கேரள மக்களின் அறுவடைத் திருநாளான ஓணம் பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மலையாள மொழி பேசும் மக்கள் அனைவரும் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு மொழியால் இணைந்து கொண்டாடும் இத்திருநாளின் மூலம் சகோதரத்துவமும், ஒற்றுமையும் தழைத்தோங்கட்டும். ‘மன்னாதி மன்னனாக இருந்தாலும், கடைகோடி குடிமகனாக இருந்தாலும் அகங்காரத்தால் எதையுமே சாதிக்க முடியாது; அன்பும் பணிவும் மட்டுமே அனைவரின் உள்ளங்களிலும் இடம்பிடிக்கும்’ என்பதை மகாபலி சக்கரவர்த்தியின் வழியாக இந்த உலகத்திற்குச் சொல்லும் ஓணம், அனைவரின் வாழ்விலும் […]
சென்னை, ஜூன் 19 சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முழு முடக்கம் தொடங்கியுள்ள நிலையில், கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களுக்கு வழங்கப்படும் ஜிங்க் (ZINC), வைட்டமின் சி (VITAMIN C) உள்ளிட்ட மாத்திரைகளுக்கு அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆரம்பத்தில் அரசு சார்பில் 10 நாட்கள் சாப்பிடுவதற்கான மருந்து பெட்டகம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது பாதிப்பு உச்சத்திற்குச் சென்று கொண்டிருக்கும் நேரத்தில், அத்தகைய மருந்துகள் அளிக்கப்படுவது நிறுத்தப்பட்டுவிட்டதாக செய்திகள் வருகின்றன. […]
Continue reading …சென்னை,மே 8 நாடு முழுவதும் மின்பகிர்மானத்தை மொத்தமாக தனியாரிடம் ஒப்படைக்கும் வகையில் மத்திய அரசு முன்மொழிந்திருக்கும் ‘மின்சார திருத்தச் சட்டம் -2020’ க்கான வரைவை சட்டமாக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். கொரோனா பாதிப்பில் இருந்தே இந்தியா இன்னும் மீண்டு வராத ஊரடங்கு நேரத்தில், இப்படியொரு சட்டத்திருத்த மசோதாவை மாநிலங்களின் கருத்துக்கேட்புக்கு அனுப்பியது ஏற்புடையதல்ல என அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை. மேலும் இச்சட்டத்திருத்தின் மூலம் மின் உற்பத்தி, பகிர்மானம் ஆகியவை முழுமையாக தனியாரிடம் […]
Continue reading …சென்னை : கொரோனா நோய் தடுப்பு ஊரடங்கினால் நெல், உளுந்து, பயிறு, காய்கறிகள் உள்ளிட்ட தாங்கள் விளைவித்த பொருட்களை விற்க முடியாமல் விவசாயிகள் தவித்து வரும் நிலையை மாற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான டிடிவி தினகரன் அறிக்கையில் கூறியிருப்பதாவது : விவசாயிகள் விளைபொருட்களை விற்பனை செய்வதில் சிக்கல் இருந்தால் அவற்றைக் கவனிக்க மாவட்டம் தோறும் சிறப்பு அதிகாரிகளை நியமித்திருப்பதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால் நேரடி நெல் […]
Continue reading …