
நடிகர் மன்சூர் அலிகான் சமூக வலைதளங்களில், “மனிதன் உணர்ந்து கொள்ள இது உண்மையான தேர்தல் அல்ல..! அதையும் தாண்டி கொடூரமானது!” என பதிவிட்டுள்ளார். இப்பதிவு தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடந்த மாதம் 19ம் தேதி தமிழகத்திலுள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் நடிகர் மன்சூர் அலிகான் வேலூர் தொகுதியில் பலாப்பழம் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்டார். வேலூர் தொகுதியில் திமுக சார்பில் சிட்டிங் எம்பி கதிர் ஆனந்த், பாஜக கூட்டணியில் புதிய […]
Continue reading …
பல கடைகளில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கின்றனர். கள்ளக்குறிச்சியில் இந்த நடவடிக்கைக்கு கலெக்டர் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். 2016ல் இந்தியாவில் பணமதிப்பிழப்பு கொண்டுவரப்பட்ட காலத்தில் புதிய பணத்தாள்கள் வெளியிடப்பட்டன. அப்போது 10 ரூபாய் மதிப்புள்ள நாணயங்களும் வெளியிடப்பட்டன. அப்போது யாரோ அவை போலி என வதந்தியை பரப்பிவிட்டனர். 8 ஆண்டுகள் கடந்தும் பல ஊர்களில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாக்காசாகவே இருந்து வருகின்றன. அப்படியாக 10 ரூபாய் நாணயங்களையே இன்னும் மக்கள் முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. […]
Continue reading …
அமலாக்கத்துறை நீதிமன்ற அனுமதியின்றி யாரையும் கைது செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றம் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் நீதிமன்ற அனுமதியின்றி யாரையும் கைது செய்யக்கூடாது என்று அமலாக்கத்துறைக்கு நிபந்தனை விதித்துள்ளது. பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் ஜாமீன் மனு ஒன்றை விசாரித்த உச்சநீதிமன்றம் அமலாக்க துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகு சிறப்பு நீதிமன்ற அனுமதியின்றி யாரையும் கைது செய்யக்கூடாது என அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவரை […]
Continue reading …
கடந்த வாரம் கவின் நடிப்பில் “ஸ்டார்” திரைப்படம் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தின் டிரெயிலர் வெளியானதிலிருந்து படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு நிலவியது. கடந்த வாரம் கவின் நடிப்பில் ‘ஸ்டார்’ திரைப்படம் வெளியாகியது. படம் முதல் மூன்று நாட்களில் 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் கவின் ஒரு ஸ்டார் நடிகராக உருவாகியுள்ளார். இத்திரைப்படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பிருந்த நிலையில் படம் ரிலீசான […]
Continue reading …
தேசிய தேர்வு முகமை தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் இன்றைய க்யூட்-யுஜி தேர்வு நடைபெறுகிறது. டில்லியில் மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்பு படிக்க க்யூட்-யுஜி தேர்வு கட்டாயம். இன்று காலை நாடு முழுவதும் இத்தேர்வு நடைபெற்றது. ஆனால் டில்லியில் மட்டும் தவிர்க்க முடியாத சில காரணங்களால் இத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும் இன்று நடைபெற இருந்த வேதியியல், உயிரியல், ஆங்கிலம் மற்றும் பொது அறிவுக்கான தேர்வு மே 29ம் தேதி டில்லியில் நடைபெறும் என்றும் தேசிய […]
Continue reading …
அரசியலமைப்பு சட்டப்புத்தகத்தை கிழித்து எறிய முயற்சித்தால், நாடும் காங்கிரஸ் கட்சியும் பாஜகவை என்ன செய்யும் என்பதை பாருங்கள் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒடிசா மாநிலம் பலங்கிரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி, “இந்தியாவின் பிற்படுத்தப்பட்ட, தலித்துகள், பழங்குடியினர் மற்றும் ஏழை பொது […]
Continue reading …
சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா தற்போது “கங்குவா” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் முடிவடைந்துள்ளது. விரைவில் அவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதத்தில் தொடங்க உள்ளது. இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளதாகவும் அதற்கான பட்ஜெட் 600 கோடி ரூபாயில் உருவாக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது இந்த படத்தில் நிக் பவல் என்ற ஸ்டண்ட் இயக்குனர் ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் “பிரேவ் […]
Continue reading …
பொதுமக்கள் விழுப்புரம் அருகே உள்ள கிணற்றில் மனித கழிவு கலந்ததாக புகார் கூறியிருந்தனர். அதில் மனித கழிவு கலக்கவில்லை என்று அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். வேங்கை வயலில் கடந்த ஓராண்டுக்கு முன் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோன்ற ஒரு சம்பவம் விழுப்புரம் அருகே உள்ள குடிநீர் கிணற்றில் கலந்ததாக பொதுமக்கள் புகாரளித்தனர். சில மர்ம நபர்கள் மனித கழிவை குடிநீர் கிணற்றில் கலந்ததாக எழுந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அந்த கிணற்றை ஆய்வு […]
Continue reading …
மத்திய அரசு இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது. தற்போது முதல் கட்டமாக 14 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்றத்தில் கடந்த 2019ம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி 2014ம் ஆண்டுக்கு முன்பு வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்த முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் மத்திய அரசு […]
Continue reading …