சென்னை அண்ணா சாலையில் முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்களுக்கு சிலை வைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். இதனால் தமிழக முதமைச்சருக்கு பாராட்டு தெரிவித்து கவியரசு வைரமுத்து தனது டுவிட்டரில் கவிதை எழுதியுள்ளார். அந்த கவிதையில் தமிழ்நாட்டு அரசியல் நெடுங்கணக்கில் முன்னெப்போதுமில்லாத முதல் நிகழ்வு முதலமைச்சராகத் தலையெடுத்த தனயன் முதலமைச்சராகிய தந்தைக்குச் சிலையெடுப்பது எட்டிய தரவுகள் வரை இந்தியாவிலும் இதுவே முதல் என்று தோன்றுகிறது முன்னவர் பின்னவர் இருவரையும் […]
Continue reading …இந்தியில் சூரரைப் போற்று திரைப்படம் தற்போது ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பில் உருவான “சூரரைப்போற்று” திரைப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றிக் கண்டது. இத்திரைப்படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு தொடங்குகிறது. சூர்யா கேரக்டரில் அக்சய்குமார் நடிக்க இருப்பதாகவும் அபர்ணா பாலமுரளி கேரக்டரில் ராதிகா மதன் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பதாகவும் இந்நிறுவனம் தயாரிக்கும் முதல் […]
Continue reading …இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அயோத்தியா மண்டப நிர்வாகத்தை எடுத்த அறநிலைய உத்தரவை எதிர்த்த மேல் முறையீடு வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையில் அயோத்தியா மண்டபத்தை அரசு எடுத்த உத்தரவையும், அதை உறுதி செய்த தனி நீதிபதி உத்தரவும் ரத்து செய்யப்படும் எனவும் நீதிபதிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் ஸ்ரீராம் சமாஜம் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பை நாளை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்தது. குற்றச்சாட்டுகள் குறித்த ஆதாரங்களை வழங்கி விசாரணை நடத்தலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. […]
Continue reading …மகாராஷ்டிர மாநிலத்தில் ஓலா பைக் வாங்கி வெறும் ஆறு நாட்களே ஆனதை அடுத்து அந்த பைக்கை கழுதையில் கட்டி ஊர்வலம் எடுத்துச் சென்ற நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் ஓலா பைக்கை வாங்கியுள்ளார். அவர் வாங்கிய 6 நாட்களில் அந்த பைக் ரிப்பேர் ஆகிவிட்டது. இதனையடுத்து அவர் சர்வீஸ் சென்டருக்கு புகார் அளித்துள்ளார். ஆனால் அந்நிறுவனத்திடமிருந்து எந்தவித பதிலும் வரவில்லையாம். இதனையடுத்து ஆத்திரமடைந்த அந்த நபர் […]
Continue reading …தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் கட்டுமான தொழிலாளர் நல வாரிய பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு உதவித்தொகை ஆறாயிரத்திலிருந்து பதினெட்டாயிரமாக உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார். இன்று சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் விபத்தில் சிக்கிய கட்டுமான தொழிலாளர்களுக்கான உதவித்தொகை ஒரு லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் எனவும் அறிவிப்பு செய்துள்ளார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் அவர்களின் இந்த அறிவிப்பை அடுத்து கட்டுமான தொழிலாளர் நல வாரிய பெண் தொழிலாளர்கள் தங்களது நன்றியை தமிழக அரசுக்கு […]
Continue reading …பிரதமர் மோடியை அண்ணல் அம்பேத்காருடன் ஒரு புத்தகத்திற்கு எழுதிய அணிந்துரையில் இளையராஜா ஒப்பிட்டு எழுதியது அனைவரின் மத்தியிலும் பேசப்பட்டு வருகிறது. வரிபாக்கி ரூ.1.87 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என்று இசைஞானி இளையராஜாவுக்கு ஜிஎஸ்டி ஆணையகரம் இறுதி நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நோட்டீஸ் அவருக்கு மார்ச் 21ம் தேதி புலனாய்வுத்துறையில் இருந்து அனுப்பட்டுள்ளது. அதே காரணங்களைக் குறிப்பிட்டு, மார்ச் 28ம்தேதி காலை 11 மணிக்கு ஜிஎஸ்டி புலனாய்வு அலுவலகத்த்துறை தலைமை இயக்குனர் […]
Continue reading …கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் களமிறங்கிய ரிஷி தவான் 4 ஓவர்கள் பந்துவீசி 39 ரன்கள் கொடுத்து இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். கடைசி ஓவரை சிறப்பாக வீசி வெற்றியைத் தக்கவைத்தார். நேற்று நடைபெற்ற போட்டியில் மீண்டும் தோற்று சென்னை ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது சி.எஸ்.கே. அணி. இந்த போட்டியிலும் கடைசி ஓவர் வரை பரபரப்பாக செல்ல கடைசி ஓவரில் தோனியின் விக்கெட்டைக் கைப்பற்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் ரிஷி தவான். நேற்று நடைபெற்ற போட்டியில் […]
Continue reading …மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என கூறினார். ஏற்கனவே ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச இணைப்பு வழங்கப்படும் என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று சட்டமன்றத்தில் கூறியுள்ளார். தமிழக அரசு விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என்பது இந்த அறிவிப்பில் இருந்து தெரியவருகிறது என அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Continue reading …தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி ரேசன் கடைகளில் கண் கருவிழி சரிபார்க்கும் முறை முன்னோட்டத் திட்டமாகச் செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். தமிழக சட்டபபேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று ரேசன் கடைகளில் உணவுப்பொருள் வழங்கல் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்து பேசிய தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி, ரேசன் கடைகளில் உள்ள சரிபார்க்கும் கருவியில் விரல் ரேசனை பதிவு செய்வதில் சில நேரங்களில் தோல்வி ஏற்படுவதாகவும் அப்போது, கையெழுத்துப் பெற்று பொருட்கள் வழங்கப்படுவதாககவும் கூறினார்.
Continue reading …மருத்துவக் கல்வி இயக்ககம் தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்துக் கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளது. வட மாநிலங்கள் மற்றும் சென்னை ஐஐடி வளாகத்தில் கொரோனா பரவல் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவம் மற்றும் செவிலிய மாணவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்றும், தடுப்பூசி முகாம்களின் செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்றும் மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா 4வது அலையை தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக […]
Continue reading …