
அதிமுக சார்பில் கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராயம் மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிமுக சார்பில் கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரிப்பது முறையாக இருக்காது என்றும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்துள்ளது. இவ்வழக்கில் நாளை நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கள்ளச்சாராய விற்பனை என்பது […]
Continue reading …
பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் குடித்து 37 பேர் பலியான சம்பவத்திற்கு தமிழக அரசே காரணம், தமிழகத்தில் அதிகமாக விதவைகளை உருவாக்கும் மாடலாக இந்த அரசு இருந்து கொண்டிருக்கிறது என்று விமர்சித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம், “இத்தனை பேர் பாதிக்கும் அளவுக்கு தமிழகத்தில் கள்ளச் சாராய விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, இன்னும் எந்தெந்த மாவட்டங்களில் இவையெல்லாம் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரியவில்லை. திராவிட மாடல் ஆட்சி என்பது […]
Continue reading …
உச்சநீதிமன்றம் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தொடரப்பட்ட 4 மனுக்களுக்கு தேசிய தேர்வு முகமை ஜூலை 8-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி உள்ளது. நடந்து முடிந்த மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்தது. உச்சநீதிமன்றத்தில் இந்த முறைகேடு குறித்து புகார் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. 1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை ரத்து செய்ததோடு அவர்களுக்கு ஜூன் 23ம் தேதி மறு […]
Continue reading …
பெண் காவலரை துப்பாக்கி முனையில் எஸ்ஐ ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள காளேஸ்வரம் காவல் நிலையத்தில் பவானிசென் காவல்துறை எஸ்.ஐ. ஆக பணிபுரிந்தார். அவர் அதே காவல் நிலையத்தில் பணிபுரிந்த பெண் தலைமை காவலரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. துப்பாக்கி முனையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுவதோடு இதை வெளியில் கூறினால் கடுமையாக விளைவுகள் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளாராம். பவானிசென் குற்றம் உறுதியானதால் […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க ஏன் இன்னும் இங்கு வரவில்லை? வெறும் தேர்தல் அரசியல் மட்டுமே இங்கு நடைபெறுகிறது என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார். பிரேமலதா கள்ளக்குறிச்சியில் உள்ள மருத்துவமனையில் விஷச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின் செய்தியாளர்களிடம், “கள்ளச்சாராயம் குடித்து தற்போது வரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். ஆட்சிக்கு வந்ததும் போதைப்பொருள் இல்லா தமிழகத்தை உருவாக்குவேன் என்று முதலமைச்சர் […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, கடிதம் எழுதி உள்ளார். இலங்கை கடற்படையால் கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்யப்படும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்படுகின்றன. இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் கேள்விக்குறியாகி உள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “இலங்கை கடற்படையினர் […]
Continue reading …
அமைச்சர் அன்பில் மகேஷ் “எனது அம்மா கண்டிப்புடன் வளர்த்ததால், தான் இன்றும் நான் வீட்டிற்கு நுழைந்தவுடன் கை கால்களை கழுவி விட்டு தான் அடுத்த வேலையை பார்ப்பேன். அதைப்போல, சுகாதாரம் குறித்து ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அடிக்கடி சொல்லிக் கொடுக்க வேண்டும்”என காணொளி வாயிலாக மாணவர்களிடம் பேசினார். இன்று மதுரை பாரபத்தி கிராமத்தில் ரோட்டரி பவுண்டேஷன் சார்பாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள 20 அரசு பள்ளிகளில் அறம் சுகாதார மையம் திறக்கும் விழா நடைபெற்றது. இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் […]
Continue reading …
திமுக கூட்டணி சார்பில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அன்னியூர் சிவா, ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுடன் பேரணியாகச் சென்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். வரும் ஜூலை 10-ம் தேதி விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் 14-ம் தேதி முதல் தொடங்கியது. விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளர் அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டார். அதிமுக இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது. பாஜக கூட்டணியில் பாமக இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் […]
Continue reading …