அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாவிட்டால் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிமுக பக்கம் வரலாம் என்று காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய வைகை செல்வன், “அதிமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுடன் நல்ல முறையில் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்னும் மூன்று நாட்களில் நல்ல பதில் தரப்படும். தொகுதி பங்கீடுவதில் காங்கிரஸுடன் திமுகவுக்கு கசப்பு உள்ளது. காங்கிரசுக்கு போதிய இடங்கள் ஒதுக்கப்படவில்லை, பேச்சுவார்த்தையில் காங்கிரஸ், […]