
மத்திய அரசு பாராளுமன்ற உறுப்பினர்கள் ரயிலில் பயணம் செய்வதற்கான செலவு ரூ.62 கோடி ஆகிறது என்று தகவல் அளித்துள்ளது. 2021-2022ம் ஆண்டில் பாராளுமன்றத்தில் உள்ள இரு அவை உறுப்பினர்களும் ரயில்களில் பயணித்த செலவு பற்றிய விபரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நடப்பு எம்.பிக்களுக்கு முதல் வகுப்பு ஏசி பெட்டியிலும், முன்னாள் எம்.பிக்களுக்கு இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டியிலும் இலவசமாக பயணிக்க அனுமதி உள்ளது. இதற்கான கட்டணத்தை மத்திய அரசு ரயில்வேக்கு செலுத்தும். அவ்வகையில் கடந்த 5 ஆண்டுகளில் […]
Continue reading …
உச்சநீதிமன்றம் நுபுர் சர்மா தான் நாட்டில் நடக்கும் பிரச்சினைகளுக்கு பொறுப்பு என்று அறிவித்துள்ளது. இன்று உச்சநீதிமன்றம் நுபுர் சர்மாவின் முகமது நபி குறித்த சர்ச்சை கருத்து குறித்த வழக்கை விசாரித்தது. பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய புகாரில் கட்சியின் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் பலரும் போராட்டம் நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு எதிராக நாடு முழுவதும் வெவ்வேறு நீதிமன்றங்களிலும் […]
Continue reading …
உலகப்புகழ்பெற்ற மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் அகாடமியில் சேர்வதற்காக நடிகர் சூர்யாவுக்கும் பாலிவுட் நடிகை கஜோலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உலகின் மிகவும் புகழ்பெற்ற, ஆஸ்கர் விருதை பெற இந்திய சினிமா பல வகைகளில் முயற்சி செய்து வருகிறது. கடந்த ஆண்டு சூர்யாவின் “சூரரை போற்று” ஆஸ்கர் விழாவுக்கு அனுப்பப்பட்டது. பரிந்துரைக்கு முன்னாள் இறுதி செய்யப்பட்ட 366 படங்களின் பட்டியலில் ஒரே ஒரு இந்திய படமாக சூரரை போற்று இருந்து, பின் வெளியேறியது. அதுபோல சூர்யாவின் “ஜெய்பீம்“ […]
Continue reading …
நடனப்புயல் என்றழைக்கப்படும் பிரபுதேவா நடிப்பில் மிக பிரம்மாண்டமாக பல கோடிகளில் ஆல்பம் உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது. சமீபபத்தில் பின்னணி பாடகர்கள் மற்றும் முக்கிய திரைப்பிரபலங்கள் ஆல்பம் உருவாக்குவதில் ஆர்வம் அதிகம் காட்டி வருகின்றனர். அந்த வரிசையில் சில நடிகைகள் மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோரின் ஆல்பங்களில் பங்காற்றியுள்ளனர். இப்போது நடனப்புயல் பிரபுதேவா நடிப்பில் ஒரு ஆல்பம் உருவாக உள்ளது. இந்த ஆல்பம் பிரம்மாண்டமாக ஒன்றரை கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக உள்ளதாம். இந்த பாடலை இயக்கி, பிரபுதேவாவே […]
Continue reading …
மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது “பொன்னியின் செல்வன்” திரைப்படம். மணிரத்னத்தின் கனவுப் திரைப்படமான இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா. பிரகாஷ்ராஜ். ஜெயராம். சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இருபாகங்களாக உருவாகி வருகிறது இத்திரைப்படம். இதன் முதல்பாகம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு விருந்தளிக்கும் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இப்போது செப்டம்பர் 30ம் தேதி என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக […]
Continue reading …
தேர்தல் ஆணையம் குடியரசு தலைவர் தேர்தலுக்காக கொடுக்கப்பட்டுள்ள மனுவில் 79 மனுக்கள் நிராகரிப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. பாஜக கூட்டணி சார்பில் திரபுபதி முர்மு மற்றும் எதிர்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த், சின்ஹா ஆகியோரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டிடுகின்றனர். இத்தேர்தலில் மொத்தம் 87 பேர் போட்டியிடுவதற்கு விண்ணப்பம் செய்துள்ளனர். அதில் 79 மனுக்கள் உரிய தகுதிகளைப் பூர்த்தி செய்யாததால் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. யஷ்வந்த் சின்ஹா, திரௌபதி முர்மு ஆகிய இருவரின் வேட்புமனுக்கள் சரியாக இருந்ததால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் […]
Continue reading …
உலகநாயகன் கமல்ஹாசனுக்கு அரபு அமீரகம் கோல்டன் விசா கொடுத்து கவுரவித்துள்ளது. இந்தியாவில் உள்ள பிரபலமானவர்களுக்கு அரசு அமீரகம் கடந்த சில காலமாக கோல்டன் விசா என்னும் சிறப்பு விஐபி விசாவை வழங்கி கவுரவித்து வருகிறது. இதற்கு முன்பு சரத்குமார், இயக்குனர் வெங்கட்பிரபு உள்ளிட்ட பலருக்கு கோல்டன் விசா வழங்கியது. தற்போது உலகநாயகன் கமல்ஹாசனுக்கு கோல்டன் விசாவை வழங்கி கவுரவித்துள்ளது. இது சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Continue reading …
அமர்நாத் கோவிலுக்கு புனித யாத்திரை செல்வதற்கு 3 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ள நிலையில் இன்று புனித யாத்திரை தொடங்கி உள்ளது. ஆண்டுதோறும் காஷ்மீரிலுள்ள அமர்நாத் குகைக்கோவிலில் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க தரிசனம் செய்தவற்கு பல லட்சம் பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம். கடந்த இரண்டாண்டுகளாக கொரோனா காரணமாக யாத்திரைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இவ்வாண்டு அமர்நாத் யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது. அமர்நாத் குகைக் கோவிலுக்கு செல்லும் முதலாவது குழுவின் பயணத்தை காஷ்மீர் துணை நிலை ஆளுனர் மனோஜ் சின்ஹா […]
Continue reading …
விண்ணில் பாய்கிறது PSLV C-53 என்ற ராக்கெட் 3 செயற்கைகோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இன்று மாலை 6 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பிஎஸ்எல்வி சி 53ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான முழு ஏற்பாடுகளும் தயாராகிருப்பதாகவும், கவுண்ட் டவுன் தொடங்கி விட்டதாகவும் ஏற்கனவே தகவல் வெளியாகி உள்ளது. ராக்கெட்டில் உள்ள செயற்கை கோள்கள் பூமியை மிக துல்லியமாக படம் எடுக்கும் என்றும் DS-EO உள்ளிட்ட 3 செயற்கைகோள்கள் இந்த ராக்கெட்டில் இருப்பதாகவும் […]
Continue reading …
ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்காவிடில் அபராதம் இருமடங்காக வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஆதார் மற்றும் பான் எண் இரண்டையும் இணைக்க வேண்டுமென அறிவுறுத்தி வருகிறது. இன்றுக்குள் இரண்டையும் இணைக்காதவர்கள் இரு மடங்கு அபராதம் செலுத்த வேண்டுமென அறிவித்துள்ளது. இந்த இரண்டையும் இணைப்பதற்கு மார்ச் 31ம் தேதி கடைசி தேதி என்று நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அதன் பின்னர் இணைக்கப்பட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. தற்போது 500 ரூபாய் அபராதத்துடன் ஆதார் […]
Continue reading …