புது டெல்லி,மே 16 இந்திய வானிலை ஆராய்ச்சித் துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம், கேரளாவில் பருவமழை தொடங்குவதற்கான முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு, கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும், வழக்கமான ஜூன் 1-ஆம் தேதியுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு சற்று தாமதமாகத் தொடங்கக்கூடும். கேரளாவில் இந்த ஆண்டு 4 நாட்கள் தாமதமாக, ஜூன் மாதம் 5-ஆம் தேதி பருவமழை தொடங்கக்கூடும். இந்தியப் பருவமழை மண்டலத்தில், முதல்கட்டப் பருவமழை தெற்கு அந்தமான் கடல் பகுதியில் […]