
கத்தரிக்கோலை பிரசவம் முடிந்து வயிற்றில் வைத்து தைத்த டாக்டர் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணுக்கு அறுவை சிசிச்சையின் மூலம் குழந்தை பிறந்தது. அப்போது போடப்பட்ட தையலின் போது வயிற்றுக்குள்ளேயே கத்திரிக்கோலை வைத்து தைத்ததாக தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். தற்போது வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. இவ்வழக்கில் ரூபாய் 10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில […]
Continue reading …
400 கிலோ குட்கா தனியார் ஆம்னி பேருந்தில் சென்னைக்கு கடத்தப்பட்டுள்ளது. இதில் ஈடுபட்டவர்களில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குட்கா போதைப்பொருள் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகள் வெளிமாநிலங்களிலிருந்து கடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து காவல்துறையினர் தீவிர பரிசோதனை செய்து பல ஆயிரக்கணக்கான கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்து வருகின்றனர். அவ்வகையில் பெங்களூரிலிருந்து தனியார் ஆம்னி பேருந்தில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 400 கிலோ குட்கா போதைப் பொருள் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இப்போதை பொருளை கடத்தி […]
Continue reading …
சீனா 11 ஏவுகணைகளை அடுத்தடுத்து தைவான் கடல்பகுதியில் வீசியுள்ளதால் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி வருவதால் தைவானில் கடல் பகுதியில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் முக்கிய அதிகாரி ஒருவர் தைவான் சென்றதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதையடுத்து போர் பயிற்சி செய்வதாக கூறி வரும் சீனா, தைவான் கடல் பகுதியில் ஏவுகணைகளை அடுத்தடுத்து வீசி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா பிரிட்டன் நாடுகள் தைவானுக்கு ஆதரவாக உள்ளதால் தென் சீன கடலில் தொடர்ந்து பதற்றம் […]
Continue reading …
காவிரியில் நீர்வரப்பு அதிகரித்துள்ளதால் கரையோரமிருக்கும் மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். காவிரியில் நீர்வரப்பு 2.40 லட்சம் கனஅடியாக வர வாய்ப்புள்ளது. கர்நாடக பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் காவிரியில் வெள்ளம் கரைபுண்டு ஓடி வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் காவிரி கரையோரம் வசிப்பவர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் காவிரியில் 2 லட்சத்து 40 ஆயிரம் கன அடி நீர் வர வாய்ப்பிருப்பதாகவும் சேலம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து காவிரி கரையோரம் […]
Continue reading …
நீதிபதிகள் பற்றி சர்ச்சைக்குரிய பேட்டி அளித்ததால் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சவுக்கு சங்கருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சவுக்கு சங்கர் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், நீதிபதிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறியதற்காக நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனியார் யூடியூப் சேனலில் நீதித்துறை குறித்து அவதூறாகப் பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டதை அடுத்து அவர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். நீதிபதிகள் […]
Continue reading …
ஆந்திர மாநிலத்தில் சட்டக்கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவியை காரில் வாலிபர்கள் கடத்தி சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதியில் சட்டக்கல்லூரியில் கர்னூல் பகுதியைச் சேர்ந்த மாணவி(24) இறுதியாண்டு படித்து கொண்டிருக்கிறார். நேற்று மாலை கல்லூரி முடிந்த பின், பேருந்திற்காக தாமனேஸி பேருந்து நிலையத்தில் மாணவி காத்திருந்தார். அப்போது, காரில் வந்த 2 வாலிபர்கள் மாணவியை பலவந்தமாக காரில் கடத்திச் சென்றுள்ளனர். உடனே அருகில் இருந்த மக்கள் போலீசாருக்கு இதுகுறித்துத் தகவல் தெரிவித்தனர். […]
Continue reading …
முதலமைச்சருக்கு கடிதம் எழுதிவிட்டு வியாபாரி ஒரு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி ஆந்திர மாநிலத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடந்து வருகிறது. அங்குள்ள குண்டூரைச் சேர்ந்த வர்மா (40) அதே பகுதியில் வசிக்கும் பைனான்சியர் ஒருவரிடம் கடந்த 2010ம் ஆண்டு ரூ.5 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அக்கடனை வர்மா திருப்பிச் செலுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், பைனான்சியர் இன்னும் பணம் கொடுக்க […]
Continue reading …
ஒய்எஸ்ஆர்சிபிச் சேர்ந்த எம்.பி. ஒருவரின் வீடியோ வைரலாகியுள்ளது. ஆனால் அந்த வீடியோ தனக்கு தொடர்பானது அல்ல, போலியானது என்று அவர் கூறியுள்ளார். கோரண்ட்லா மாதவ் இந்துப்பூர் பகுதியின் ஒய்எஸ்ஆர்சிபி எம்.பி.யாக உள்ளார். இவர் ஒரு பெண்ணுடன் நிர்வாணமாக வீடியோ காலில் பேசியது பெரும் சர்ச்சையாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோ போலியானது என்று எம்பி கோரண்ட்லா மாதவ் கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “தனக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். இச்செயல் […]
Continue reading …
ஹரித்துவாரிலுள்ள சிறைச்சாலையில் 40 சிறைக்கைதிகளுக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரொனா 4 வது அலை விரைவில் வாய்ப்பிருப்பதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சமீப காலமாக நாட்டில் கொரொனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தற்போது உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவாரிலிலுள்ள மாவட்ட சிறைச்சாலையில், ஒரு கைதிக்கு தொடர் காய்ச்சல் நிலவியது. இதையடுத்து. மற்ற சிறைக் கைதிகளைப் பரிசோதனை செய்ததில், மொத்தம் 43 கைதிகளுக்கு கொரோனா தொற்று நோய் உறுதியாகியுள்ளது. கொரொனா […]
Continue reading …
நடிகர் விஜய் சேதுபதி இந்தி படத்தில் நடிக்கவிருக்கிறார். இதைப் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீராம் ராகவன் இந்தி திரைப்படங்களை இயக்குபவர். அவர் இயக்கிய “பட்லாபூர்” மற்றும் “அந்தாதூன்” ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன. அதிலும் “அந்தாதூன்” உலகளவில் புகழ்பெற்ற படம். இப்போது பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இப்போது ஸ்ரீராம் தனது அடுத்த படத்தை இயக்கும் பணியில் இருக்கிறார். இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் […]
Continue reading …