“மஹா” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகை ஹன்சிகா மோத்வானியின் 50வது படமான “மஹா” படத்தின் ரிலீசாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தவர் ஹன்சிகா மோத்வானி. ஆனால் அவருக்கான வாய்ப்புகள் நாளடைவில் குறைந்தன. இந்நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமான “மஹா”வில் நடிக்க அவர் ஒப்பந்தமானார். இந்த படத்தில் அவரது முன்னாள் காதலரான சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய்க் கொண்டே இருந்த நிலையில் […]
Continue reading …பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆன்லைன் சூதாட்டத்தில் தற்கொலைகள் தினசரி நிகழ்வுகளாகிவிடும் என எச்சரிக்கை செய்துள்ளார். இது குறித்து அவர் பேசம்போது, “தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த குரும்பட்டியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்றவர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டார். இறந்த வெங்கடேஷையும் சேர்த்து தமிழ்நாட்டில் கடந்த 9 மாதங்களில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்திருக்கிறது. எந்த சமூகக் கேடுகளையும் விட […]
Continue reading …உணவுப் பாதுகாப்பு அலுவலர் சேலம் மாவட்டத்தில் உள்ள பிரபல அசைவ ஓட்டல்களில் அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையில் 113 ஓட்டல்களில் நடத்தப்பட்டது. இதில் சுமார் 19 ஓட்டல்களில் சுமார் 133.8கிலோ கெட்டுப்போன சிக்கன், ஆட்டுக்கறி, மீன், நண்டு போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.34,650 ஆகும். சுகாதாரமற்றை முறையில் உணவுகளை தயார் செய்த 8 கடைகளுக்கு ரூ.13000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 22 கடைகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
Continue reading …இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுள்ளார். இவர் ஏற்கனவே இலங்கையில் 5 முறை பிரதமராகப் பதவியில் இருந்துள்ளார். இலங்கையில் நிலவிவரும் தொடர் பொருளாதார நெருக்கடியால் நிலைமை கைமீறியுள்ளது. இலங்கை முன்னாள் பிரதார் ராஜபக்சேவின் வீட்டை கொளுத்திய சிங்களர்கள், அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவர்களை அடித்தனர். இதனால் மக்கள் வீதிகளில் இறங்கி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் அரசு, தனியார் சொத்துகளை சேதப்படுத்துவோரை சுட்டுத்தள்ள முப்படைகளுக்கும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி அளித்தள்ளது. இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே […]
Continue reading …இலங்கை ரிசர்வ் வங்கியின் கவர்னர் இலங்கையின் பொருளாதார நிலை இதே ரீதியில் சென்றால் சோமாலியா ஜிம்பாப்வே போன்று இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைய வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் பிரதமர் பதவி விலகி மூன்று நாட்களாகி விட்டது. ஆனால் இதுவரை புதிய பிரதமர் நியமிக்கப்படவில்லை. இதே நிலை தொடர்ந்தால் இலங்கையின் பொருளாதாரம் மேலும் கடும் வீழ்ச்சியடையும். இதனை அடுத்து தான் தனது பதவியை ராஜினாமா செய்வது தவிர வேறு வழியில்லை என்றும் இலங்கை ரிசர்வ் வங்கி கவர்னர் […]
Continue reading …தென்னக ரயில்வே கேரளாவுக்கு இயக்கப்படும் 22 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். தென்னக ரயில்வே தமிழகம் உள்பட கேரளாவுக்கு இயக்கப்படும் 22 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் முதல் காயங்குளம் என்ற பகுதி வரை ரயில் பாதை பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு செல்லும் 22 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே […]
Continue reading …நடிகர் நடராஜன் இலங்கையில் ராஜபக்சே ஆட்சி கவிழ்ந்துள்ள நிலையில் அதைப்பற்றிய மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இலங்கையில் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து மக்கள் புரட்சி வெடித்துள்ளது. இதனால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்சே குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளார். மேலும் பல அரசியல்வாதிகளின் வீட்டை மக்கள் தீக்கிரையாக்கியுள்ளனர். இந்த சம்பவங்களை டுவிட்டரில் பதிவிட்டு வரும் தமிழ்நாட்டு மக்கள் பலர் ஈழ போரில் ராஜபக்சே குடும்பம் இழைத்த அநியாயத்திற்கு கிடைத்த கூலி இது என்ற வகையில் […]
Continue reading …தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் இலங்கை மக்களுக்காக அரிசி கொள்முதல் செய்வதற்கு அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசு இலங்கையில் உள்ள மக்களுக்கு உதவுவதற்காக அரிசி கொள்முதல் செய்வதை தடை செய்யக்கோரிய மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை மக்களுக்கு உதவ தமிழக அரசு நிதி திரட்டி வருகிறது. 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசியை கொள்முதல் செய்து அனுப்ப உள்ளதாக முதலமைச்சர் […]
Continue reading …உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம்தான் “விக்ரம்”. தற்போது திரைப்படத்தின் முதல் சிங்கில் வெளியாகி வைரலாகி வருகிறது. இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உட்பட பலர் நடித்துள்ளனர். திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படம் வரும் ஜுன் மாதம் 3ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் உருவாகி வருகிறது. படத்தின் பாடல்கள் மற்றும் […]
Continue reading …உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அடுத்த கல்வி ஆண்டு முதல் உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக தாலிக்கு தங்கம் என்ற திட்டம் இருந்து வந்தது. அந்த திட்டம் நிறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின்படி உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அடுத்த கல்வி ஆண்டு முதல் வழங்கப்படும் என்று […]
Continue reading …