்னடர்களுக்கே முழுவதுமாக கிடைக்க வேண்டும் என்று நீண்ட காலமாகவே மக்கள் கூறி வருகின்றனர். தனியார் துறைகளில் மற்ற மாநிலத்தவரை விட கன்னடர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. இது தொடர்பாக நேற்று கர்நாடக சட்டமன்றத்தில் கன்னடர்களுக்கு கட்டாய வேலைவாய்ப்பு வழங்குவதற்கான […]
Continue reading …“மூக்குத்தி அம்மன்” கடந்த 2020ம் ஆண்டு ரிலிசான படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படத்தில் நயன்தாரா மூக்குத்தி அம்மனாகவும், ஆர் ஜே பாலாஜி மற்றும் ஊர்வசி உள்ளிட்டோர் மற்ற கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர். ஆர் ஜே பாலாஜியுடன் இணைந்து என் ஜி சரவணன் இயக்கியிருந்தார். ஆர் ஜே பாலாஜி “மூக்குத்தி அம்மன்” இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கு “மாசானி அம்மன்” என பெயர் வைத்து வேலையை ஆரம்பித்துள்ளனர். இதற்கிடையில் வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் நயன்தாராவை வைத்து […]
Continue reading …ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி இருக்கும் திரைப்படம் “இந்தியன் 2’. இத்திரைப்படம் உலகெங்கும் 5000க்கும் மேற்பட்ட திரைகளில் ஜூலை 12 ரிலீசானது. படம் ரிலீசானதிலிருந்து படத்துக்குக் கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. முக்கியமாக வழவழ என்று நீளும் நீண்ட சொற்பொழிவுக் காட்சிகள் இன்றைய ரசிகர்களை அதிருப்தியடைய வைத்துள்ளது. முதல் நாளில் படத்துக்கு நல்ல ஓப்பனிங் கிடைத்தது. ஆனால் அடுத்த நாளே வசூல் படுத்துவிட்டது. […]
Continue reading …கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் கார்த்தி நடித்து வரும் ‘சர்தார்-2’படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. படத்தின் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டதால் ஒருவர் உயிரிழந்ததாக செய்தி வெளிவந்துள்ளது. பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கார்த்திக் நடிப்பில் உருவான சர்தார் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்தது. இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. திடீரென இன்று நடந்த சண்டைக் […]
Continue reading …600 காலியிடங்களுக்கு ஏர் இந்தியா நிறுவனத்தில் ஆட்கள் தேவை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பணிக்காக 25 ஆயிரம் பேர் குவிந்தனர். குஜராத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் 10 பணியிடங்களுக்கு 1,800 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். ஒரே நேரத்தில் அனைவரும் வருகை தந்து முண்டியடித்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி வேலையில்லா திண்டாட்டத்தில் நிலைமையை வெளிச்சம் போட்டு காட்டியது. தற்போது மும்பையில் உள்ள ஏர் இந்தியா நிறுவனத்தில் 600 பணியிடங்களுக்கான காலியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது.இந்த பணிக்காக […]
Continue reading …சதுரகிரி மலைக்கு ஆடி மாதம் பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் தினங்களில் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் ஏராளமானோர் வருவது உண்டு. அவ்வகையில் ஆடி மாதம் பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு ஜூலை 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை நான்கு நாட்கள் பக்தர்கள் மலையேற வனத்துறை அனுமதி அளித்துள்ளது. பக்தர்கள் இரவில் கோவிலில் […]
Continue reading …நீதிபதி அல்லி செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூலை 18ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 47வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி கரூர் சிட்டி யூனியன் வங்கியில் உள்ள கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை வழங்க உத்தரவிடக்கோரி தரப்பில் தாக்கல் செய்யபட்ட மனுவை விசாரித்த நீதிபதி அல்லி, கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை செந்தில்பாலாஜி தரப்பிற்கு வழங்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார். இதன் அடிப்படையில், செந்தில் பாலாஜி நீதிபதி […]
Continue reading …கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் மேகதாது அணை கட்ட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். கர்நாடக அரசு காவிரியின் குறுக்கு மேகதாதுவில் அணை கட்ட முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்திற்கு வரும் தண்ணீர் தடுக்கப்படும் என்றும் அணைக்கட்டு அனுமதி அளிக்க கூடாது என்று மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. மேகதாது அணை கட்ட தமிழக அரசு […]
Continue reading …ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தோடா பகுதியில் ஹெலிகாப்டர்கள் மூலம் பயங்கரவாதிகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீரின் வடக்கு தோடாவிலுள்ள தேசா வனப்பகுதியில் உள்ள தாரி கோடே உரார்பாகியில் பயங்கரவாதிகள் இருப்பதாக தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ராஷ்டிரிய ரைபிள்ஸ் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிசூடு நடந்தது. அதில், 5 பாதுகாப்பு […]
Continue reading …