
மீண்டும் ஒரு பள்ளி மாணவி தமிழகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில்தான் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.இது தமிழகத்தையே உலுக்கிய நிலையில், இன்று பள்ளிப்பட்டு தாலுக்கா ராமா நாயுடு கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த கங்கோத்ரி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். பள்ளிப்பட்டு தாலுக்காவின் ராமா நாயுடு கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் தாமு. இவரது மனைவி ராகராஜேஸ்வரி. இவர் கொரோனாவால் கடந்தாண்டு உயிரிழந்தார். […]
Continue reading …
காவலர் ஒருவர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பணியில் இருந்தபோதே தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் சென்னையில் நடைபெற்று 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி முதன்முறையாக வருகிறது. மாமல்லபுரத்தில் நடைபெறும் இப்போட்டியின் தொடக்க விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் சிறப்பாக நடந்தது. செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவும் நேரு உள்விளையாட்டு அரங்கிலேயே நடத்தப்பட உள்ளது. இதற்காக நேரு உள்விளையாட்டு அரங்கில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. பாதுகாப்புக்காக காவலர்களும் பணியில் […]
Continue reading …
அமைச்சர் நாசர் விரைவில் ஆவின் நிறுவனம் தண்ணீர் பாட்டில் விற்பனை செய்யப் போவதாக கூறியுள்ளார். “ஆவின் பால் தயாரிக்கும் 28 யூனிட்டுகளில் வாட்டர் பிளாண்ட் உள்ளது. எனவே விரைவில் ஆவின் நிறுவனம் குடிநீர் பாட்டில் தயாரிக்க உள்ளது. அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். முதல்கட்டமாக அரை லிட்டர் மற்றும் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் தயாரிக்கும். இதனால் ஆவின் நிறுவனத்தின் வருமானமும் அதிகரிக்கும். மேலும் ஆவின் பால் பாக்கெட்டுகளில் சினிமா விளம்பரங்களை வெளியிடுவதற்கு ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.” இவ்வாறு […]
Continue reading …
தற்போது கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்திலுள்ள 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. கேரளாவில் எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம் ஆகிய மூன்று மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5ம் தேதி வரை இம்மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் […]
Continue reading …
தலைமை செயலர் இறையன்பு இனு தமிழக மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் தண்டோரா அறிவித்தல் முறை தேவையில்லை என அறிவுறுத்தியுள்ளார். பல்வேறு காலமாக தமிழகத்தில் ஊராட்சி, கிராம பஞ்சாயத்து பகுதிகளில் பல்வேறு அரசு அறிவிப்புகள், ஏலம், வெள்ள அபாய எச்சரிக்கை போன்றவற்றை தண்டோரா மூலமாக தெருத் தெருவாக அறிவிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதிய தமிழக தலைமை செயலர் இறையன்பு, தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி பெருகிவிட்ட நிலையில் இனியும் தண்டோரா போடுவது […]
Continue reading …
இயக்குனர் சிவாவின் படத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் சூர்யா பாலா இயக்கத்தில் “வணங்கான்’’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல வருடங்களுக்குப் பிறகு பாலா, சூர்யாவுடன் இணைந்துள்ள இப்படத்தில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இணை இயக்குனராகப் பணியாற்றுகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்தது. 2வது கட்ட ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில், சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால் சூர்யா பாலாவின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து, படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஆர்வமுடன் இருப்பதாக […]
Continue reading …
பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் 5ஜி அலைக்கற்றை ஏலம் வெளிப்படைத்தன்மையுடன் நடந்துள்ளது என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார். கடந்த ஏழு நாட்களாக நடந்த 5ஜி அலைக்கற்றை ஏலம் முடிவடைந்தது என மத்திய தொழில்நுட்பத் துறை அமைச்சகம் அறிவித்தது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ, ஏர்டெல், வோடபோன் மற்றும் அதானி ஆகிய நான்கு நிறுவனங்களும் கலந்து கொண்டது. இதில் அதிகபட்சமாக ஜியோ நிறுவனம் ஏலம் எடுத்ததாக கூறப்பட்டது. கடந்த 7 நாட்களில் நடந்த சுற்றுகளில் ஒரு […]
Continue reading …
நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் ஊராட்சி தலைவர் நரசிம்மமூர்த்தியை அடித்துக் கொலை செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது தாரவேந்திரம் ஊராட்சி. இந்த ஊராட்சியின் தலைவராக பிபி பாளையத்தை சேர்ந்த நரசிம்மமூர்த்தி இருந்து வந்தார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தளி பகுதி கமிட்டி உறுப்பினராக இருந்து வந்தார். அவர் நேற்று இரவு (ஆக. 2) அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து, […]
Continue reading …
பொதுமக்களுக்கு இம்மாதம் மெரினாவில் நடைபெற உள்ள 75வது சுதந்திர தினவிழாவை பார்வையிட அனுமதி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 75ம் ஆண்டு சுதந்திர தின விழா வருகிற 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாட்டில் அனைவரும் இதைக் கொண்டாட தயாராகி வருகின்றனர். சமீபத்தில் பிரதமர் மோடி, நாட்டு மக்கள் அனைவரும் 75 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் சமூகவலைதளங்களில் உள்ள டிபியில் தேசிய கொடியை வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். வீடுதோறும் […]
Continue reading …
கழிவுநீர் கால்வாய் கோவையில் கனமழை பெய்த நிலையில் காவலர் ஒருவர் சுத்தம் செய்கின்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் தென்மேற்கு பருவமழையால் நல்ல மழை பெய்கிறது. இதன் காரணமாக கோவை, திருப்பூர், தேனி உட்பட பல பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. கோவையில் பெய்த கனமழையால் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கோவையில் பெய்த கனமழையால் கழிவுநீர் கால்வாய் அருகே குப்பைகள் சேர்ந்து நீர் வெளியேற முடியாதபடி […]
Continue reading …