
சுப்ரீம் கோர்ட்டில் சிறைகளில் இட நெருக்கடி அதிகரித்து வருவதை அடுத்து திறந்தவெளி சிறைச்சாலை அமைக்கலாம் என மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் சிறைகளில் இடநெருக்கடிகளை குறைக்க திறந்தவெளி சிறைகள் மற்றும் திறந்தவெளி முகாம்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த முறை அமல்படுத்தப்பட்டால் இட நெருக்கத்தின் தீர்வு காண்பது மட்டுமின்றி கைதிகள் மறுவாழ்வுக்கும் தீர்வாக இருக்கும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. திறந்தவெளி சிறை மூலம் சமுதாயத்துடன் கைதிகளை ஒருங்கிணைக்க செய்ய முடியும் என்றும் சிறைக்கு […]
Continue reading …
சேலம் மாவட்டம் ஓமலூரில் நிர்மாணிக்கப்பட்ட 56 அடி உயர முருகன் சிலை சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மலேசியாவில் இருக்கும் முருகன் கோவில் போல் தமிழகத்தில் பல பகுதிகளில் சிலை அமைத்து வழிபாடு நடந்து வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகில் முருகருக்கு 56 அடி உயரத்திற்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. முருகன் என்றால் அழகு என்பார்கள். அதற்கேற்றார்போல வீட்டு காலண்டர் தொடங்கி கோவில் வரை சிரித்த இதழோடு அழகிய முருகனை கண்டிருப்போம். ஆனால் அந்த […]
Continue reading …
சமூகவலைதளங்களில் நடிகர் சிங்கம்புலி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது சிகிச்சைக்கு பணம் கேட்டுள்ளதாகவும் பதிவிடப்பட்டிருந்தது. இயக்குனர் மற்றும் நடிகருமான சிங்கம் புலி திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் இருப்பதாகவும், அவருக்கு பணம் கொடுத்த உதவ வேண்டும் என்றும் அதில் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து நடிகர் சிங்கம்புலி, “எனது வீடியோ ஒன்றை வெளியிட்டு […]
Continue reading …
காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் தேர்தல் பிரச்சாரத்தில் இரண்டு மனைவி இருந்தால் இரண்டு லட்சம் என பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியானது. அதில் மகாலட்சுமி திட்டம் என்று அறிவிப்பு பலரையும் கவர்ந்தது என்பதும் இந்த திட்டத்தின்படி ஏழை குடும்ப பெண்கள் வறுமை கோட்டுக்கு கீழே இருந்தால் அவர்களுக்கு வங்கி கணக்கில் ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் […]
Continue reading …
பாலிவுட் நடிகையை வளர்ப்புத் தந்தையே சொத்துக்காக கொலை செய்து புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2011ம் ஆண்டு பாலிவுட் நடிகை லைலா கான் திடீரென காணவில்லை என புகார் அளிக்கப்பட்டது. அப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். லைலா கானின் தாயார் பர்வேஸை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார் என்றும் அவர்தான் லைலா காணாமல் போனதற்கு காரணம் என்றும் கண்டுபிடித்தனர். இதை அடுத்து பர்வேஸிடம் போலீசார் விசாரித்த […]
Continue reading …
டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டார். உச்சநீதிமன்றம் வரும் ஜூன் 1-ம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மார்ச் 21-ம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையிலடைக்கப்பட்டார். அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கதுறை கைது செய்தது செல்லாது என உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான விசாரணையில் தேர்தலை கணக்கில் கொண்டு இடைக்கால ஜாமின் […]
Continue reading …
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி ஒன்றியம் குராயூர் கிராமத்தில் அமைந்துள்ள பெரிய கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. கண்மாயில் கடந்த இரு மாதங்களாக தண்ணீர் இன்றி வறண்ட நிலையில், தேங்கிய நீரில் ஏராளமான மீன்கள் இருந்தன. அவற்றை குராயூர், மொச்சிகுளம், மருதங்குடி, சென்னம்பட்டி, இலுப்பக்குளம், வேப்பங்குளம், திருமால், ஓடைப்பட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமப்புறங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. இதில் குறவை, […]
Continue reading …
மலையாள சினிமா கடந்த சில ஆண்டுகளாகவே ஹிட்டான படங்களை கொடுத்து வருகிறது. அங்கே நல்ல கதையம்சம் உள்ள படங்களும் வசூல் ரீதியாக வெற்றியைப் பெற்று வருகின்றன. கடந்த சில மாதங்களில் வெளியான “பிரேமலு,” “பிரம்மயுகம்,” “மஞ்சும்மள் பாய்ஸ்,” “ஆடு ஜீவிதம்,” “வர்ஷங்களுக்கு ஷேஷம்“ மற்றும் “ஆவேஷம்” ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. இந்த படங்கள் கேரளாவை தாண்டி பிற மொழி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. அப்படி கடந்த மாதம் ரிலீசான பஹத் […]
Continue reading …
சங்கர் இயக்கத்தில், கமலஹாசன் நடிப்பில் “இந்தியன் 2” திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது ஜூலை மாதம் தள்ளிவைக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கும் மேலாக “இந்தியன் 2” திரைப்படம் தொடங்கப்பட்டு பல்வேறு பிரச்னைகளை கடந்து தற்போது ரிலீஸ் கட்டத்தை எட்டியுள்ளது. கமல்ஹாசன் நடிப்பில் அடுத்தடுத்து “இந்தியன் 2,” “இந்தியன் 3,” “கல்கி” மற்றும் “தக் லைஃப்” ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இதில் “இந்தியன் 2” பாகங்களின் ஷூட்டிங் […]
Continue reading …
சமீபத்தில் மிகப்பெரிய ஹிட்டான மலையாள திரைப்படமான மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தின் நடிகரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அழைத்து பாராட்டியுள்ளார். நடிகர் விஜய் முத்து நடிகராக முண்டாசுப்பட்டி விக்ரம் வேதா, துணிவு, மகான் என கவனிக்கத்தக்க திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடிகராக வளர்ந்து வரும் நடிகர். சமீபத்திய ஹிட் ஆன மலையாள திரைப்படமான “மஞ்சுமல் பாய்ஸ்” படத்தில் இன்ஸ்பெக்டராக அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இப்படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விஜயமுத்துவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
Continue reading …