செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் கோட்டம் பல்லாவரம், அஸ்தினாபுரம், சேலையூர் உட்பட்ட பகுதிகளில் இன்று (26.09.2021) நடைப்பெற்று வரும் மாபெரும் மூன்றாவது தடுப்பூசி முகாமை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பல்லாவரம் நகராட்சியில் உள்ள நெமிலிச்சேரி ஏரியில் படர்ந்து இருந்த ஆகாய தாமரை அகற்றும் பணி மற்றும் ஏரியினை ஆழப்படுத்தி கரையை பலம்படுத்தும் பணியினை பார்வையிட்டார். செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்த மக்கள் தொகையானது 24.57 லட்சம் ஆகும். […]
Continue reading …25.09.2021: டாட்டா ஸ்டீல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநரும், இந்திய தொழில்நிறுவனக் கூட்டமைப்பின் தலைவருமான டி.வி. நரேந்திரன், தேசிய தொழில்நுட்ப கழகம், திருச்சிராப்பள்ளியின் (என்.ஐ.டி திருச்சி) 57 வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார். அவர் உரையாற்றுகையில், கற்றலுக்கு முடிவே இல்லை; ஒருவர் தனது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் கற்றுக்கொண்டே இருக்கின்றார் என்றார், அவர் மாணவர்களை விடாமுயற்சியுடன் தங்கள் கனவுகளைத் தொடருமாறு கூறினார். அவர் மாணவர்களை உறவுகளை கட்டமைக்கவும்,வளர்க்கவும், அவைளிடமிருந்து கற்றுக்கொள்ளவும் வலியுறுத்தினார். தான் […]
Continue reading …இந்தியாவில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை சாதிவாரியாக நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகவும், அத்தகைய கணக்கெடுப்புகளின் மூலம் துல்லியமான விவரங்களைத் திரட்ட முடியாது என்றும் மத்திய அரசு கூறியிருக்கிறது. அதுமட்டுமின்றி, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதில்லை என்று 1951-ஆம் ஆண்டே கொள்கை முடிவு எடுக்கப்பட்டு விட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த நிலைப்பாடு காலத்திற்கு சற்றும் பொருந்தாதது ஆகும். 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த ஆணையிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மராட்டிய அரசு […]
Continue reading …ஆவினும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதல்ல -ஆவின் தரம் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை ! தாய்ப்பாலுக்கு நிகரான பால் என தமிழக அரசால் விளம்பரப்படுத்தப்படும் ஆவின் பால் நிறுவனத்தில் மதுரை, சேலம், வேலூர் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் எடுக்கப்பட்ட சுமார் 10,295 பால் மாதிரிகளில் 51% பால் மாதிரிகள் அரை மணி நேரத்தில் கெட்டு விடக் கூடியதாக தரம் குறைந்து இருந்ததாக கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டுள்ள தணிக்கைத்துறை […]
Continue reading …சென்னை, செப் 25: “திமுக தேர்தல் அறிக்கையில் அளித்துள்ள முக்கிய வாக்குறுதிகளை 4 மாதங்களில் நிறைவேற்றி இருக்கிறோம்” என முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன், திமுக சார்பில், 500க்கும் அதிகமான வாக்குறுதிகள் மக்களுக்கு அளிக்கப்பட்டிருந்தது. தற்போது ஆட்சிக்கு வந்துள்ளதால், அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணியில் முதல்வர் ஸ்டாலின் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தமிழக அரசின் அனைத்து துறை செயலாளர்களிடமும், தாங்கள் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுமாறு, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். […]
Continue reading …சென்னை, செப் 25: மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று கடைபிடிக்கப்படுகிறது. தமிழ் திரைத்துறையில், பாடும் நிலா என அன்புடன் அழைக்கப்பட்ட எஸ்.பி. பாலசுப்ரமணியம், ரசிகர்களால் அதிகம் நேசிக்கப்பட்டவராக, அவர்களின் அன்பு மழையில் நனைந்து வந்தார். 1966ல் தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமான எஸ்.பி.பி, முதல் பாடலாக ஓட்டல் ரம்பா படத்தில் அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு என்ற பாடினார். ஆனால் அந்தப்படம் வெளிவரவில்லை. பின், 1966ல் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் சாந்தி […]
Continue reading …புதுடெல்லி, செப் 25: யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் மும்பை ஐ.ஐ.டி. இன்ஜினியரிங் பட்டதாரி சுபம்குமார் முதலிடம் பிடித்துள்ளார். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பதவிகளுக்கு அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. இது முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு என்று 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது. 2020ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு, கடந்த ஆண்டு அக்டோபர் 4ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வை நாடு […]
Continue reading …சென்னை, செப் 25: ‘வங்கக் கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் ‘குலாப்’ புயல் உருவாகும்’ என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், கடந்த சில மாதங்களாக வெப்பசலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தொடர்ந்து பல இடங்களில் மழை பெய்து வந்தது. இந்நிலையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக வலுப்பெற உள்ளதாக, இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்கக்கடலில் நிலை […]
Continue reading …புதுடெல்லி, செப் 25: நம் நாட்டில், கடந்த ஒரே நாளில், 29,616 பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில், கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, குறைந்து காணப்படுகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, மத்திய சுகாதாரத் துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில்: நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில், 29,616 பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 28,046 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். கடந்த ஒரே நாளில், […]
Continue reading …வாஷிங்டன், செப் 25: அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடனான சந்திப்புக்குப் பின், குவாட் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தில் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் – பிரதமர் மோடி இடையிலான சந்திப்பு நேற்று நடந்தது. அதிபரின் வெள்ளை மாளிகையில் நடந்த அந்த சந்திப்பில், இருதரப்பு உறவுகளை வலுபடுத்துவது குறித்து இருநாட்டுத் தலைவர்களும் […]
Continue reading …