புது டெல்லி,மே 07 வணக்கம் புத்த பூர்ணிமாவிற்கான நல்வாழ்த்துக்கள். உங்கள் அனைவருக்கும், உலகெங்கிலும் புத்தபிரானைப் பின்பற்றுபவர்களுக்கும் வேசக் கொண்டாட்டங்களுக்கான நல்வாழ்த்துக்கள். இந்தப் புனித நன்னாளில் உங்களைச் சந்திப்பதும், உங்கள் அனைவருடைய ஆசீர்வாதங்களையும் பெறுவதும் எனக்கு கிடைத்த நல்வாய்ப்பு. இதற்கு முன்னரும் எனக்கு இதுபோன்ற வாய்ப்புகள் பல கிடைத்துள்ளன. 2015, 2018 ஆம் ஆண்டுகளில் தில்லியிலும், 2017 ஆம் ஆண்டில் கொழும்பிலும் இந்தக் கொண்டாட்டங்களில் உங்களுடன் ஒரு பகுதியாக, நானும் இருந்தேன். நண்பர்களே புத்தபிரான் கூறியுள்ளதாவது : मनोपुब्बं-गमाधम्मा, मनोसेट्ठामनोमया, இதற்குப் பொருள் என்னவென்றால் தம்மம் மதம் மனதில்தான் உள்ளது. மனம்தான் உயர்ந்த […]