Home » Posts tagged with » Netrikkan (Page 549)

கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவுகள் குறித்து கேரள முதல்வரிடம் பிரதமர் பேச்சு!

Comments Off on கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவுகள் குறித்து கேரள முதல்வரிடம் பிரதமர் பேச்சு!

கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவு நிலவரம் குறித்து கேரள முதல்வர் பினராய் விஜயனிடம், பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புக்கும் பிரதமர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். இது குறித்து பிரதமர்  வெளியிட்ட தொடர் சுட்டுரையில் கூறியிருப்பதாவது : கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவு நிலவரம் குறித்து கேரள முதல்வர் பினராய் விஜயனுடன் ஆலோசித்தேன். காயம் அடைந்தவர்களுக்கும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் களத்தில் உள்ள அதிகாரிகள் உதவி வருகின்றனர். அனைவரின் […]

Continue reading …

1.75 கோடி மதிப்பீட்டில் புதிய சாலைப் பணிகள் – தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு!

Comments Off on 1.75 கோடி மதிப்பீட்டில் புதிய சாலைப் பணிகள் – தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு!

பெருநகர சென்னை மாநகராட்சியால் 387 கி.மீ. நீளமுள்ள 471 போக்குவரத்து சாலைகளும், 5270 கி.மீ. நீளமுள்ள 34640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது.  இச்சாலைகளில் நாள்தோறும் தூய்மைப் பணியாளர்கள் மூலம் துப்புரவு பணிகள் மற்றும் சேதமடைந்த சாலைகளை கண்டறிந்து சீரமைத்து சரிசெய்தல் போன்ற பல்வேறு பணிகள் மாநகராட்சியின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், சர்தார் வல்லபாய் பட்டேல் சாலையில் 1.08 கி.மீ. நீளத்தில் ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை […]

Continue reading …

கிறிஸ்துவ வன்னியர்களை MBC(V) பிரிவினில் சேர்த்து சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும் – காடுவெட்டி குரு மகள் கோரிக்கை!

Comments Off on கிறிஸ்துவ வன்னியர்களை MBC(V) பிரிவினில் சேர்த்து சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும் – காடுவெட்டி குரு மகள் கோரிக்கை!

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து தற்போது நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத அரசாணையை வெளியிட்டதால் அதன் பயனை உணர்ந்த ஒட்டுமொத்த வன்னியர் சமுதாயமும் திராவிட முன்னேற்றக் கழகக் தலைமையிலான கூட்டணி அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்  என்பதை முதல்வரிடம் கூறி,  என்றும் வன்னியர் சமுதாயம் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணிக்கு உறுதுணையாக இருக்கும் என்று காடுவெட்டி குரு மகள் விருத்தாம்பிகை மற்றும் மருமகன் மனோஜ் கோரிக்கை வைத்தனர். மேலும் […]

Continue reading …

குப்பை கொட்டினால் ரூ.5000 அபராதம்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!

Comments Off on குப்பை கொட்டினால் ரூ.5000 அபராதம்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகளை கொட்டினால் ரூபாய் 100 முதல் 5000 வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.  சென்னை மாநகராட்சி கடந்த சில நாட்களாக சென்னையை தூய்மைப்படுத்தும் பணியை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் நீர்வள தடங்கள் மற்றும் பொது இடங்கள் ஆகிய பகுதிகளில் குப்பைகளை கொட்டினால் 100 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.  […]

Continue reading …

பாஜக சீமானை களமிறக்கியிருக்கிறது : எச்சரிக்கும் எம்.பி ஜோதிமணி!

Comments Off on பாஜக சீமானை களமிறக்கியிருக்கிறது : எச்சரிக்கும் எம்.பி ஜோதிமணி!

சீமான் ஒரு பாஜக அடிவருடி என்று காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியும் கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ஜோதிமணி எம்.பி கடுமையாக சாடியுள்ளார். சீமான் குறித்து ஜோதிமணி ட்விட்டரில் பதிவிட்டதாவது :   சீமான் ஒரு பாஜக அடிவருடி, பாஜக வெறுப்பு புரையோடிக்கிடக்கும், கல்வி,வேலைவாய்பு, தொழில், சமூகநீதியை முன்னிறுத்தும் தமிழகத்தில், தன்னால் நேரடியாக களமிறங்கி மத, கலவர அரசியலை செய்ய முடியவில்லை என்பதால் பாஜக சீமானை களமிறக்கியிருக்கிறது. எச்சரிக்கை தேவை என தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் நடந்த கூட்டத்தில் சீமான் […]

Continue reading …

ஐபிஎல் கோப்பையை வாங்கியவுடனே இளம் வீரரிடம் கொடுத்த அழகு பார்த்த டோனி!

Comments Off on ஐபிஎல் கோப்பையை வாங்கியவுடனே இளம் வீரரிடம் கொடுத்த அழகு பார்த்த டோனி!

கொல்கத்தா அணிக்கெதிரான இறுதிப் போட்டி வெற்றிக்கு பின் கோப்பையை வாங்கிய டோனி, இளம் வீரர் தீபக் சஹாரிடம் கொடுத்து அழகு பார்த்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடரின் நேற்றைய இறுதிப் போட்டியில் டோனி தலைமையிலான சென்னை அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின. இப்போட்டியில் சென்னை அணி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில், போட்டி முடிந்த பின்பு, கோப்பை அணியின் கேப்டன் […]

Continue reading …

எண்ணெய் கப்பல் மீதான கடற்கொள்ளையர்களின் தாக்குதலை முறியடித்த ஈரான்!

Comments Off on எண்ணெய் கப்பல் மீதான கடற்கொள்ளையர்களின் தாக்குதலை முறியடித்த ஈரான்!

நடுக்கடலில் ஈரானின் எண்ணெய் கப்பல் மீதான கடற்கொள்ளையர்களின் தாக்குதலை ஈரான் கடற்படை முறியடித்துள்ளது. கப்பல் போக்குவரத்திற்கு ஒரு முக்கிய நீர்வழி பாதையாக திகழும் ஏடன் வளைகுடாவிலே இச்சம்பவம் நடந்துள்ளது. ஏடன் வளைகுடாவில் பயணித்துக்கொண்டிருந்து ஈரானின் எண்ணெய் கப்பலை, ஐந்து அதிவேக படகுகளில் வந்த கடற்கொள்ளையர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனையடுத்து, ஈரான் கடற்படையிடமிருந்து சரமாரியான துப்பாக்கிச் சூட்டை எதிர்கொண்ட கடற்கொள்ளையர்கள், அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். ஏடன் வளைகுடாவில் ஈரான் கப்பல் குறிவைக்கப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆகஸ்ட் […]

Continue reading …

ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மரியாதை!

Comments Off on ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மரியாதை!

நான்கரை ஆண்டுகளுக்கு பிறகு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு நேரில் சென்ற வி.கே.சசிகலா கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினார். சென்னை தி.நகர் இல்லத்தில் இருந்து ஜெயலலிதா நினைவிடத்திற்கு அதிமுக கொடி கட்டிய காரில் புறப்பட்ட சசிகலாவுக்கு, வழியெங்கும் அதிமுக கொடியுடன் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு வழங்கினர். ஒருபக்கம் அதிமுகவின் பொன் விழா கொண்டாட்டங்களை அதிமுக தலைவர்கள் நடத்தி வரும் நிலையில் இன்னொரு பக்கம் சசிகலா தீவிர அரசியலில் களமிறங்க இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் […]

Continue reading …

ஈஷாவில் நவராத்திரி விழா அக்.7-ம் தேதி தொடக்கம்!

Comments Off on ஈஷாவில் நவராத்திரி விழா அக்.7-ம் தேதி தொடக்கம்!

ஈஷாவில் உள்ள லிங்க பைரவியில் நவராத்திரி திருவிழா அக்.7-ம் தேதி முதல் அக்.15-ம் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளதுஈஷாவில் உள்ள லிங்க பைரவியில் நவராத்திரி திருவிழா அக்.7-ம் தேதி முதல் அக்.15-ம் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது.  இதையொட்டி, அக். 8, 9, 10, 12, 15 ஆகிய தினங்களில் சம்ஸ்கிரிதி மாணவர்களின் சிறப்பு கலை நிகழ்ச்சிகள்  லிங்க பைரவி யூ- டியூப் சேனலில் மாலை 6.45 மணிக்கு நேரலை ஒளிப்பரப்பு செய்யப்படும். இதில் […]

Continue reading …

நெல் கொள்முதல் நிலையங்களில் கட்டாய இணையவழி பதிவு முறையை ரத்து செய்க – சீமான்!

Comments Off on நெல் கொள்முதல் நிலையங்களில் கட்டாய இணையவழி பதிவு முறையை ரத்து செய்க – சீமான்!

அறுவடை செய்த நெல்லை நெல் கொள்முதல் நிலையங்களில் விற்க இணைய வழியில் முன்பதிவு செய்யவேண்டும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே போதிய அளவில் நெல் கொள்முதல் நிலையங்கள் இன்றி விளைந்த நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் தவித்து வரும் நிலையில், எவ்வித முன்னறிவிப்புமில்லாத இந்த திடீர் உத்தரவு தமிழக அரசின் நிர்வாகச் சீர்கேட்டையே வெளிப்படுத்துகிறது. அடுத்த சில நாட்களில் தமிழகத்தில் பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், அறுவடை செய்த […]

Continue reading …