Home » Posts tagged with » Netrikkan (Page 59)

அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்!

Comments Off on அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்!

ஆளுநர் மாளிகை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கு தொடர அனுமதி அளிக்கவில்லை என விளக்கமளித்துள்ளது. சேலம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், “பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டு மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவலை பரப்பி வருகிறார்” என்று குறிப்பிட்டிருந்தார். இவ்வழக்கு விசாரணை சேலம் 4வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து […]

Continue reading …

நடிகர் சங்க கட்டிடத்திற்கு ரூ.1 கோடி வழங்கிய தனுஷ்!

Comments Off on நடிகர் சங்க கட்டிடத்திற்கு ரூ.1 கோடி வழங்கிய தனுஷ்!

இன்று நடிகர் தனுஷ் ரூ.1 கோடியை தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்திற்கு வழங்கினார். புதிதாக தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் நிதிப் பற்றாக்குறை காரணமாக நிறைவு பெறாமல் இருந்தது. தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிப்பதற்கு சுமார் 40 கோடி ரூபாய் தேவைப்படுவதாக முன்பு கணக்கிடப்பட்டது. இதற்காக நடிகர்கள் கமல், விஜய், உதயநிதி, நெப்போலியன் ஆகியோர் ரூ. 1 கோடி வைப்புநிதியாக முன்பு வழங்கினர். […]

Continue reading …

மேலும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமையா?

Comments Off on மேலும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமையா?

17வது சிறுமி திருப்பூரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அந்த விசாரணையில் மேலும் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனது தாத்தா பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக சிறுமியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்ததில் சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியிடம் […]

Continue reading …

பெண்களின் முகத்தை காட்ட சொன்ன பாஜக வேட்பாளர்!

Comments Off on பெண்களின் முகத்தை காட்ட சொன்ன பாஜக வேட்பாளர்!

பாஜக வேட்பாளர் மாதவி லதா மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க வந்த முஸ்லிம் பெண் வாக்காளர்களிடம் அடையாள அட்டையை வாங்கி சோதனை செய்ததால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று மக்களவைத் தேர்தலுக்கான நான்காம் கட்ட வாக்கு பதிவு நடைபெற்றது. ஹைதராபாத் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் மாதவி லதா போட்டியிடுகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் தேர்தல் பிரச்சாரத்தின்போது மசூதியை பார்த்து அம்பு எய்வதுபோல் சைகை காட்டி சர்ச்சைக்குள்ளானார். இதற்கிடையே நான்காம் கட்டத் தேர்தலில் வாக்களிக்க பர்தா […]

Continue reading …

கோட் படத்தின் அப்டேட்!

Comments Off on கோட் படத்தின் அப்டேட்!

நடிகர் விஜய் சமீபத்தில் அவரது அரசியல் வருகையை அறிவித்தார். தற்போது அவர் கோட் படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் ஷூட்டிங் பெரும்பகுதி நிறைவடைந்துள்ள நிலையில் இறுதிகட்ட ஷூட்டிங்குக்காக ரஷ்யாவுக்கு […]

Continue reading …

சிவகாசியில் மீண்டும் ஒரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து!

Comments Off on சிவகாசியில் மீண்டும் ஒரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து!

கடந்த சில நாட்களுக்கு முன்புதான் விருதுநகரில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் பலியாகினர். அந்த அதிர்ச்சி மறைவதற்குள் சிவகாசியில் நேற்று பட்டாசு சாலையில் வெடி விபத்து ஏற்பட்டு இரண்டு அறைகள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதிகாலை நேரத்தில் இந்த விபத்து நடந்ததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாகவும் தெரிகிறது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நாராயண புதூர் பகுதியைச் சேர்ந்த ராஜாராம் என்பவருக்கு பட்டாசு ஆலை ஒன்று சொந்தமாக உள்ளது. இந்த ஆலையில் பட்டாசு தயாரிப்புக்கான மூலப் […]

Continue reading …

நுங்கு வாங்கிய தகராறில் மனைவி, மகளை குத்திய கணவன்!

Comments Off on நுங்கு வாங்கிய தகராறில் மனைவி, மகளை குத்திய கணவன்!

நுங்கு வாங்கும் போது ஏற்பட்ட தகராறில் கணவன் தனது மனைவி மற்றும் மகளை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதியைச் சேர்ந்த தனசேகரன் லாரி டிரைவராக பணிபுரிகிறார். தனசேகரனுக்கு திருமணமாகி யாசினி என்ற மனைவியும், சாந்தினி, ஷபானா என்ற இரு மகள்களும் உள்ளனர். தற்போது பல பகுதிகளிலும் வெயில் வாட்டி வரும் நிலையில் வெளியே கடைக்கு சென்ற யாசினி வரும்போது நுங்கு வாங்கி வந்துள்ளார். ஆனால் […]

Continue reading …

விபத்தால் சாலையில் சிதறிய பணக்கட்டுகள்!

Comments Off on விபத்தால் சாலையில் சிதறிய பணக்கட்டுகள்!

ஆந்திர மாநிலத்தில் உள்ள கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் நல்லஜார்லா பகுதியில் லாரி மீது மினி வேன் மோதி விபத்துக்குள்ளானது. மினி வேனில் மூட்டை மூட்டையாக இருந்த கோடிக்கணக்கான பணம் சாலையில் சிதறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தல் நேரம் என்பதால் பறக்கும் படையினர் கெடுபிடி அதிகமாக உள்ளது என்பதும் 50 ஆயிரம் மட்டுமே ரொக்கமாக பணம் கொண்டு செல்ல வேண்டும், அதற்கு மேல் கொண்டு சென்றால் உரிய ஆவணங்கள் காண்பிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஒரு மினி […]

Continue reading …

11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது?

Comments Off on 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது?

சமீபத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. தற்போது 11ம் வகுப்பு பொது தேர்வு எப்போது என்பது குறித்த தகவலை அரசு தேர்வு துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன் தமிழகத்தில் 11ம் வகுப்பு பொது தேர்வு நடந்தது. இந்த பொது தேர்வில் தேர்வு தாள்கள் திருத்தப்பட்டு தற்போது மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 14ம் தேதி […]

Continue reading …

ஓடிடியில் வெளியான ஆவேஷம் திரைப்படம்!

Comments Off on ஓடிடியில் வெளியான ஆவேஷம் திரைப்படம்!

மலையாள சினிமா கடந்த சில ஆண்டுகளாகவே மிகவும் ஆரோக்யமான போக்கில் சென்று கொண்டிருக்கிறது. அங்கே நல்ல கதையம்சம் உள்ள படங்களும் வசூல் ரீதியாக வெற்றியைப் பெற்று வருகின்றன. கடந்த சில மாதங்களில் வெளியான “பிரேமலு,” “ப்ரமயுகம்,” “மஞ்சும்மள் பாய்ஸ்,” “ஆடு ஜீவிதம்,” “வர்ஷங்களுக்கு ஷேஷம் மற்றும் ஆவேஷம்” ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளன. இந்த படங்கள் கேரளா தாண்டியும் பிற மொழி ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளன. கடந்த மாதம் ரிலீசான பஹத் பாசில் நடித்த […]

Continue reading …