
17 வயது சிறுவன் சென்னையில் போதை ஊசி செலுத்திக் கொண்டதால் உயிரிழந்துள்ளார். சென்னை புளியந்தோப்பு டிகாஸ் சாலை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு, கடந்த 6 மாதமாக வேலைக்குச் சென்றுள்ளான். வெள்ளிக்கிழமை மாலை பாரிமுனை லோன்ஸ் ஹொயர் பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு சிறுவன் சென்றுள்ளான். அங்கு தனது நண்பர்கள் 3 பேருடன் அமர்ந்து சிறுவன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, நண்பர்கள் 4 பேரும் போதை ஊசி செலுத்திக் […]
Continue reading …
இன்று காலை 7 மணி முதல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. திடீரென முன்னாள் முதலமைச்சர் மெகபூபா சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். பாராளுமன்ற தேர்தல் இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே ஐந்து கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது. இன்று 6வது கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் இன்று தான் மக்களவைத் தேர்தல் நடைபெறுவதால் மக்கள் நீண்ட அரசியல் […]
Continue reading …
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உங்கள் உரிமைகளுக்காகவும், உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்திற்காகவும் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இன்று 6 மாநிலங்கள் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில், ஆறாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. மக்களவைத் தேர்தல் தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில், “வாக்குப்பதிவின் முதல் ஐந்து கட்டங்களில், நீங்கள் பொய்கள், வெறுப்பு மற்றும் பிரச்சாரங்களை நிராகரித்து, உங்கள் வாழ்க்கை தொடர்பான அடிமட்ட பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்துள்ளீர்கள். இன்று ஆறாவது […]
Continue reading …
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வுகளுக்கான குரூப் 2, 2ஏ பாடத்திட்டத்தில் மாற்றம் செய்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளில் தனித்தனியே முதன்மைத் தேர்வு நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 2024ம் ஆண்டிற்கான திருத்தியமைக்கப்பட்ட தேர்வுக்கால அட்டவணை 24.4.2024ல் வெளியிட்டபோது தேர்வர்களின் நலன் கருதி ஒருங்கிணைந்த குடிமைப் […]
Continue reading …
போக்குவரத்து போலீசார், கோவையில் பேருந்துகளில் ஏர் ஹாரன் சோதனை நடத்தினர். விதி மீறலில் ஈடுபட்ட பேருந்துகளுக்கு அபராதம் விதித்தனர். தமிழக அரசு பேருந்துகளில் ஏர் ஹாரன் எனப்படும் அதிக ஒலி எழுப்பக் கூடிய ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது எச்சரித்துள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து காவல்துறையினர் சோதனைகள் செய்து பேருந்துகளில் ஏர் ஹாரன் இருந்தால் அவற்றை அகற்றி அப்பேருந்துகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையம் அருகில் கோவை […]
Continue reading …
கேரளாவிற்கு சுற்றுலா சென்றவர்கள் கூகுள் மேப் காட்டும் வழியில் சென்றதால் காருடன் ஆற்றுக்குள் விழுந்துள்ளனர். கேரள மாநிலம் ஆலப்புழாவிற்கு தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் சொகுசு காரில் சுற்றுலா சென்றனர். அந்த காரில் ஒரு பெண் உள்ளிட்ட நான்கு பேர் பயணம் செய்துள்ளனர். அப்போது ஓட்டுநருக்கு வழி தெரியாத காரணத்தினால் கூகுள் மேப்பை பார்த்து காரை ஓட்டி உள்ளார். கோட்டயம் வந்த போது கார் ஆற்றுக்குள் விழுந்தது. அப்போது உள்ளே இருந்தவர்கள் நீரில் தத்தளித்த […]
Continue reading …
கடவுளின் குழந்தை என்று தன்னை பிரதமர் மோடி சமீபத்தில் கூறிக் கொண்டார். அவரது கருத்துக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கேலி செய்து வருகின்றனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‘கலவரத்தை தூண்டி விடவும் விளம்பரங்கள் மூலம் பொய்களை பரப்புவுமா கடவுள் ஒருவரை அனுப்பி வைப்பாரா? கடவுளின் குழந்தை இப்படி செய்யுமா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். 100 நாள் வேலை திட்டத்தின் நிதியை நிறுத்துவதற்காக கடவுள் ஒருவரை அனுப்பி வைப்பாரா? மக்களின் வங்கி கணக்கில் ரூபாய் 15 […]
Continue reading …
17 வயது சிறுவன் புனேவில் கடந்த சில நாட்களுக்கு முன் கார் விபத்தை ஏற்படுத்தி இரண்டு நபர்கள் பலியாகினர். அந்த சிறுவனுக்கு அளிக்கப்பட்டிருந்த ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. தற்போது அந்த சிறுவன் சீர்திருத்த பள்ளியில் உள்ளார். தற்போது அந்த சிறுவனின் தாத்தா கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கார் விபத்தை ஏற்படுத்திய 17 வயது சிறுவன் வேதாந்த்தின் தாத்தா சுரேந்திரா அகர்வால் என்பவர் தனது கார் ஓட்டுநர் கங்காராம் என்பவரை மிரட்டி கார் விபத்தை தான் […]
Continue reading …
சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் மே 30 வரை மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம் மத்திய மேற்கு மற்றும் தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவு வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வருவதாகவும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று மாலை மத்திய வங்க கடல் பகுதியில் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மையம் […]
Continue reading …
17 வயது சிறுவன் புனேவில் கார் விபத்தை ஏற்படுத்தினான். அச்சிறுவனின் தாத்தா ஏற்கனவே ஒரு துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்டவர் என்பதும் அவர் தீவிரவாதியுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. மது போதையில் கடந்த சில நாட்களுக்கு முன் 17 வயது சிறுவன் கார் ஓட்டியபோது, இருசக்கர வாகனத்தில் மோதியதால் அந்த வாகனத்தில் சென்ற இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அச்சிறுவன் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால் […]
Continue reading …