
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக எச்சரித்துள்ளது. பொது சுகாதாரத்துறை இயக்குநர் அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் பல்வேறு அறிவுரைகளை வெளியிட்டுள்ளது. அதில், திருப்பூர், கோவை, மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது. திருவண்ணாமலை, திண்டுக்கல் மாவட்டங்களிலும் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. எனவே டெங்கு காய்ச்சலுக்கான வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறது. கிருஷ்ணகிரி, தஞ்சை மாவட்டங்களில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலுக்கான […]
Continue reading …
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று இரவு தமிழகத்தின் 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. நாமக்கல், மதுரை, காஞ்சிபுரம், தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை, பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், குமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, தென்காசி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த சில […]
Continue reading …
பாஜகவின் எச்.ராஜா பெண்களுக்கு எதிராக ஆபாச கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரிய மனு மீது உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பா.ஜ.க மூத்த தலைவர் எச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் கடந்த 2018ல் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பதிவிட்டார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் புகார் அளித்தனர். புகாரின் […]
Continue reading …
டில்லியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் அங்கிருந்த 7 ஊழியர்களை தீயணைப்பு வீரர்கள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். டில்லியில் உள்ள மாநில காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு எதிரில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் வழக்கம்போல் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். இக்கட்டிடத்தின் 4வது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் 21 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்தனர். தீ விபத்து சிக்கிய 7 […]
Continue reading …
தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வாரிசுரிமை சான்று கோரி பொய் தகவல்களுடன் விண்ணப்பிப்பவர்களுக்கு எதிராக குற்ற வழக்குப்பதிவு செய்ய அனைத்து வருவாய் துறை அதிகாரிகளுக்கும் 5 வாரங்களில் சுற்றறிக்கை பிறப்பிக்க உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாரண்ணன், தனது தந்தையின் மரணத்துக்குப் பின், வாரிசுரிமை சான்று வழங்கக் கோரி மேட்டுப்பாளையம் தாசில்தாரிடம் விண்ணப்பித்துள்ளார். இதுகுறித்த விசாரணையில், மாரண்ணனின் தந்தை மாரண்ண கவுடருக்கு இரு மகள்கள், இரு மகன்கள் உள்ள நிலையில், தான் மட்டுமே […]
Continue reading …
நடிகை அமலா பால் உள்ளிட்ட 150 கர்ப்பிணிகள் கேரளாவில் நடந்த கர்ப்பிணிகளுக்கான ஃபேஷன் ஷோவில் பங்கேற்றனர். கேரள மாநிலம் கொச்சியில் தனியார் மருத்துவமனை சார்பில் பெண்களின் மகப்பேறு காலத்தை மகிழ்ச்சியாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், கர்ப்பிணிப் பெண்களுக்கான ஃபேஷன் ஷோ நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகை அமலா பால் கலந்து கொண்டார். 105 கர்ப்பிணிப் பெண்களும் இதில் கலந்து கொண்டனர். உலகளவில் அதிக கர்ப்பிணிப் பெண்கள் கலந்து கொண்ட ஃபேஷன் ஷோ என்ற அங்கீகாரம் […]
Continue reading …
நடுரோட்டில் காதலியுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர் பொதுமக்கள் முன்னிலையில் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை தாம்பரம் கிழக்கு திருவள்ளுர் நகரைச் சேர்ந்தவர் கனகராஜ் மகன் உதயா என்ற உதயகுமார் (22). இவர் பள்ளிக்கரணை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ முதலாமாண்டு படித்து வந்தார். தனது காதலியுடன் இருசக்கர வாகனத்தில் சிட்லப்பாக்கம் சேது நாராயணன் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் பயங்கர […]
Continue reading …
வாரணாசி தொகுதியில் போட்டியிடும் மோடி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். பாஜக ஆட்சி இந்தியாவில் கடந்த 10 ஆண்டு காலமாக நடந்து வருகிறது. 3வது முறையாக பாஜக தொடர்ந்து ஆட்சி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. கடந்த 2 தேர்தல்களிலும் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி, மூன்றாவது முறையும் வாரணாசி தொகுதியிலேயே களமிறங்குகிறார். இன்று வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்யும் முன்பாக புனித நதியான கங்கையில் பிரதமர் மோடி நீராடி பிரார்த்தனை செய்து சிறப்பு […]
Continue reading …
மின்னஞ்சல் மூலம் டில்லியில் உள்ள 4 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த சில வாரங்களாக டில்லி, குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள பள்ளிகள், மருத்துவமனைகள், விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் கடந்த 1-ம் தேதி சுமார் 100 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டன. இதன் காரணமாக, […]
Continue reading …
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ரெபேலி தொகுதியில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ராகுல் காந்தி இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் ஜூலை 1ம் தேதி உங்கள் வங்கிக் கணக்கில் ஒரு மேஜிக் நடக்கும். ஒவ்வொரு ஏழைப் பெண்ணின் கணக்கிலும் ரூ.8500 டெபாசிட் செய்யப்படும் என்று பேசினார் தேர்தல் பிரச்சாரத்தில் அவர், “இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் உங்கள் வங்கி கணக்கில் மேஜிக் நடக்கும். இத்தொகை தொடர்ந்து வரும். இந்தியாவில் வறுமையை அகற்ற […]
Continue reading …