நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் திடீரென கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சற்றுமுன் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சாட்டை துரைமுருகனை கைது செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சாட்டை துரைமுருகன் விமர்சனம் செய்துள்ளார். இதையடுத்து தமிழக அரசையும் தரக்குறைவாக விமர்சனம் செய்துள்ளார். இதன் அடிப்படையில் எழுந்த புகாரின் பேரில் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. […]
Continue reading …திமுக தகவல் தொழில்நுட்ப அணியினருக்கு கைப்பேசிகளை அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பி.ராஜா வழங்கினர். திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு தொகுப்புகளை தயாரித்து வெளியிடுதல், டுவிட்டர், முகநூல் (பேஸ்புக் ), யூடியூப், ரீல்ஸ், தொடங்குதல், 100 இளைஞர்களுக்கு வலைதள வசதியுடன் கூடிய கைப்பேசி வழங்கும் நிகழ்வு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் குட்டிமணி, தமிழரசன் ஆகியோர் […]
Continue reading …“விடாமுயற்சி” திரைப்படம் நடிகர் அஜீத் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி பொருளாதார காரணங்களால் தாமதமாகி வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் அஜீத் நடித்து வருகிறார். படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் ஷூட்டிங் திட்டமிடப்பட்டதை விட முன்பே தொடங்கி தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது. ஐதராபாத்தில் நடந்த முதல் கட்ட ஷூட் நிறைவடைந்துள்ளது. அடுத்த […]
Continue reading …சில தினங்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் “கூலி” படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் தொடங்கியது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். படம் ஒரு மல்டி ஸ்டார் படமாக உருவாகி வருவதால் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். சத்யராஜ், பஹத் பாசில், ஸ்ருதிஹாசன் ஆகியோர் இதுவரை ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. பாலிவுட் மற்றும் டோலிவுட் நடிகர்கள் சிலரும் படத்தில் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் பஹத் பாசிலும் ஒருவராக […]
Continue reading …கடந்த 2018ம் ஆண்டு மலையாளத்தில் உருவாகி மிகப்பெரிய வெற்றிப்பெற்ற திரைப்படம் டோவினோ தாமஸ் நடித்த “2018.” கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை ஒட்டி இந்த படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஜூட் ஆண்டனி. படம் சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்து மலையாள சினிமாவின் அதிகபட்ச வசூல் செய்த படமாக உருவாகியுள்ளது. இந்தியா சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட இந்த படம் ஆஸ்கர் விருதின் பட்டியலில் 15 படங்கள் அடங்கிய இறுதிப் பட்டியலில் தேர்வாகவில்லை. இந்த படத்தின் இயக்குனர் […]
Continue reading …அரசு முறை பயணமாக பிரதமர் மோடி ரஷ்யா சென்றார். அங்கு அவர் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டதோடு அதிபர் புதினுடன் முக்கிய பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். ரஷ்ய சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு அவர் இன்று ஆஸ்திரியா நாட்டிற்கு சென்று உள்ளார். அந்நாட்டில் அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இரண்டு நாள் ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டு, மாஸ்கோவிலிருந்து ஆஸ்திரியாவிற்கு இன்று காலை பிரதமர் மோடி சென்றுள்ளார். அலெக்சாண்டர் வான்டர் பெல்லன் மற்றும் பிரதமர் கார்ல் […]
Continue reading …நடிகர் கார்த்தி மே 25ம் தேதி நடிகர் கார்த்தி தனது 47வது பிறந்தநாளை கொண்டாடினார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுதும் இரத்த தானம் முகாம்கள் நடைபெற்றது. இரத்த தானம் செய்தவர்களில் முதற்கட்டமாக வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கள்ளக்குறிச்சி, திருவாரூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 200 ரசிகர்களை நடிகர் கார்த்தி ஞாற்றுக்கிழமை அன்று நேரில் சந்தித்தார். சென்னை தியாகராய நகரில் இரத்த தானம் செய்தவர்களுக்கு நடிகர் கார்த்தி சான்றிதழ் வழங்கி, விருந்தளித்தார். இரத்த […]
Continue reading …சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தனுஷ் அவரது 50வது படமான “ராயன்” திரைப்படத்தை அவரே இயக்கியுள்ளார். படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன் மற்றும் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் ஜூலை 26ம் தேதி ரிலீசாகிறது. படத்தின் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றுள்ளன. விரைவில் படத்தின் டிரெயிலர் ரிலீசாகும் என்று கூறப்படுகிறது. படம் சமீபத்தில் சென்சார் செய்யப்பட்டுள்ளது. படத்துக்கு ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. படத்தில் வன்முறைக் காட்சிகள் […]
Continue reading …‘தங்கலான்’ திரைப்படம் நடிகர் விக்ரம் நடிப்பில், இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வருகிறது. விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் படத்தின் டிரெயிலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இரண்டு நிமிடங்களுக்கு மேல் உள்ள இந்த டிரெயிலரில் விக்ரமின் அட்டகாசமான தோற்றம் மற்றும் ஆவேசமான நடிப்பு, ஆங்கிலேயர் கால கட்டத்தில் நடக்கும் கதை, மாளவிகா மோகனின் ஆக்ரோஷமான சூனியக்காரி கேரக்டர், ஏழை மளிகை மக்களின் அப்பாவித்தனமான உழைப்பு, தங்கம் எடுப்பதற்காக உயிரையே பணயம் வைக்கும் மக்கள், தங்கம் […]
Continue reading …இன்று நீதிமன்றம் கமல்ஹாசன் நடித்த “இந்தியன் 2” திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக இருக்கும் நிலையில் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. ராஜேந்திரன் என்பவர் “இந்தியன்” படம் உருவாக்கும் போது கமல்ஹாசனுக்கு வர்மக்கலையை கற்றுக் கொடுத்தார் என்றும் அதற்காக அவரது பெயரும் அப்படத்தின் டைட்டிலில் இடம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ராஜேந்திரன் கற்றுக்கொடுத்த வர்மக்கலையை “இந்தியன் 2” படத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக தன்னிடம் அனுமதி வாங்கவில்லை என்று ராஜேந்திரன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த […]
Continue reading …