Home » Posts tagged with » Netrikkan (Page 34)

கோயம்பேட்டில் வணிக மைய திட்டத்தை கைவிட அன்புமணி கோரிக்கை!

Comments Off on கோயம்பேட்டில் வணிக மைய திட்டத்தை கைவிட அன்புமணி கோரிக்கை!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் வணிக மையம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, உடற்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் சென்னையின் மிகப்பெரிய பூங்காவை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் அறிக்கையில், “சென்னை கோயம்பேட்டில் புறநகர் பேருந்து நிலையம் உள்ளிட்ட கட்டமைப்புகள் அமைந்திருக்கும் இடத்தில் சென்னை மாநகரின் மிகப்பெரிய பூங்காவை அமைக்க வேண்டும் என்று பசுமைத்தாயகம் அமைப்பு வலியுறுத்தி வரும் நிலையில், அந்த இடத்தில் […]

Continue reading …

சந்திரபாபு நாயுடு மீது ஜெகன்மோகன் பாய்ச்சல்!

Comments Off on சந்திரபாபு நாயுடு மீது ஜெகன்மோகன் பாய்ச்சல்!

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலக கட்டிடம் ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயவாடாவில் கட்டப்பட்டு வந்தது. இக்கட்டிடம் தற்போது இடித்து தள்ளப்பட்டுள்ளது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சந்திரபாபு நாயுடுவின் பழிவாங்கும் அரசியல் என குற்றம் சாட்டியுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் சீதா நகரில் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு சொந்தமான படகு இல்லம் உள்ளது. கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் படகு இல்லம் இடிக்கப்பட்டு அங்கு பிரம்மாண்ட முறையில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி அலுவலகம் கட்டும் பணி நடந்து வந்தது. […]

Continue reading …

கள்ளச்சாராயம் தொடர்பாக தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!

Comments Off on கள்ளச்சாராயம் தொடர்பாக தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!

சென்னை உயர்நீதிமன்றம் கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வந்தும் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது. அ.தி.மு.க. சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை கோரி வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் குமரேஷ் ஆகியோர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விழுப்புரம், மரக்காணம் சம்பவத்திற்கு பிறகு கள்ளச்சாராய விற்பனையை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? எடுக்கப்பட்ட நடவடிக்கை […]

Continue reading …

கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து அண்ணாமலையின் திடுக் தகவல்!

Comments Off on கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து அண்ணாமலையின் திடுக் தகவல்!

அண்ணாமலை, கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு முன்னாள் எஸ்பிக்கு விடுத்த மிரட்டல் தான் காரணம் என்றும், அவர் விருப்ப ஓய்வில் சென்றதால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து அவர், “கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்தவர் மோகன்ராஜ். அவர் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரியில் பொறுப்பேற்றதிலிருந்தே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனையைக் கட்டுப்படுத்துவதில் உறுதியாக இருந்தார். அவரது பதவிக் காலத்தில், பல இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன. பலர் கைது செய்யப்பட்டனர். […]

Continue reading …

நான் ஓடி ஒளிபவன் அல்ல; முதல்வர் ஸ்டாலின்!

Comments Off on நான் ஓடி ஒளிபவன் அல்ல; முதல்வர் ஸ்டாலின்!

இன்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “கள்ளச்சாராயத்தால் பெற்றோரை இழந்தோருக்கு உயர்கல்வி வரை படிப்பு செலவை அரசே ஏற்கும், பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தியடையும் வரை பராமரிப்புத் தொகையாக மாதம் ரூ.5000 வழங்கப்படும், 5 லட்சம் வைப்பு நிதி வழங்கப்படும்” என்று உறுதியளித்துள்ளார். சட்டசபையில் இன்று கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட […]

Continue reading …

திமுக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்!

Comments Off on திமுக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிச்சாமி, “கள்ளச்சாராயம் குடித்து 50 பேர் உயிரிழந்து குறித்து பேச சபாநாயகர் அனுமதி மறுக்கப்பட்டு விட்டது. சபாநாயகர் நடுநிலையுடன் செயல்படவில்லை, சட்டசபையில் மக்கள் பிரச்னை பற்றி பேச அனுமதி மறுக்கப்படுகிறது. நெஞ்சை பதற வைக்கும் மரணம் குறித்து பேசாவிட்டால் எம்எல்ஏ-ஆக தேர்வு செய்யப்பட்டதற்கே அர்த்தம் இல்லாமல் போய் விடும். சட்டசபையில் […]

Continue reading …

மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற தடை!

Comments Off on மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற தடை!

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்றுவதற்கான தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலை எஸ்டேட்டில் 700 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மாஞ்சோலை தேயிலை தோட்டத்துக்கான குத்தகை காலம் முடிவடைவதற்கு முன்பாகவே பிபிடிசி நிறுவனம் தேயிலை தோட்ட தொழிலாளர்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் ஆகஸ்ட் 7-க்கு முன்பு வெளியேற வேண்டும் என நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை ஏற்கனவே […]

Continue reading …

சிறுவனை கடித்துக் குதறிய ராட்வீலர் நாய்!

Comments Off on சிறுவனை கடித்துக் குதறிய ராட்வீலர் நாய்!

ராட்வீலர் நாய் 11 வயது சிறுவனை கடித்துக் குதறியுள்ளது. நாயின் உரிமையாளர் மீது காவல்நிலையத்தில் சிறுவனின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். மாங்காடு பகுதியில் கொழுமணிவாக்கம் சார்லஸ் நகரில் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த சிறுவன் துஜேஷ் என்பவரை நடைப்பயிற்சிக்கு சென்ற உரிமையாளரின் பிடியில் இருந்து நழுவி ராட்வீலர் சிறுவனை கடித்து குதறியது. இதனால் படுகாயமடைந்த சிறுவன் துஜேஷுக்கு பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து சிறுவனின் பெற்றோர் நாயின் உரிமையாளர் மீது காவல்துறையில் […]

Continue reading …

நடிகர் சூர்யா கள்ளக்குறிச்சி விவகாரத்தில் திமுகவுக்கு கண்டனம்!

Comments Off on நடிகர் சூர்யா கள்ளக்குறிச்சி விவகாரத்தில் திமுகவுக்கு கண்டனம்!

நடிகர் சூர்யா கள்ளக்குறிச்சி விஷசாராயத்திற்கு பலியானவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்ததோடு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “ஒரு சிறிய ஊரில் 50 மரணங்கள் அடுத்தடுத்து நிகழ்வது, புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில்கூட நடக்காத துயரம். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இன்னும் தொடர்ந்து மருத்துவமனையில் இருக்கிறார்கள் எனும் தகவல் அச்சமூட்டுகிறது. அடுத்தடுத்து நிகழும் மரணங்களும், பாதிக்கப்பட்டவர்களின் அழுகுரலும் மனதை நடுங்கச் செய்கிறது. கள்ளச் சாராயத்திற்கு அன்பிற்குரியவர்களைப் பலிகொடுத்துவிட்டு அழுது துடிப்பவர்களுக்கு எத்தகைய வார்த்தைகளில் ஆறுதல் சொல்லிவிடமுடியும்? […]

Continue reading …

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் நிறுத்திவைப்பு!

Comments Off on அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் நிறுத்திவைப்பு!

டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் வழங்கப்பட்ட ஜாமீனை நிறுத்தி வைத்து டில்லி உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மதுபான கொள்கை ஊழல் வழக்கில், டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தேர்தலின் போது பிரச்சாரம் மேற்கொள்ளும் வகையில் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. இடைக்கால ஜாமினை நீட்டிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததால், மீண்டும் அவர் சிறைக்கு சென்றார். அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் […]

Continue reading …