அஜீத்தின் பட டிரெயிலர் பற்றிய தகவல்!

Filed under: சினிமா |

நடிகர் அஜீத் நடிப்பில் உருவாகியுள்ள “துணிவு” திரைப்படத்தின் டிரெயிலர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

போனி கபூர் தயாரிப்பில்,- ஹெச்.வினோத்- இயக்கத்தில், நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “துணிவு.” அஜீத்துடன் இணைந்து மஞ்சு வாரியர் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். படத்தின் “சில்லா சில்லா,” “காசேதான் கடவுளடா” ஆகிய இரண்டு சிங்கில்களை தொடர்ந்து 3வது “சிங்கில் கேங்ஸ்டர்” பாடல் நேற்று வெளியாகி வைரலாகி வருகிறது. துபாயில், பாம்ஸ் தீவிற்கு மேல் ஸ்கை டைவர்ஸ்ட் அந்தரத்தில் பரந்து “துணிவு” திரைப்பட அஜீத் போஸ்டரை பறக்க விட்டு புரமோஷன் செய்தனர். வரும் டிசம்பர் 31ம் தேதி “துணிவு” பட டிரெயிலர் வெளியாகும் என்றும், இந்த டிரெயிலரை முதலில் துபாயில் உள்ள புஜ் கபீபா கட்டிடத்திலும், நியூயார்க், டைம்ஸ் கொயரிலும் திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.