அஜீத் படத்தின் பர்ஸ்ட் லுக்!

Filed under: சினிமா |

சமூக வலைதளங்களில் அஜீத்தின் “ஏகே 61” திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் இன்று வெளியாகுமென தகவல்கள் வெளியாகின.

சற்று முன் போனி கபூர் தனது டுவிட்டர் “ஏகே 61” திரைப்படத்தின் டைட்டில் “துணிவு” என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் அவர் வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டர் தற்போது இணைய தளங்களை ஸ்தம்பித்து வருகிறது. அஜீத் அட்டகாசமாக கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு சாய்ந்து படுத்திருக்கும் புகைப்படம் அஜீத் ரசிகர்களுக்கு விருந்தாக உள்ளது. எச். வினோத் இயக்கத்தில் ஜிப்ரான் இசையில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகி வருகிறது. இப்படத்தில் மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.