மலையாள திரைப்படமான “மஞ்சும்மள் பாய்ஸ்” கடந்த பிப்ரவரி 22ம் தேதி வெளியானது. கேரளா தாண்டியும் சினிமா ரசிகர்களை இத்திரைப்படம் வெகுவாகக் கவர்ந்துள்ளது. கேரளாவின் மஞ்சும்மள் பகுதியில் வசிக்கும் ஒரு நண்பர் குழு கொடைக்கானலில் உள்ள டெவில்ஸ் கிச்சன் எனப்படும் குணா குகைக்குள் சென்று மாட்டிக்கொண்டு அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதை நகைச்சுவை மற்றும் உணர்ச்சிப்பூர்வமாக சொல்லியுள்ளது இத்திரைப்படம். திரைப்படத்தின் ஒரு முக்கியமான இடத்தில் “குணா” படத்தில் இடம்பெற்ற “கண்மணி அன்போடு காதலன் எழுதும் கடிதம் பாடல்” […]