சென்னை,மே 6 ஏரிகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் இதர நீர்நிலைகளில் உள்ள களிமண், வண்டல் மண், சவுடு மற்றும் சரளை மண்ணை விவசாயிகள் மற்றும் மட்பாண்டம் செய்பவர்கள் விலையில்லாமல் பெற்றுக் கொள்ளலாம் என பொதுப் பணித்துறை அறிவிப்பு. தமிழ்நாட்டில் உள்ளஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள் போன்ற நீர் கட்டமைப்புகளை மக்கள் பங்களிப்புடன் தூர்வாரி அவற்றின் கொள்ளளவினை மீட்டெடுக்க முதலமைச்சர் அவர்களால் ‘குடிமராமத்து திட்டம்’ 2017-ல் தொடங்கப்பட்டது. இதனால், பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த நீர் ஆதாரங்களில், பருவ மழையின்போது வழக்கத்தை […]