தமிழகம் முழுவதும் இன்று (03.10.2021) நடைபெற்ற நான்காவது மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாம்களை காலை 7 மணி முதல் தேனி, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய 3 மாவட்டங்களில் ஆய்வு செய்தார். தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 24,882 மையங்களில் நடைபெற்றது. இம்மையங்களில் 18 வயதிற்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசி அளிக்க திட்டமிடப்பட்டது. முதலாவது மாபெரும் கோவிட் […]
Continue reading …இந்திய யோகா சங்கத்தின் நிர்வாகக் குழு, இச் சங்கத்தின் உச்ச அமைப்பாகும். இதில் காயத்ரி பரிவாரின் டாக்டர் பிரணவ் பாண்டியா, ஈஷா அறக்கட்டளையின் நிறுவனராகிய சத்குரு ஜக்கி வாசுதேவ், சாந்தா குரூஸ் யோகா நிறுவனத்தின் டாக்டர் ஹன்சா யோகேந்திரா, ரிஷிகேஷ் பரமார்த் நிகேதனின் சுவாமி சித்தானந்த் சரஸ்வதி, கைவல்யதாமா யோகா நிறுவனத்தின் தலைவராக தற்போது உள்ள எஸ். ஓபி திவாரி, சஹாஜ் மார்க்கின் கமலேஷ் பட்டேல், மோக்ஷயாதன் யோக சன்ஸ்தானின் சுவாமி பாரத் பூஷன் மற்றும் மொரார்ஜி […]
Continue reading …நடிகர் சூர்யாவின் 39-வது படம் ஜெய் பீம், இப்படத்தை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கி உள்ளார். நடிகர் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை மற்றும் பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. நடிகர் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நடிகர் சூர்யா, தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படம் […]
Continue reading …நடிகை நயன்தாரா சமீபத்தில் தனது காதலருடன் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசானம் செய்தார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையதளங்களில் வைரலாகியது. இந்த நிலையில் நயன்தாராவை அடுத்து பிரபல நடிகை பிரியா ஆனந்த் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார், அவருக்கு கோவில் வளாகத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்கள் வழங்கினர்.
Continue reading …கொச்சின் துறைமுகத்தில் 15 நாள் தூய்மை பணி கடந்த செப்டம்பர் மாதம் 16ம் தேதி முதல் 30ம் தேதி வரை மேற்கொள்ளப்பட்டது. பணி செய்யும் இடங்கள், அலுவலக வளாகங்கள், படகுகள் மற்றும் இழுவை படகுகள், துறைமுகத்தின் பொது பகுதிகளை ஊழியர்கள் சுத்தம் செய்தனர். இதன் நிறைவு நாளான நேற்று, துறைமுக பகுதிக்குள் தூய்மையை பராமரிக்க ஊழியர்கள் மற்றும், வில்லிங்டன் தீவு பகுதியில் உள்ள இரண்டு மாநகராட்சி வார்டு ஊழியர்களுக்கு தூய்மை படுத்துவதற்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியை கொச்சி துறைமுக கழக […]
Continue reading …காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: ‘‘தேசத்தந்தை – மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்’’ அநீதிக்கு எதிராக புதிய போராட்ட வழியை, மகாத்மா காந்தி காட்டினார் – அது உண்மை மற்றும் அகிம்சை மற்றும் இது மனிதகுலத்தின் மீது ஒரு நிரந்தர முத்திரையை விட்டுச்சென்றது. சத்தியாகிரகம் மற்றும் அகிம்சை முறையில், […]
Continue reading …சென்னை, அக் 1: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் கூகுள் நிறுவனம் doodle வெளியிட்டுள்ளது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன், 1952ம் ஆண்டு பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கிய சிவாஜி கணேசன், இந்திய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 1999ம் ஆண்டு பூப்பறிக்க வருகிறோம் என்ற திரைப்படம்தான் அவரது கடைசி திரைப்படமாகும். நடிகர் திலகம் என அழைக்கப்படும் சிவாஜி கணேசன், […]
Continue reading …சோபியன், அக் 1: ஜம்மு – காஷ்மீரில், பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். ஜம்மு – காஷ்மீரின் சோபியன் மாவட்டத்தில், பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக, போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து, அப்பகுதியில், போலீசாரும், பாதுகாப்புப் படையினரும் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் சிலர், பாதுகாப்புப் படையினர் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு, நம் வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். பின், […]
Continue reading …புதுடெல்லி, அக் 1: நம் நாட்டில், கடந்த ஒரே நாளில், 26,727 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, மத்திய சுகாதாரத் துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், “நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில், 26,727 பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை, 3,37,66,707 ஆக உயர்ந்துள்ளது. 28,246 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து, கொரோனாவில் […]
Continue reading …புதுடில்லி, அக் 1: குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு பிரதமர் மோடி இன்று வாழ்த்து தெரிவித்தார். இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், கடந்த 1945ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி, உத்தர பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தார். வழக்கறிஞரான இவர், 1991ம் ஆண்டு, பாஜக கட்சியில் இணைந்தார். பின், 1994ம் ஆண்டு முதல், 2004ம் ஆண்டு வரை, ராஜ்யசபா எம்பியாக பதவி வகித்து வந்தார். பின், […]
Continue reading …