
பக்தர்கள் நீண்ட வரிசையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 5 கி.மீ. தூரம் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமியை தரிசித்து வருகின்றனர். தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்து வருகின்றனர். கோடை விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். இதனால் சுவாமி தரிசனத்துக்கு பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இன்று சனிக்கிழமை என்பதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் […]
Continue reading …
கிராம பஞ்சாயத்து கணினி ஆபரேட்டர் விவசாயிகளுக்கு அரசின் வருவாய் ஆவணங்களை வழங்க 5 ரூபாய் லஞ்சம் பெற்றதாக ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் ஜாம்நகரிலுள்ள மோர்கண்டா கிராமத்தில் பஞ்சாயத்து போர்டு அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் கணினி ஆபரேட்டராக பணியாற்றியவர் நவீன் சந்திரா நகும் (46). இவரிடம் அரசின் வருவாய் ஆவணங்களைக் கேட்டு விவசாயிகள் மனு செய்தனர். அவர்களிடம் ஆவணங்களை வழங்க நவீன் சந்திரா 5 ரூபாய் லஞ்சம் கேட்டதாக […]
Continue reading …
அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக ஆம் ஆத்மி கட்சியின் எம்பி ஸ்வாதி மாலிவால் அளித்த புகாரின் பேரில் டில்லி போலீசார் கைது செய்தனர். கடந்த ஏப்ரல் மாதம் மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக டில்லி மாநில முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து வீடு திரும்பிய முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலை நேரில் சந்திப்பதற்காக அக்கட்சியின் எம்பியான […]
Continue reading …
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரான நிதின் கட்கரி அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பை எந்த அரசாங்கத்தினாலும் மாற்ற முடியாது என்று தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், அரசியலமைப்பில் மாற்றங்கள் செய்யப்படுவது குறித்து பேசியதாகவும் பல பாஜக தலைவர்களும் இதே போன்று பேசியும் பிரதமர் நரேந்திர மோடி மவுனமாக இருந்து வருவதாகவும் காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்திருந்தார். அரசியலமைப்பிற்கு எதிராக பேசுபவர்கள் மீது பிரதமர் […]
Continue reading …
திருச்சி விமான நிலையத்தில் திருவனந்தபுரத்திலிருந்து பெங்களூரு நோக்கி சென்ற விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதால் தரையிறக்கப்பட்டுள்ளது. இன்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து பெங்களூரு நோக்கி சென்றது. இந்த விமானத்தில் 167 பயணிகள் பயணித்த நிலையில், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த விமானிகள் இருவரும், திருச்சி விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க முடிவு செய்தனர். இதையடுத்து திருச்சி விமான நிலையம் […]
Continue reading …
சுற்றுலா பயணிகள் தென்காசியில் உள்ள பழைய குற்றால அருவியில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிறுவன் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் கோடை விடுமுறை காரணமாக பலரும் பல ஊர்களுக்கு சுற்றுலா சென்று வருகின்றனர். கோடை மழையும் பிடித்துள்ளதால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு வருகிறது. இன்று தென்காசியில் உள்ள பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பலரையும் தள்ளத் தொடங்கியுள்ளது. […]
Continue reading …
பராமரிப்பு பணிகள் காரணமாக கடற்கரையிலிருந்து தாம்பரம் இடையே இயக்கப்படும் 15 ரயில்கள், மே-18, 19 தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதேபோல், செங்கல்பட்டிலிருந்து கடற்கரைக்கு இயக்கப்படும் 8 ரயில்களின் சேவை பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Continue reading …
அக்னி நட்சத்தில் பொதுவாக வெயில் கொளுத்தும். ஆனால், இந்த ஆண்டு வித்தியாசமாக கோடை காலத்தில் தமிழக முழுவதும் ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. தற்போது கடந்த இரண்டு நாட்களாக கனமழை மற்றும் மிக கன மழை பெய்து வருகிறது. சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், அரியலூர், […]
Continue reading …
“காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள்” என்று ஓடும் காரிலிருந்து 15 வயது சிறுமியின் கூச்சல் கேட்டு பொதுமக்கள் போலீசில் புகார் செய்துள்ள சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது. போலீஸ் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. சென்னை தி.நகர் அருகே ஓடும் காரில் திடீரென ஒரு சிறுமி உதவி கேட்டு கூக்குரல் எழுப்பினார். இதையடுத்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த கார் சென்ற பாதையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அந்த காருக்கு உரியவர் மகேந்திரன் என்பதை கண்டுபிடித்தனர். அவரிடம் […]
Continue reading …
பிரதமர் மோடி காங்கிரஸ் ஆட்சியில் அமலாக்கத்துறை ‘யூஸ்லெஸ்’லாக இருந்தது, தற்போது திறம்பட செயல்படுகிறது. எனது ஆட்சியில் ரூ.2200 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளது என்று கூறினார். எதிர்கட்சிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பாஜ பயன்படுத்துவதாக குற்றம் எழுந்துள்ளதற்கு பிரதமர் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர், “அமலாக்கத்துறை என்பது முன்பு (காங்கிரஸ்ஆட்சியில்) ‘யூஸ்லெஸ்’லாக இருந்தது. பா.ஜனதா ஆட்சியில் தான் அது திறமையாக செயல்படவே துவங்கியது. அமலாக்கத்துறை தனது பணிகளை செய்கிறது. 2004 முதல் 2014 வரை சட்டமும், நடைமுறைகளும் ஒன்று தான். […]
Continue reading …