உடல் நலக்குறைவால் அண்ணாமலையின் பாதயாத்திரை ஒத்திவைக்கப்பட்டது. இன்று மீண்டும் தொடங்குவதாகவும், அண்ணாமலையின் 3-ம் கட்ட யாத்திரையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் “என் மண் என் மக்கள்’’ பாதயாத்திரை கடந்த ஜூலை மாதம் தொடங்கியது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமேஸ்வரத்தில் தொடங்கி வைத்த இந்த பாதயாத்திரை வெற்றிகரமாக 2 கட்டம் முடிவடைந்தது. ராமேஸ்வரம் முதல் சென்னை வரை நடைபெறும் இந்த பாதயாத்திரை பாஜகவிற்கு பெரும் வாக்குவங்கியை பெற்றுத்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.