Home » Posts tagged with » Netrikkan (Page 533)

நீலகிரிக்கு முதலமைச்சர் சுற்றுப்பயணம்

Comments Off on நீலகிரிக்கு முதலமைச்சர் சுற்றுப்பயணம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீலகிரி மாவட்டத்திற்கு வருகிற மே 20, 21-ம் தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். ஊட்டியில் 20-ம் தேதி மலர் கண்காட்சியை தொடங்கி வைப்பதோடு மட்டுமல்லாமல், அரசு சார்பாக பல நலத்திட்டங்களை வழங்கும் விழாவிலும் பங்கேற்க திட்டமிட்டுள்ளார்.

Continue reading …

இலங்கை அதிபருக்கு கடும் எதிர்ப்பு

Comments Off on இலங்கை அதிபருக்கு கடும் எதிர்ப்பு

அதிபர் கோத்தபய ராஜபக்சே பிறப்பித்த அவசர நிலை அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி மோசமடைந்து வருவதால் அரசுக்கு எதிரான போராட்டங்கள் பல வாரங்களாக நடந்து வருகின்றன. இந்த போராட்டங்களால் நெருக்கடி அதிகரித்து வருவதை தொடர்ந்து, போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்காக நாடு முழுவதும் மீண்டும் அவசர நிலையை பிறப்பித்தார், அதிபர் கோத்தபய ராஜபக்சே. அதிபரின் இந்த நடவடிக்கைக்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. குறிப்பாக மனித உரிமை அமைப்புகள், வக்கீல் சங்கங்கள், எதிர்க்கட்சிகள் […]

Continue reading …

ரூ.3 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

Comments Off on ரூ.3 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

ரூ.3கோடி மதிப்புடைய செம்மரக்கட்டைகளை ஆந்திராவில் வெட்டியதாக 7 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் சித்தூர் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்தியதாக ஆந்திர காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து சித்தூரில் நடத்திய வாகன தணிக்கையில் ரூ. 3 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடத்தப்பட்ட இந்த செம்மரக்கட்டைகளை தமிழகத்தை சேர்ந்த 7 பேர் வெட்டியதாக ஆந்திரா காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து 3 வாகனங்களையும் ஆந்திரா காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Continue reading …

புலிட்சர் விருது அறிவிப்பு

Comments Off on புலிட்சர் விருது அறிவிப்பு

2வது முறையாக டேனிஷ் சித்திக்கிற்கு புலிட்சர் விருது தரப்படுகிறது. இந்த வருடத்திற்கான புலிட்சர் விருதுகள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளன. இதழியல், புத்தகம், நாடகம், இசைத்துறை சாதனையாளர்களுக்கு ஆண்டுதோறும் புலிட்சர் விருது வழங்கப்படுகிறது. இப்பட்டியலில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் இந்தியாவை சேர்ந்த புகைப்படக்காரர்களான அட்னன் அபிதி, காஷ்மீர் பெண் புகைப்படக்காரரான சன்னா இர்ஷாத் மாட்டூ, அமித் தேவ் மற்றும் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட டேனிஷ் சித்திக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கொரோனாவின்போது உலகம் கண்ட கொடூரங்களை புகைப்படங்களாக பதிவு செய்ததற்காக ஃபீச்சர் புகைப்படங்கள் […]

Continue reading …

ராஜபக்சே சகோதரர் வீட்டிற்கு தீவைப்பு

Comments Off on ராஜபக்சே சகோதரர் வீட்டிற்கு தீவைப்பு

இலங்கையின் முன்னார் அமைச்சரான பசில் ராஜபக்சே வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீவைத்துள்ளனர். அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது, மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் கொலை வெறித்தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, நாடு முழுதும் பல இடங்களில் கலவரம் மூண்டுள்ளது. இதில், 130 பேர் காயம் அடைந்துள்ளனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போலீசாருக்கு உதவ, ராணுவமும் களத்தில் உள்ளது. நிலைமை கைமீறிப் போனதை அடுத்து, மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். கலவரத்தில், […]

Continue reading …

ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேற மாட்டார்

Comments Off on ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேற மாட்டார்

ராஜபக்சேவின் மகன்களில் ஒருவரான நாமல் ராஜபக்ச, “பிரதமர் பதவியை இராஜினாமா செய்த மஹிந்த ராஜபக்சே நாட்டை விட்டு ஒருபோதும் வெளியேற மாட்டார்” என தெரிவித்துள்ளார். ஒரு பேட்டியின் போது மகிந்த ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேற மாட்டார் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ச தனது பிரதமர் பதவியிலிருந்து விலக மாட்டார் எனவும், தனக்குப் பின்வருபவரை தேர்வு செய்வதில் முக்கிய பங்கு வகிக்க விரும்புவதாகவும் நாமல் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமரை வெளியே வருமாறு கோரி திருகோணமலை […]

Continue reading …

யார் இந்த பாஜக இளம் மாநில செயலாளர்?

Comments Off on யார் இந்த பாஜக இளம் மாநில செயலாளர்?

பா.ஜ.க வரலாற்றிலேயே இளம் மாநில செயலாளராகி உச்சத்தை தொட்டுள்ளார் SG சூர்யா. மோடியுடன் பயணம், மேலிட தலைவர்களிலிருந்து, அமைச்சர்கள் வரை அனைவரிடமும் மிகவும் நெருக்கமாக இருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் பட்டியல் வெளியாகி உள்ளது. தலைவர் அண்ணாமலைக்கும் மூத்த தலைவர்களுக்கும் நடந்த போர் ஒரு வழியாக முடிந்துள்ளது. 2024 தேர்தலை சந்திக்க தனது அணியை வலுவாக நியமித்து அரசியல் பிரவேசத்தை துவங்கி இருக்கிறார் அண்ணாமலை. 11 துணைத் தலைவர்கள், 5 பொதுச்செயலாளர்கள், 13 […]

Continue reading …

மின் உற்பத்தியை நிறுத்தியது தூத்துக்குடி அனல் மின் நிலையம்!

Comments Off on மின் உற்பத்தியை நிறுத்தியது தூத்துக்குடி அனல் மின் நிலையம்!

4 அலகுகளில் 840 மெகாவாட் மின் உற்பத்தி தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 3 வது யூனிட்டில் மட்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் அனல் மின் நிலையத்தில் சுமார் 80 ஆயிரம் டன் நிலக்கரி இருப்பில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue reading …

முதலமைச்சர் கண்ணையா குடும்பத்திற்கு நிவாரணம்- அறிவிப்பு

Comments Off on முதலமைச்சர் கண்ணையா குடும்பத்திற்கு நிவாரணம்- அறிவிப்பு

சென்னை ஆர்.ஏ. புறம் கோவிந்தசாமி நகர் இளங்கோ தெருவில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்துவரும் மக்களின் 259 கல் வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் ஆக்கிரமிப்பில் உள்ளதாகக் கூறி அதனை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதனை அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்த்துவந்த சூழலில் இன்று காலை கண்ணையன் (வயது 60) என்ற முதியவர் வீடுகள் இடிப்பதை கண்டித்து ‘இந்த ஜனங்களை காப்பாத்துங்க’ என்று முழங்கிக்கொண்டு தீக்குளித்துள்ளார்.   இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]

Continue reading …

ஜெயகுமார் கைது குறித்து முதலமைச்சர் விளக்கம்

Comments Off on ஜெயகுமார் கைது குறித்து முதலமைச்சர் விளக்கம்

ஜெயக்குமார் கைது கள்ள ஓட்டு போட்ட நரேஷ் குமார் என்பவரை தாக்கியதால் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நரேஷ் குமாரை தாக்கியதால் ஜெயக்குமார் கைது செய்யப்படவில்லை என்று கூறியிருக்கிறார். இதுகுறித்து விளக்கமளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “பொது மக்களுக்கு இடையூறாக மறியலில் ஈடுபட்டதாலும், நில அபகரிப்பு வழக்கு தொடர்பாகவும் தான் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். நரேஷ்குமார் தாக்கியதால் கைது செய்யப்படவில்லை” என்று விளக்கம் அளித்துள்ளார். இந்த விளக்கம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மூன்று வழக்குகளில் […]

Continue reading …