அச்சுறுத்தும் சிறுத்தைப் புலி!

Filed under: உலகம் |

அசாம் மாநிலத்தில் சிறுத்தை புலியின் அச்சுறுத்தல் அதிகமாக உள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

அசாமின் ஜோர்ஹத் மாவட்டத்தில் உள்ள தியோக் பகுதியில் செனிஜானில் மழைக்காடு ஆய்வு மையம் செயல்படுகிறது. இப்பகுதியில் சுற்றித் திரிந்து வரும் ஒரு சிறுத்தைப் புலி, அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இச்சிறுத்தைப் புலி குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன் லால் மீனா செய்தியாளர்களிடம் கூறும்போது, “3 வனத்துறை உள்ளிட்ட 13 பேரை இச்சிறுத்தைப் புலி தாக்கியுள்ளது. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சிலர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீட்டிற்குச் சென்றுள்னர். இச்சிறுத்தைப் புலி சமீபத்தில் அங்குள்ள ஆய்வு மையம் பகுதியில், பல அடி உயரமுள்ள சுற்றுச்சுவரைத் தாண்டி தப்பிச் சென்றுள்ளது.” என கூறினார். இந்த சிறுத்தைப் புலியை விரைவில் பிடிக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.