பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் சாலை இல்லாததால் இளம் பெண்ணின் உடலை பல கி.மீ தொலைவுக்கு மரக்கட்டையில் கட்டி உறவினர்கள் சுமந்து சென்ற அவலத்தை குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பலனில்லாமல் உயிரிழந்த திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையிலுள்ள எலந்தம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சாந்தி என்பவரின் உடலை அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்கு சாலை வசதி இல்லாததால், மரக்கட்டையில் கட்டி மலையடிவாரத்திலிருந்து எலந்தம்பட்டு கிராமம் வரை அவரது […]
பாமக நிறுவனம் டாக்டர்.ராமதாஸ் பல மாதங்களாக கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியமில்லை என்பது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும் போது, “தமிழ்நாட்டில் பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளாக இருந்து அரசின் கட்டுப்பாட்டுக்கு மாற்றப்பட்ட 41 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் ஊதியச் சுமையை அரசே ஏற்றுக்கொள்ளும்; அவற்றுக்கு 2248 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது! அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட பிறகும் அவற்றின் ஊழியர்களுக்கு பல்கலைகளே ஊதியம் வழங்க கட்டாயப்படுத்தப்பட்டதால் கவுரவ விரிவுரையாளர்களுக்கு பல […]
Continue reading …பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் காய்ச்சல் பரவி வருவதால் உடனே பள்ளிகளுக்கு விடுமுறை விடுமாறு கோரிக்கை வைத்துள்ளார். மேலும் அவர் இதுபற்றி கூறியிருப்பதாவது, “தமிழ்நாட்டில் சளிக்காய்ச்சல் உள்ளிட்ட பலவகையான காய்ச்சல்களால் குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நோய்பரவலைத் தடுக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. 3 நாட்களில் காய்ச்சல் சரியாகிவிடுமென்று ஆறுதல் கூறுவது மட்டுமே போதுமானதல்ல! காய்ச்சலைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் நோய்ப்பரவல் சங்கிலியை உடைக்க வேண்டியது அவசியம். பள்ளிகளில் குழந்தைகள் நெருக்கமாக அமர்ந்திருப்பதாலும், ஒன்று கூடி விளையாடுவதாலும் […]
Continue reading …பாமக நிறுவனர் ராமதாஸ் முதலமைச்சர் கட்டாயம் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய வேண்டுமென பலதரப்பிலும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு குறித்து ஆய்வு செய்ய சிறப்பு குழுவை திமுக அரசு ஏற்படுத்தியது. இந்த குழு வல்லுனர்களிடம் பரிந்துரை பெறுதல், மக்கள் கருத்துகளை கேட்டறிதல் ஆகியவற்றை மேற்கொண்டு இறுதி அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்தது. ஆன்லைன் சூதாட்ட தடை தொடர்பாக […]
Continue reading …சென்னை,மே 11 நெய்வேலியில் உள்ள நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின்நிலையத்தின் ஆறாவது அலகில் கொதிகலன் வெடித்த விபத்தில் மேலும் ஒரு தொழிலாளர் உயிரிழந்திருக்கிறார். இவரையும் சேர்த்து இதுவரை இரு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், படுகாயமடைந்த தொழிலாளர்களில் மேலும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின்நிலையம் அம்மேரி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. 210 மெகாவாட் திறன் கொண்ட அதன் ஆறாவது அலகில் கடந்த […]
Continue reading …