மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். பக்தர்களின் கோவிந்தா கோஷங்களுக்கு இடையே கோலாகலமாக நடந்தது அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம். லட்சக்கணக்கான மக்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர். வைகை ஆற்றில் அழகருக்கு முடியிறக்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். சிலர் கருப்பசாமி வேடமிட்டு திரிபந்தம் ஏந்தி ஆட்டம் ஆடி நேர்த்திக் கடன் செலுத்தினர். அழகருக்கு சொம்பில் சர்க்கரை நிரப்பி தீபம் ஏற்றி மக்கள் வழிபட்டனர். தோல் பைகளில் தண்ணீர் நிரப்பி பக்தர்கள் மீது […]
Continue reading …பக்தர்களுக்கு கள்ளழகர் எழுந்தருளல் திருவிழாவில் வைகையில் இறங்க அனுமதி இல்லை. மதுரையில் நாளை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிலையில் இந்த வைபவத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற மாவட்ட ஆட்சித்தலைவரின் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய பகுதிகளில் ஒன்றான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வழிபடும் பக்தர்கள் மத்தியில் புகழ்பெற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு வைகை ஆற்றில் அழகர் இறங்கும் வைபவத்தை காண பக்தர்களுக்கு அனுமதி […]
Continue reading …முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திருமுல்லைவாயலில் குடியிருக்கும் நரிக்குறவர் இன மக்களை சந்தித்தார். அப்போது அவர் குறவர் இன மக்களுக்கு குடும்ப அட்டைகள், முதியோர் உதவித்தொகை உதவிகளையும் வழங்கினார். அதன்பிறகு மு.க.ஸ்டாலின் ஆவடி பஸ்நிலையம் அருகில் உள்ள நரிக்குறவர் குடியிருப்புக்கு சென்றார். அங்கு புதிதாக அமைக்கப்பட்ட உயர் கோபுர விளக்குகள் மற்றும் குடிநீர் குழாயை திறந்து வைத்தார். பின்னர் நரிக்குறவர் மாணவிகளுடன் கலந்துரையாடினார். இது மட்டுமின்றி அங்கு மாணவிகளின் வீட்டில் இட்லி மற்றும் வடை சாப்பிட்டு மாணவிகளுக்கு […]
Continue reading …முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலங்கை தமிழருக்கு உதவிட கோரி மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இருக்கும் நிலையில் இலங்கையில் உள்ள தமிழர்கள் உள்பட இலங்கை மக்கள் கடும் அவதியில் உள்ளனர். இந்த நிலையில் இலங்கைக்கு தேவையான உதவிகளை இந்தியா அவ்வப்போது செய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்ப […]
Continue reading …எம்.பி.அன்புமணி 25 மருத்துவ இடங்கள் யாருக்கும் பயனில்லாமல் போனது என்பது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். “அகில இந்திய தொகுப்புகளில் தமிழகத்திற்காக ஒதுக்கப்பட்ட 24 இடங்கள் நிரப்பப்படவில்லை என்பதால் அந்த இடங்கள் யாருக்கும் பயன்படாமல் போனது” என பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் தனது சமூக வலைத்தளத்தில் வருத்தத்தோடு தெரிவித்துள்ளார். அவரது பதிவில், “மருத்துவ மாணவர் சேர்க்கை நிறைவடைந்து விட்ட நிலையில், தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்பட்ட 812 இடங்களில் […]
Continue reading …இசைஞானி இளையராஜா பாரத பிரதமர் மோடியை அண்ணல் அம்பேத்கருக்கு நிகரானவர் என்று புகர்ந்துள்ளார். ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து பல விருதுகளைப் பெற்றுள்ளார் இசைஞானி இளையராஜா. சமீபத்தில் மோடியும், அம்பேத்கரும் என்ற புத்தகம் வெளியாகியுள்ளது. இந்தத புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய இசைஞானி, “இந்தியா தற்போது, கல்வித்துறை, தொழில்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டுள்ளது. குழந்தைகளைக் காப்போம், குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டம் மற்றும் முத்தலாக் முறைக்கு எதிரான சட்டம் […]
Continue reading …உயர்நீதிமன்றம் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பால் சுருங்கி வருகிறது என்று வேதனையை தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்றத்தில் இன்று பெத்தேல் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் தொடர்ந்து வழக்கை தள்ளுபடி செய்தது. அப்போது, “அரசு நிலங்களைப் பாதுகாப்பு வருவாய் துறை அதிகாரிகள் கடமை, ஆக்கிரமிப்புகளைத் தடுக்காததால் அரசு நிலங்களின் பரப்பளவு சுருங்கி வருகிறது. ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு நீதிமன்றம் உதாவது” என்று தெரிவித்துள்ளது.
Continue reading …டெல்லியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா- கலைஞர் அறிவாலயத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைத்தார். கோலாகலமாக நடைபெறும் திறப்பு விழாவில், மத்திய அமைச்சர்கள், சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள்பட பல கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். கட்சி அலுவலகத்திற்கு வந்தடைந்த மு.க.ஸ்டாலின் சோனியா காந்தி அவர்களுக்காக காத்திருந்தார். சற்று நேரத்தில் வந்தடைந்த சோனியா காந்தியை வரவேற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியா காந்தி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். அண்ணா சிலையை திறந்து வைத்தார் […]
Continue reading …ஜியோமி நிறுவனம் இந்தியாவில் விரைவில் ஜியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜியோமி 12 ப்ரோ சிறப்பம்சங்கள்: * 6.73–inch WQHD+ (1,440×3,200 pixels) E5 AMOLED டிஸ்பிளே, * 1500 nits பிரைட்னஸ், 480Hz டச் சாம்பிளிங் ரேட், 120 Hz டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட் * Snapdragon 8 Gen 1 SoC, 12TH LPDDR5 ரேம், * Sony IMX707 சென்சார் கொண்ட 50 மெகாபிக்ஸல் பிரைமரி […]
Continue reading …பள்ளிக்கல்வித்துறை வரும் கல்வியாண்டில் வகுப்புகள் தொடங்கும் தேதியை அறிவித்துள்ளது. 2022-23 கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜூன் 13ம் தேதி தொடங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 24ம் தேதி தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு பொதுத் தேர்வுகள் தாமதமாக நடைபெறுவதால் ஜூன் 13ம் தேதி அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கப்படுகிறது.
Continue reading …