Home » Entries posted by Shankar U
Entries posted by Shankar

நடிகர் மாரிமுத்து மறைவு!

பன்முகத்தன்மை கொண்ட நடிகர் மாரிமுத்து இன்று மாரடைப்பால் காலமானார். இவரது மறைவிற்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது மறைவு குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் கூறும்போது, “நடிகர் மாரிமுத்து இயல்பான மனிதர். அவரது இழப்பு நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. என்னுடன் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தில் பணியாற்றினார். ஒரு இயக்குநருக்கு நடிகருடைய ஒத்துழைப்பு எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்து, அதனை உள் வாங்கிக் கொண்டு நடிப்பவர். இயக்குநராக 2 படம் எடுத்து […]

‘மெட்ராஸ் ஐ’ நோயினால் மருத்துவமனையில் கூட்டம்!

Comments Off on ‘மெட்ராஸ் ஐ’ நோயினால் மருத்துவமனையில் கூட்டம்!

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மெட்ராஸ் ஐ என்று கூறப்படும் கண் நோய் அவ்வப்போது தோன்றும். தற்போது மீண்டும் மெட்ராஸ் ஐ தமிழகத்தில் பரவி வருவதாக கூறப்படுகிறது. இது ஒரு தொற்று நோய், ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு இந்த நோய் இருந்தால் மிக எளிதில் மற்றவருக்கும் பரவிவிடும் என்றும் கூறப்படுகிறது. மேலும் கண் சிவப்பு கண் எரிச்சல் ஆகியவை இருந்தால் உடனடியாக மருத்துவரை சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். பாக்டீரியா மற்றும் வைரஸ்களால் தோன்றும் […]

Continue reading …

சென்னையில் ராட்சத இயந்திரம் மோதி வீடு சேதம்

Comments Off on சென்னையில் ராட்சத இயந்திரம் மோதி வீடு சேதம்

மெட்ரோ ரயில் பணிகள் சென்னையில் ஆங்காங்கே நடைபெற்று கொண்டிருக்கிறது. இன்று பணி நடந்து கொண்டிருக்கும் போது ராட்சத இயந்திரம் மோதி வீடு சேதமடைந்துள்ளது. சென்னை போரூரில் அஞ்சுகம் நகரிலுள்ள பார்த்தியநாதன் வீட்டின் மீது மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்ட இயந்திரம் மோதியதில் வீட்டின் மேல் தளத்தில் சுவர்கள் மற்றும் மேற்கூரை உடைந்து சிதறியது. இதனால் பார்த்தியநாதன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டிலிருந்து வெளியேறி உயிர் தப்பித்தனர். ஆனால் வீட்டிலிருந்த பீரோ, கட்டில், ஃபேன் போன்ற உடமைகள் சேதமாகின. […]

Continue reading …

சனாதனம் பற்றி விளக்கமளித்த கமலஹாசன்!

Comments Off on சனாதனம் பற்றி விளக்கமளித்த கமலஹாசன்!

கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து கருத்து தெரிவித்தது பெரும் சர்ச்சையானது. அவரது கருத்துக்கு பாஜக மட்டுமின்றி இண்டியா கூட்டணியில் உள்ள சில கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. உதயநிதி பேச்சுக்கு பலர் கண்டனம் தெரிவித்தாலும் திரையுலகில் இருந்து அவருக்கு ஆதரவு குவிந்து வருகிறது. ஏற்கனவே வெற்றிமாறன், சத்யராஜ் மாரி செல்வராஜ் உள்ளிட்ட பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தற்போது கமல்ஹாசன் “சனாதனம் பற்றிய கருத்து சொல்ல உதயநிதி […]

Continue reading …

ஜி20 உச்சி மாநாட்டில் முக்கிய தலைவர்கள் வரவில்லையா?

Comments Off on ஜி20 உச்சி மாநாட்டில் முக்கிய தலைவர்கள் வரவில்லையா?

ஜி20 மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் எந்த வகையிலும் கலந்து கொள்ள மாட்டார் என ரஷ்யா தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு ஒவ்வொரு நாட்டில் நடைபெறும். இவ்வாண்டு இந்தியாவில் நடைபெறுகிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் (செப்டம்பர் 9, 10) டில்லியில் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பல நாட்டு தலைவர்களும் வருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாநாட்டிற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் வரமாட்டார் என சீனா […]

Continue reading …

அமெரிக்க பொருட்கள் மீதான வரி நீக்கம்!

Comments Off on அமெரிக்க பொருட்கள் மீதான வரி நீக்கம்!

அமெரிக்க பொருட்களுக்கான கூடுதல் வரியை மத்திய அரசு நீக்கியுள்ளது. உலகளவில் முக்கியமான ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு டில்லியில் நாளையும், நாளை மறுதினமும் நடைபெறவுள்ளது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட முக்கிய உலகத் தலைவர்கள் டில்லிக்கு வருகை புரிந்து வருகின்றனர். உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ள இந்த மாநாட்டிற்கு மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க பொருட்களுக்கான கூடுதல் வரியை மத்திய அரசு நீக்கியுள்ளது. பிரதமர் மோடி அமெரிக்க […]

Continue reading …

செந்தில் பாலாஜி ஜாமின் மனுவிற்கு நீதிபதி அனுமதி!

Comments Off on செந்தில் பாலாஜி ஜாமின் மனுவிற்கு நீதிபதி அனுமதி!

நீதிபதி அல்லி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கோரி மனுதாக்கல் செய்ய அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அமலாக்கத்துறை அதிகாரிகளால் கடந்த சில வாரங்களுக்கு முன் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என சென்னை முதன்மை நீதிமன்றமும், சென்னை முதன்மை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என சிறப்பு நீதிமன்றமும் தெரிவித்தது. சென்னை முதன்மை நீதிமன்றம் […]

Continue reading …

சாண்டி உம்மன் கேரள இடைத்தேர்தலில் வெற்றி

Comments Off on சாண்டி உம்மன் கேரள இடைத்தேர்தலில் வெற்றி

மறைந்த முன்னாள் முதல்வர் உம்மன் சான்டியின் மகன் கேரளாவில் புதுப்பள்ளி தொகுதிக்கு நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் 78,098 வாக்குகள் பெற்று, 36,454 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான சிபிஎம் ஆட்சி கேரள மாநிலத்தில் நடந்து வருகிறது. சமீபத்தில் அம்மாநில முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி காலமானார். அவரது மறைவையடுத்து, புதுப்பள்ளி தொகுதிக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கேரளா மட்டுமின்றி திரிபுராவில் 2 தொகுதிகள், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், உபி., ஆகிய மாநிலங்களிலும் […]

Continue reading …

இயக்குனர் வெற்றிமாறன் உதயநிதிக்கு ஆதரவு!

Comments Off on இயக்குனர் வெற்றிமாறன் உதயநிதிக்கு ஆதரவு!

சனாதன கருத்துக்கள் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இயக்குனர் வெற்றிமாறன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். அமைச்சர் உதயநிதி சமீபத்தில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய கருத்துகள் தேசியளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பக்கம் நிற்பதாக இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய […]

Continue reading …

ரூ.600 கோடி செலவில் திருப்பதியில் தங்கும் விடுதி

Comments Off on ரூ.600 கோடி செலவில் திருப்பதியில் தங்கும் விடுதி

20 ஆயிரம் பேர் தங்கும் வகையில் திருப்பதியில் 600 கோடி செலவில் மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே பல பக்தர்கள் தங்கும் வகையில் திருப்பதியில் மையம் உள்ளது.- தற்போது புதிதாக இரண்டு சத்திரங்களை இடித்துவிட்டு 600 கோடி செலவில் 20,000 பேர் தங்கும் வகையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய தங்கம் நிலையங்கள் அமைக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இவ்வாண்டு இரண்டு பிரமோற்சவங்கள் நடைபெற உள்ளது. இதற்கான பாதுகாப்பு […]

Continue reading …
Page 1 of 481123Next ›Last »