இன்று சசிகலாவிடம் அதிகாரிகள் கொடநாடு எஸ்டேட் கொலை கொள்ளை வழக்கு குறித்து 4 மணி நேரம் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே கொடாநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை கொள்ளை குறித்த வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே இந்த வழக்கில் பல பிரமுகர்களிடம் விசாரணை நடந்துள்ளது. அதைத் தொடர்ந்து இன்று சசிகலாவிடம் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் விசாரணை செய்தனர். கொடநாடு எஸ்டேட் எப்போது வாங்கப்பட்டது, எத்தனை பேர் பணி […]
Continue reading …மத்திய அமைச்சர் நிதின் கட்காரி எலக்ட்ரிக் வாகனங்களில் அடிக்கடி தீப்பிடிப்பதற்கான காரணத்தை அறியும் குழு ஒன்றை அமைக்க போவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்த உண்மை நிலையை கண்டறிந்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு பணியில் அலட்சியம் காட்டக்கூடாது என்றும் அவ்வாறு காட்டப்பட்டது தெரியவந்தால் நிறுவனங்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். குறைபாடு உள்ள எலக்ட்ரிக் வாகனங்களை திரும்பப்பெறும் நடவடிக்கைகளை நிறுவனங்கள் தொடங்கலாம் என்றும் அவர் […]
Continue reading …ஜெயம் ரவி நடிப்பில் வடசென்னை குத்துச் சண்டையை மையமாக வைத்து உருவான திரைப்படம் “பூலோகம்.” இத்திரைப்படத்தை எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளர் கல்யாண் கிருஷ்ணன் இயக்க, ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்திருந்தார். இவர்கள் இரண்டாம் முறையாக இணையும் இந்த படம் ஒரு கேங்ஸ்டர் படம் என சொல்லப்படுகிறது. இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியுள்ளார். இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி ஈழத் தமிழராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஜெயம் ரவி நடிப்பில் அஹ்மத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் […]
Continue reading …புதுவை : வி.எச்.என். செந்திகுமார நாடார் தன்னாட்சி கல்லூரியில் “தாவரத்தின் சமீபத்திய போக்குகள் மற்றும் சவால்கள்” என்ற தலைப்பில் நடைபெற்ற தேசிய மாநாட்டில், புதுவைப் பல்கலைக்கழகத்தின் உயிர் தகவலியல் துறை பேராசிரியர். அ. தினகர ராவுக்கு தாவர அறிவியலில் அவரது பங்களிப்பிற்காக தாவர ஆராய்ச்சிக்கான சங்கத்தின் (SPR) மதிப்புமிக்க ‘புகழ்பெற்ற விஞ்ஞானி’ விருது வழங்கப்பட்டது. பேராசிரியர் அ.தினகர ராவ் இருபதாண்டுகளுக்கும் மேலாக தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர் தகவலியல் துறையில் பணிபுரிந்து வருகிறார். மேலும் தாவர […]
Continue reading …இன்று ஐபிஎல் தொடரின் 33வது போட்டியில் மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் நிலையில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீசியதை அடுத்து சற்று முன் மும்பை அணி பேட்டிங்கில் களமிறங்கி உள்ளது. முதல் ஓவரில் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் ஆகிய இருவரும் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். இரண்டு பேர்களும் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனது மும்பை அணிக்கு பெரும் சோகமாக ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் […]
Continue reading …வரும் ஏப்ரல் 29ம் தேதி அன்று திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேரோட்டம் ஏப்ரல் 29ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேரோட்டத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீரங்கம் கோயில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு ஏப்ரல் 29ம் தேதி உள்ளூர் விடுமுறை என திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார். இதனையொட்டி அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள் […]
Continue reading …எம்எல்ஏ ஒருவர் பிரதமர் மோடியை விமர்சனம் செய்த காரணத்தினால் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடியை விமர்சனம் செய்து டுவிட் செய்த குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானியை அசாம் மாநில போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று இரவு 11 மணிக்கு அவரது இல்லத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். இது குறித்து காவல்துறையினர் அளித்த விளக்கத்தில் குஜராத் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர் மேவானி, பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு […]
Continue reading …சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ “எனது காரை தாராளமாக எடுத்துச் செல்லுங்கள். ஆனால் தயவுசெய்து கமலாலயம் மட்டும் சொல்லாதீர்கள்” என பேசியது அங்கு இருப்பவர்கள் மத்தியில் கலகலப்பை கூட்டியது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உதயநிதியின் காரில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஏற முயன்றார். இதனை அடுத்து அவர் சுதாரித்து தனது காரில் சென்றார். அதேபோல் எடப்பாடி பழனிச்சாமி காரிலும் தான் ஏற முயன்றதாக கூறிய உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய காரை நீங்கள் தாராளமாக எடுத்துச் […]
Continue reading …செவாலிய அவர்களின் டாக்டர் ஜி.எஸ் பிள்ளை ஐயா நினைவாக 2022 ஆம் ஆண்டிற்கான பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகள் 11.04-2022 தொடங்கியது, இப்போட்டிகளில் நாகப்பட்டினம் காரைக்கால், தஞ்சை, சென்னை, காஞ்சிபுரம் முதலிய மாவட்டத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டன, வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அவை சதரங்கபோட்டி ஆண்கள் பிரிவில் முதலிடம் நபராஜன் தமயந்தி உயர்நிலைப்பள்ளி நாகை, இரண்டாமிடம் அரசு உயர்நிலைப்பள்ளி பேரளம், மூன்றாமிடம் அரசினர் மேல்நிலைப்பள்ளி நாககுடையன், சதரங்க பெண்கள் பிரிவில் முதலிடம் கிரஸண்ட் […]
Continue reading …இயக்குனர் பாக்யராஜ் இன்று காலை நடந்த புத்தக வெளியீட்டுவிழாவில். “மோடியை விமர்சனம் செய்பவர்கள் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள்” என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டிசம்பர் 3’ இயக்கம் “கே பாக்யராஜ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும், அரசியல் எதிரிகளை தாக்குவதற்காக மாற்றுத்திறனாளிகளை பயன்படுத்துவது ஒரு போக்காக மாறிவிட்டது” என்று தெரிவித்த நிலையில் தனது கருத்துக்கு பாக்கியராஜ் மன்னிப்பு கோரியுள்ளார் என டிசம்பர் 3’ இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர். அரசியல் எதிரிகளை தாக்குவதற்காக மாற்றுத்திறனாளிகளை […]
Continue reading …