
தமிழகத்திற்கு பிரதமர் மோடி ஜூன் 20ம் தேதி வரவிருந்ததாகவும் சென்னையிலிருந்து அவர் காணொளி காட்சி மூலம் மதுரையிலிருந்து பெங்களூர் வந்தே பாரத் ரயில் மற்றும் சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. பிரதமர் மோடி சென்னைக்கு வருவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய காவல்துறையினர் ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். திடீரென பிரதமர் மோடியின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பாஜக துணை தலைவர் கரு நாகராஜன், “நிர்வாக காரணங்களுக்காக […]
Continue reading …
சரக்கு ரயில் ஒன்று மேற்கு வங்கத்தில் காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலுடன் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. அங்கு மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இவ்விபத்தில் பலர் படுகாயம் அடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. சரக்கு ரயில் மேற்கு வங்கத்தில் உள்ள டார்ஜிலிங் மாவட்டத்தில் காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயிலுடன் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. சரக்கு ரயில் சிக்னலில் நிற்காமல் வந்ததால்தான் பயணிகள் ரயில் மீது மோதி […]
Continue reading …
குரங்கு ஒன்று தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த 24 நாள் குழந்தையை கடித்து குதறி உள்ளது. கடலூர் அருகே ஸ்ரீமுஷ்ணம் என்ற பகுதியைச் சேர்ந்த விஜய் மற்றும் வினோதினி தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறந்தது. பிறந்த 24 நாட்கள் மட்டுமே ஆன இந்த குழந்தை தொட்டிலில் தூங்கி கொண்டிருந்துள்ளது. வினோதினி வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த குரங்கு ஒன்று திடீரென தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை கடித்து குதறிவிட்டு ஓடிவிட்டது. இதையடுத்து குழந்தை உயிருக்காக போராடிய […]
Continue reading …
தாத்தாவே மூட நம்பிக்கை காரணமாக பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தையை கொன்றுள்ளார். மக்கள் மத்தியில் மூடநம்பிக்கை இன்னும் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. குழந்தை பிறக்கும்போது கூட நல்ல நேரம் பார்த்துதான் பிரசவம் நடக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால் இதுபோன்ற மூடநம்பிக்கைகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன் தாத்தா வீரமுத்து. குழந்தை பிறந்து ஒரு மாத காலத்திற்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் குழந்தை சித்திரை […]
Continue reading …
500 கோடி ரூபாய் மதிப்பில் முன்னாள் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆடம்பர பங்களா கட்டியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி சமீபத்தில் நடந்த நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்தார். அவரால் எதிர்க்கட்சியை அந்தஸ்தை கூட பிடிக்க முடியவில்லை. பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் ஜெகன்மோகன் மீது சுமத்தப்பட்டுள்ளது. தற்போது அவர் 500 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ஆடம்பர பங்களாவின் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள சுற்றுலா பகுதிகளில் […]
Continue reading …
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பிரதமர் மோடி ஆட்சியில் தான் ரயில் விபத்துகள் அதிகரித்துள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்ததாகவும், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து சம்பவத்திற்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி இரங்கலை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் மோடிக்கு கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் வலைதளபக்கத்தில், “மேற்கு வங்கத்தில் காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் […]
Continue reading …
கள்ளக்காதல் தொடர்பை துண்டித்துக் கொண்ட பெண்ணை பேருந்து நிலையத்தில் வைத்து ஓட ஓட விரட்டி குத்திக் கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் சிறுகாம்பூர் பேருந்து நிலையத்தில் ஒரு பெண்ணுக்கும், இளைஞருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு முற்றிய நிலையில், அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த பெண்ணை சரமாரியாக குத்தியுள்ளார். உயிருக்கு பயந்து அந்த பெண் ஓட முயற்சித்த போது, அந்த வாலிபர் விடாமல் துரத்திச் சென்று […]
Continue reading …
கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிஐடி அதிகாரிகள் 3 மணி நேரமாக மேலாக விசாரணை நடைபெற்றது. கர்நாடகா மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவர் மீது கடந்த மார்ச் 15ம் தேதி பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் பெங்களூர் சதாசிவ நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இப்புகாரின் அடிப்படையில், பெங்களூர் சதாசிவ நகர் காவல்நிலையத்தில், […]
Continue reading …
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஈரோடு இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை என்பதால் விக்கிரவாண்டியில் போட்டியிடவில்லை. அதிமுகவுக்கு சசிகலா ரீ என்ட்ரி ஆக முடியாது என தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம், “2015ம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக போட்டியிடவில்லை. ஈரோடு இடைத்தேர்தலில் ஜனநாயக படுகொலையை பார்த்துவிட்டோம். இந்த விக்கிரவாண்டி தேர்தலில் திமுக குறுக்கு வழியில் வெற்றி பெற முயற்சிக்கும். விக்கிரவாண்டி தொகுதியில் எல்லா அமைச்சர்களும் முகாமிட்டுள்ளனர். இதுவரை அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த […]
Continue reading …
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், “தேர்தல் முடிந்து விட்டது, புதிய அரசும் அமைத்தாகிவிட்டது, இனி மக்களுக்கான பணிகளை செய்ய வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். குறிப்பாக மணிப்பூரில் உள்ள பிரச்சனையை உடனடியாக தீர்க்க மத்திய அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்திருந்தார். மத்திய அரசு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகாவத்தின் அறிவுரையை ஏற்று தற்போது மணிப்பூர் விவகாரத்தில் சுமூகமான தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. மணிப்பூரில் கடந்த ஒரு […]
Continue reading …