அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளர்?

Filed under: அரசியல் |

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாஜக பிரதமர் வேட்பாளராக போட்டியிடுபவர் பற்றிய தகவலை கூறியுள்ளார்.

பாஜக பிரதமர் மோடி தலைமையிலான இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தற்போது மழைக்கால பாராளுமன்றக் கூட்டத்தொடரில் குரல் கொடுத்து வருகிறது. வரும் 2024ம் ஆண்டு பொதுத்தேர்தலிலும் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடி என மத்திய உள்துறை அமைச்சரும் முன்னாள் பாஜக தலைவருமான அமித்ஷா கூறியுள்ளார்.

பாஜகவில் 70 வயதிற்கு மேற்பட்ட தலைவர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்படுவதில்லை.இந்நிலையில் பிரதமர் மோடிக்கு தற்போது 71 வயதாகிறது. அவரே வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளதை அக்கட்சியினர் வரவேற்றுள்ளனர்.