மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறியவுடன் அதிமுகவுக்கு வாழ்த்து தெரிவித்து வரவேற்பு தெரிவித்தவர். அவர் அதிமுக கூட்டணியில் இணைந்து தான் வரும் மக்களவைத் தேர்தலை சந்திப்பார் என்று கூறப்பட்டது. திடீரென மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து திமுக கூட்டணிக்கு தனது கட்சியின் ஆதரவை தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒரே கட்சியான மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆதரவும் […]