77 குற்றவாளிகள் சென்னையில் இரண்டு நாட்களில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கடந்த 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக சென்னை காவல் ஆணையராக இருந்த சந்திப்ராய் ரத்தோர், அதிரடியாக மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி-ஆக இருந்த அருண், சென்னை புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். தனது முதல் பேட்டியிலேயே […]
Continue reading …டிசம்பர் 6, 2024 அன்று அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2: தி ரூல்’ திரைப்படம் வெளியாவதை இந்திய திரையுலகமும் ரசிகர்களும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர். படம் பற்றிய சின்ன சின்ன அப்டேட் கூட ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்து வருகிறது. சமீபத்திய நேர்காணல் ஒன்றில் ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பாளர் கே.இ. ஞானவேல் ராஜா, ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் தியேட்டர் அல்லாத இந்தி வியாபாரம் ரூ.250 கோடிக்கு நடந்துள்ளதாக கூறியிருக்கிறார். இதில் ஓடிடி, சேட்டிலைட் மற்றும் ஆடியோ […]
Continue reading …நாளை மற்றும் நாளை மறுதினம் சென்னை மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக மடிப்பாக்கம் பிரதான சாலை, மேடவாக்கம் பிரதான சாலை சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில், “எஸ்.7 மடிப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மடிப்பாக்கம் பிரதான சாலை மற்றும் மேடவாக்கம் பிரதான சாலை சந்திப்பில் கேஈசி நிறுவனத்தினர் சென்னை மெட்ரோ இரயில் பணிகளை மேற்கொள்ள உள்ளதால் 13.07.2024 மற்றும் 14.07.2024 ஆகிய இரண்டு நாட்களுக்கு சோதனை அடிப்படையில் பின்வருமாறு போக்குவரத்து […]
Continue reading …இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவரின் பெயர் மருத்துவ பணியில் ஆற்றிய சேவைகளைப் பாராட்டும் விதமாக அபுதாபியில் உள்ள ஒரு சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது. கேரளாவில் பிறந்த ஜார்ஜ் மேத்யூ, திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். இவருக்கு திருமணமாகி வல்சா என்ற மனைவியும், மர்யம் என்ற மகளும் உள்ளனர். கடந்த 1967-ம் ஆண்டு டாக்டர் மேத்யூ குடும்பத்துடன் அமீரகத்தில் உள்ள அல் அய்ன் பகுதியில் குடியேறினார். அதன்பின், அங்குள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றிய முதல் இந்திய டாக்டர் […]
Continue reading …மதிமுக பொதுச்செயலாளர் வைகோ காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்தாத கர்நாடக மாநிலத்தின் அநீதியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “காவிரி மேலாண்மை ஆணையத்தின் 31-ஆவது கூட்டம், அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டில்லியில் ஜூன் 25ம் தேதி நடைபெற்றது. அப்போது தமிழக அரசின் தரப்பில், “தற்போது மேட்டூர் அணையில் 12.490 டிஎம்சி நீர் இருப்பில் உள்ளது. குடிநீர் தேவை மற்றும் சுற்றுச்சூழல் […]
Continue reading …அமைச்சர் முத்துச்சாமி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நுழைவாயிலை திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் சார்பில் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1048 பயனாளிகளுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வைப்பு நிதி பத்திரத்தை வழங்கினார். பின் செய்தியாளர்களிடம், “கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 2.49 கோடி மதிப்பில் 5 கட்டிடங்கள் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இரண்டு பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு […]
Continue reading …“மூக்குத்தி அம்மன்” படம் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளியை முன்னிட்டுதில் ஓடிடியில் ரிலிசான மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. படத்தில் நயன்தாரா மூக்குத்தி அம்மனாகவும், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் ஊர்வசி உள்ளிட்டோர் மற்ற கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர். ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்து என் ஜி சரவணன் இயக்கியிருந்தார். இந்த படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியான மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முழுக்க முழுக்க காரணம் நயன்தாராதான் என்றால் அது மிகையாகாது. சமீபகாலமாக ஆர்.ஜே.பாலாஜியின் படங்கள் எதுவும் […]
Continue reading …கணவன் தனது மனைவிடம் துர்நாற்றம் வீசுகிறது குளித்து விட்டு வா என்று கூறியுள்ளார். முடியாது எனக் கூறிய மனைவியை கணவன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார். இவ்வழக்கில் கணவருக்கு 226 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணத்தில் ஸ்டீபன் தனது மனைவி வெரோனிகா வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு வந்தபோது துர்நாற்றமாக இருந்ததால் குளிக்கும் படி கூறியுள்ளார். ஆனால் அவரது மனைவி மறுத்துவிட்டார். அதனால் ஆத்திரமடைந்த ஸ்டீவன் துப்பாக்கியை எடுத்து மனைவியை சுட்டுக் கொன்று […]
Continue reading …11 வட்டாட்சியர்கள் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், வானபுரம், கல்வராயன் மலை ஆகிய பகுதிகளில் இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அதிரடி உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 66 பேர் உயிரிழந்தனர். சிலர் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள சாராய குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இது தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி போலீசார் […]
Continue reading …சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே சென்னை எழும்பூர் பணிமனையில் கால்வாய் அமைக்கும் பணி காரணமாக நாளை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை எழும்பூர் பணிமனையில் கால்வாய் அமைக்கும் பணி நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மதுரையில் இருந்து டில்லி செல்லும் தமிழ்நாடு சம்பர்க் கிராண்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்-12651) நாளை முதல் செங்கல்பட்டு, மேல்பாக்கம், […]
Continue reading …