
ராதிகா மற்றும் சரத்குமார் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் நம்பர் பிளேட் இல்லாத பைக்கில் ஹெல்மேட் அணியாமல் சென்று வாக்கு சேகரித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராதிகா சரத்குமார் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியிடுகிறார். இதேபோன்று, அதிமுக கூட்டணியில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் போட்டியிடுகிறார். இதனால், விருதுநகர் தொகுதி நட்சத்திர களமாக உருவாகியுள்ளது. சிவகாசியில் ஈஞ்சார், நடுவப்பட்டி கிராமங்களுக்கு ராதிகா தனது கணவர் சரத்குமாருடன் சென்று பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, வாகனத்தில் […]
Continue reading …
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பாரதம் என்பது சனாதனத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது, சனாதனம் வீழ்ந்தால் பாரதம் வீழும் என்றும் தெரிவித்துள்ளார். அமைச்சர் உதயநிதி கடந்த சில மாதங்களுக்கு முன், சனாதனம் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. “கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும், அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் […]
Continue reading …
“நாளை சம்பவம் உறுதி” என்ற பதிவை இயக்குனர் வெங்கட் பிரபு அவரது சமூக வலைதல பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வெங்கட் பிரபு இயக்கி வரும் “தி கோட்” திரைப்படத்தில் தற்போது நடிகர் விஜய் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் “கோட்” திரைப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. தற்பொழுது கோட் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் நடைப்பெற்று வருகிறது. சமீபத்தில் படப்பிடிப்பு நடக்கும் பொழுது நடிகர் […]
Continue reading …
அமலாக்கத்துறை கடந்த 9ம் தேதி ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த மாதம் டில்லியில் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து விசாரணையில், இந்த கடத்தலில் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் முக்கிய பங்காற்றியது தெரிய வந்தது. இதையடுத்து, ஜாபர் சாதிக்கை போதைப் பொருள் தடுப்புத் துறையினர் மார்ச் 9-ம் […]
Continue reading …
கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் “டிடிவி தினகரன் பக்கம் அதிமுக வந்துவிடும் என அண்ணாமலை தோல்வி பயத்தில் என்ன பேசுவது எனத் தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். கோவையில் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம், “இந்திய வர்த்தக சபை நடத்திய நிகழ்ச்சிக்கு அனைத்து வேட்பாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. தேர்தல் பிரச்சாரம் காரணமாக அந்த நிகழ்ச்சிக்கு வர முடியாது என சொல்லியிருந்தேன். அதனால் எங்களது பிரதிநிதி பங்கேற்றார். இதனைப் பார்த்து நான் பயந்து விட்டதாக பாஜகவினர் […]
Continue reading …
வருகிற ஏப்ரல் 19ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்காக தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. தமிழ் நாட்டில் அதிமுக, திமுகவுக்கு எதிராக பாஜக போட்டியிடும் நிலையில், அக்கட்சி தலைமையிலான கூட்டணியில் பாமக, தமாகா ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றனர். விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் இன்று பிரசாரத்தில், “தமிழகத்திற்கு அள்ளி அள்ளிக் கொடுத்தவர் பிரதமர் மோடி. என்னை வெற்றிபெறச் செய்தால் விருதுநகரிலேயே தங்கி இருந்து மக்களுக்குச் சேவை செய்வேன். மதுரையில் […]
Continue reading …
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக டெபாசிட் இழக்கும் முதல் தொகுதி கோவையாகத்தான் இருக்கும் என தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இருவருமே அண்ணாமலையை தோற்கடிக்க வேண்டும் என்ற உறுதியோடு இருப்பதாகவும் கூறப்படுகிறது. நேற்று அண்ணாமலை இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ததாக காவல்துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் விளக்கமளித்துள்ளார். இரவு 10 மணிக்கு மேல் மைக்கை […]
Continue reading …
ஏற்கனவே அமலாக்கத்துறை அதிகாரிகளால் தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் கவிதா ஒத்துழைப்பு தரவில்லை என சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை. சிபிஐ அதிகாரிகள் நேற்று அவரிடம் விசாரணை செய்தபோது டில்லி மதுபான கொள்கை முறைகேட்டில் விசாரணைக்கு […]
Continue reading …
காங்கிரஸ் ராகுல்காந்தி எம்.பி. நெல்லையில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்தார். தமிழகத்தில் இன்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்து வருகிறார். நெல்லையில் நடந்த பொதுக்கூட்டத்தில், “தமிழ்நாட்டில் உள்ள மீனவர் பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனைக்கு மத்திய அரசு எதுவும் செய்யவில்லை. தமிழகத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது மோடி நிதிதர மறுத்துவிட்டார். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு […]
Continue reading …
விஜய பிரபாகரன் தம்பி சண்முக பாண்டியனுக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக அவருடைய தம்பி சண்முக பாண்டியன் அருப்புக்கோட்டை நகர் பகுதியில் திறந்த வேனில் சென்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். முதல் முறையாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வந்த சண்முக பாண்டியனுக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சண்முக பாண்டியன் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து திறந்த ஜீப்பில் […]
Continue reading …