
உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து தயாரித்துள்ள படம் “விக்ரம்.” இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. வரும் ஜூன் 2ம் தேதி திரைக்கு வரஉள்ளது. இத்திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து, நரேன், பகத்பாசில், விஜய் சேதுபதி ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தில் சூர்யா ஒரு முக்கிய கேரக்டரில் நடிப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே இப்படத்தின் முதல் சிங்கில் வெளியாகி பெரும் வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்றுள்ள நிலையில், ஆடியோ வெளியீட்டு விழா […]
Continue reading …
நடிகர் மாதவன் நடித்துள்ள “ராக்கெட்டரி” திரைப்படம் கேன்ஸ் திரைப்படவிழாவில் திரையிடப்பட்டது. இத்திரைப்படத்தை தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் பார்த்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். நடிகர் மாதவன் நடித்த ‘ராக்கெட்டரி’ திரைப்படம் கேன்ஸ் திரைப்படவிழாவில் திரையிடப்பட்ட நிலையில் இப்படத்தை ஏ.ஆர்.ரகுமான், பார்த்திபன், பா.ரஞ்சித் உள்ளிட்ட பல தமிழ் திரையுலக பிரபலங்கள் பார்த்துள்ளனர். இப்படத்தை பார்த்து ஏ.ஆர்.ரகுமான் தனது சமூக வலைத்தளத்தில் மிகச்சிறந்த படம் என்றும் மாதவன் மேல் தனது மரியாதை அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல் பார்த்திபன் […]
Continue reading …
உலக குத்து சண்டை போட்டியில் 52 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார் இந்திய வீராங்கணை நிகாத் சரீன். துருக்கி நாட்டில் இஸ்ததன்புல் நகரில் நடைபெற்ற மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 8ம் தேதி நடைபெற்றது. இதில் தெலுங்கானா மாநிலம் நிசாமாபாத்தைச் சேர்ந்த நிகாத் சரீன் இறுதி போட்டியில் தாய்லாந்து வீராங்கனையை வீழ்த்தி தங்கம் வென்றார். 52 கிலோ எடைப்பிரிவில் தாய்லாந்தின் ஜித்போங்கை 5&0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி நிகாத் சாதனை படைத்துள்ளார். உலக […]
Continue reading …
கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் திறப்பதற்கு கால தாமதமாகலாம் என்று பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தற்போது முடியும் நிலையில் இருக்கிறது. 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்குப் பள்ளி இறுதி தேர்வு முடிந்து, 14ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் அரசு, உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 13ம் தேதி […]
Continue reading …
போர்டு கார் தொழிற்சாலை சென்னை மறைமலைநகரில் செயல்பட்டு வருகிறது. இத்தொழிற்சாலையை வரும் ஜூன் 30ம் தேதியுடன் மூடப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. போர்டு கார் தொழிற்சாலை நஷ்டம் காரணமாக மூடப்பட்டுள்ள நிலையில் அந்த தொழிற்சாலையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. கார் தொழிற்சாலையின் நிர்வாகம் தொழிலாளர்களின் கருத்தை கேட்காமலே அதை மூட முடிவு எடுத்துள்ளதாகவும் தொழிற்சங்கங்கள் புகார் அளித்தன. தொழிற்சாலையை மூட நிர்வாகம் முடிவு தொழிலாளர்களுக்கு பெயர் அதிர்ச்சி […]
Continue reading …
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 10 வர்த்தக நாட்களில் தொடர்ந்து ஐந்து முறை சரிந்துள்ளது. நேற்று வரை இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.77.61 காசுகளாக சரிந்தது. இன்று மேலும் 12 காசுகள் சரிந்து தற்போது ரூ.77.73 ஆக உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து வருவதால் ரூபாயின் மதிப்பு வேகமாக சரிவை கண்டு வருகிறது. இதே போல பெட்ரோல், டீசல் விலை, எரிபொருள் விலை உயர்ந்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் […]
Continue reading …
5 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் அறிக்கையில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும், புதுவை மற்றும் காரைக்கால் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.
Continue reading …
தக்காளியின் விலை தமிழகத்தில் உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று ஒரு கிலோ தக்காளி சென்னை கோயம்பேட்டில் விலை ரூ.100க்கு விற்கப்பட்டது. மழைப்பொழிவு மற்றும் வரத்துக் குறைவால் கோயம்பேட்டில் நேற்று தக்காளி விலை 20வது நாளாக அதிகரித்தது. அமைச்சர் ஐ.பெரியசாமி “வெளிச்சந்தைகளில் தக்காளில் விலை ஒரு கிலோ ரூ.120 வரை விற்கப்படும் நிலையில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.75 […]
Continue reading …
அஜித்தின் அடுத்த திரைப்படத்தில் மஞ்சு வாரியர் ஜோடியாகிறார் என்று நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன. வலிமை படத்தை தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் அடுத்த திரைப்படம் AK61. படப்பிடிப்பு ஐதராபாத்தில் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் அமைத்து ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இப்படம் பிரபல வெப் சீரிஸ் ‘மணி ஹெய்ஸ்ட்’ போல வங்கி கொள்ளை சம்மந்தமாக இத்திரைக்கதை உருவாகவுள்ளதாக தகவல் வெளியானது. பல […]
Continue reading …
அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் இயக்குனர் ஷங்கர் ஆஜராகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் ஷங்கருக்கு சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்ததாக இயக்குனர் ஷங்கர் மீது பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் இந்த வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் இன்று ஆஜரானதாகவும், அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் […]
Continue reading …