
இன்று நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக லண்டனிலிருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து ஓட்டு போட வந்தவருக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்பதால் அவர் பெரும் அதிர்ச்சியடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வெளியூரில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஓட்டு போடுவதற்காக ஆர்வத்துடன் பொதுமக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அவ்வகையில் சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த பால்ராஜ் லண்டனில் வசித்து வந்தவர் தனது வாக்கினை பதிவு செய்ய […]
Continue reading …
இன்று தமிழகம் முழுதும் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. உசிலம்பட்டி அருகே இரயில் பாதையின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க கோரி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இந்த கிராமத்தின் வாக்குச்சாவடி மையம் வெறிச்சோடி காணப்படுவதுடன் 10% ஒட்டு மட்டுமே பதிவாகியுள்ளன. இன்று காலை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சக்கிலியங்குளம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள மதுரை – போடி […]
Continue reading …
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் முடிந்த பிறகு அதிமுக தங்கள் வசமாகும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இன்று தமிழகம் முழுதும் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில், முன்னாள் முதலமைச்சரும், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி சுயேச்சை வேட்பாளருமான ஒ.பன்னிர்செல்வம் தனது குடும்பத்துடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர், “பத்து ஆண்டுகளாக நல்லாட்சி புரிந்த பாரத பிரதமர் நரேந்திர […]
Continue reading …
28 ஊழியர்களை கூகுள் நிறுவனம் மற்றும் இஸ்ரேல் இடையிலான கிளவுட் கம்ப்யூட்டிங் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தற்காக நீக்கியுள்ளது. ப்ராஜக்ட் நிம்பஸ் என்று அழைக்கப்படும் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து 28 ஊழியர்கள், நியூயார்க் மற்றும் சன்னிவேல் அலுவலங்களில் சுமார் எட்டு மணி நேரத்துக்கும் மேலாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். கூகுள் கிளவுட் சிஇஓ தாமஸ் குரியனின் அலுவலகத்தை விட்டு அகல மறுத்து ஊழியர்கள் சிலர் கைது செய்யப்பட்டதாகவும் கூகுள் தரப்பில் கூறப்படுகிறது. இச்சம்பவத்தையடுத்து கூகுள் நிறுவனம் போராட்டம் நடத்திய […]
Continue reading …
‘கோட்’ படத்தின் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியானது. இப்பாடலுக்கு கிடைத்த நெகட்டிவ் விமர்சனம் காரணமாக யுவன் சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை டெலிட் செய்து விட்டதாக கூறப்படுகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘கோட்’. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் “விசில் போடு” என்ற சிங்கிள் பாடல் வெளியானது. விஜய் பாடிய இப்பாடலுக்கு 30 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் கிடைத்துள்ளது. […]
Continue reading …
கடந்த இரண்டு நாட்களாக துபாயில் பெய்த கனமழை காரணமாக விமான சேவை முடங்கியதோடு, மழை நீர் இன்னும் வடியாததால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக துபாயில் பேய் மழை கொட்டி தீர்த்தது. வரலாறு காணாத அளவிற்கு பெய்த மழையால் துபாய் நகரம் இன்னும் வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருகிறது. பெருமழை குறித்து அந்நாட்டு செய்தி நிறுவனமான WAM இது ‘வரலாறு காணாத வானிலை நிகழ்வு’, கடந்த 1949-ம் ஆண்டு முதல் […]
Continue reading …
திமுக எம்.பி தயாநிதி மாறன் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு தொடர்ந்துள்ளார். தயாநிதி மாறன் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை என பேசியதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 95 சதவீதத்துக்கு மேல் தொகுதி நிதியை பயன்படுத்தியுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கோர வேண்டும் எனக் கூறிய தயாநிதி மாறன், மன்னிப்பு கேட்க 24 மணி நேரம் அவகாசம் கொடுத்த […]
Continue reading …
கூலிப்படை சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கி சூடு நடத்த ஏவபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மும்பையில் உள்ள சல்மான்கான் வீட்டின் மீது கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இவ்விவகாரத்தில் கூலிப்படையினர் சம்பந்தப்பட்டுள்ளதாக தற்போது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் துப்பாக்கியை கொடுத்தது யார்? கூலிப்படையை அமர்த்தியது யார்? எவ்வளவு ரூபாய் […]
Continue reading …
ஜாபர் சாதிக் விவகாரம் தொடர்பாக இயக்குனர் அமீர் -ஒரு ஃபைல், தயார் செய்து வைத்திருந்ததாகவும் அந்த ஃபைல், தற்போது அமலாக்கத்துறையினர் கையில் சிக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அமீருக்கு இதனால் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது சமீபத்தில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்கு விசாரணையில் அமீர் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜரானார். தனக்கும் ஜாபர் சாதிக்கிற்கும் இடையே உள்ள பிசினஸ் சினிமா தயாரிப்பு உள்ளிட்ட ஆவணங்களை தாக்கல் செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனர். இதற்காக தன்னுடைய ஆடிட்டர் வழக்கறிஞர் ஆகியோர்களின் […]
Continue reading …
துபாயில் வரலாறு காணாத மழை பெய்த நிலையில் இந்த மழைக்கு மேக விதைப்பு காரணமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது விளக்கத்தை அளித்துள்ளார். துபாயில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. இதன் காரணமாக துபாயிலுள்ள பல சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக துபாய் விமான நிலையத்தில் வெள்ள நீர் தேங்கி இருந்ததால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஏராளமான விமானங்கள் தாமதமாக கிளம்பியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் சென்னையில் இருந்து துபாய் செல்லும் […]
Continue reading …